துஷ்ட சக்திகள் நீங்க, எதிரிகளை வெல்ல இங்கு வழிபடுங்கள்

Kalabhairavar temple Tamil

சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒரு வடிவமாக இருப்பவர் கால பைரவர். இவரின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் அத்தனை தீய சக்திகளும் பொசுங்கிப்போகும். நவகிரகங்களை தன்னகத்தே கொண்டே பெருமை இவரை சாரும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கையில் இருக்கும் “ஸ்ரீ காலபைரவரின்” கோவிலை பற்றி இங்கு காண்போம்.

kaala bairavar

தல வரலாறு:

1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலை அக்காலத்தில் கிருஷ்ணகிரி பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் கட்டியதாக கோவில் தல வரலாறு கூறுகிறது. பைரவமூர்த்தி நவகிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு குரு ஆவார். மிக இயற்கையான வளங்கள் நிறைந்த பைரவ மலை மற்றும் ஆஞ்சநேய மலைகளுக்கிடையில் உள்ள பகுதியில் அமைந்துள்ள இக்கோவில். இது மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.

தல சிறப்பு:

இக்கோவிலில் ஞாயிற்று கிழமைகளில் வரும் ராகுகால நேரத்தில் பைரவருக்கு செய்யப்படும் பூஜையில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். எல்லா கோவிலிகளிலும் ஒரு பைரவர் விக்ரகம் நிறுவப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் இரண்டு பைரவமூர்த்தி திருச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த பைரவர் இந்த ஊருக்கு அருகாமையில் வசிக்கும் பல கிராம மக்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார். எனவே அவர்கள் அதிகளவில் அவ்வப்போது இங்கு வந்து வழிபடுகின்றனர்.

- Advertisement -

மது, புகையிலை மற்றும் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள் இத்தலத்தில் வந்து வணங்குவதால் அப்பழக்கத்திலிருந்து அவர்கள் விடுபடுவதாக கூறப்படுகிறது.
செய்வினை மற்றும் தீய சக்திகள் பாதிப்பு, எதிரிகளின் தொல்லை, வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் பிள்ளை பேறு போன்றவற்றிற்காக இங்கு வழிபட்டு அவை நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லைகளுக்கு அருகில் இருப்பதால் அம்மாநில மக்கள் இக்கோவிலுக்கு அதிகளவில் வந்து வழிபடுகின்றனர்.

Kalabhairavar

கோவில் அமைவிடம்:

ஸ்ரீ காலபைரவர் திருக்கோவில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருக்கும் கள்ளிகுறிக்கை என்கிற ஊரில் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் முற்பகல் 11.00 வரை மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை

கோவில் முகவரி:

ஸ்ரீ கால பைரவர் திருக்கோவில்,
கல்லுக்குறிக்கை,
கிருஷ்ணகிரி மாவட்டம் – 635002

இதையும் படிக்கலாமே:
தொழிலில் லாபம் பெறுக பரிகாரம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், கோவில் பற்றிய குறிப்புகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kalabhairava temple details in Tamil. This Kalabhairava temple located in Krishnagiri. Here we have Kalabhairava temple timings, Kalabhairava temple address in Tamil, Kalabhairava temple history in Tamil, Kalabhairava temple address in Tamil, Kalabhairava temple contact number or phone number.