- Advertisement -

மதிப்பும் மரியாதையும் உயர சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

நம்மில் பல பேருக்கு இதுபோல ஒரு கவலை மனதிற்குள்  இருக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. நான் பார்ப்பதற்கு அழகாக இல்லை, நல்ல சிவப்பு நிறமாக இல்லை, அனைவரையும் வசீகரிக்க கூடிய தோற்றத்தோடு இல்லை, நான் வெளியிடங்களுக்கு சென்றால் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனக்கான மதிப்பு கிடைப்பது இல்லை, எல்லோரும் என்னை ஒதுக்கி தான் வைக்கிறார்கள்.

என்னுடைய பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை எனக்கு கிடைக்காது. இரண்டாவது இடத்தில், மூன்றாவது இடத்தில் தான் எனக்கான மரியாதை கிடைக்கும். இதிலிருந்து எல்லாம் நான் வெளிவர வேண்டும். நானும் அந்தஸ்தில் இந்த சமுதாயத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும். சுருக்கமாக எல்லோருக்கும் புரியும் படி செல்லப் போனால் நானும் விஐபி வரிசையில் இருக்க வேண்டும். இதற்கு என்ன செய்வது.

- Advertisement -

முதலில் நிறம் பார்த்து, தரம் பார்த்து பழகுபவர்களிடம் நாம் பழகக் கூடாது. அதேபோல மரியாதை என்பது வெறும் செல்வாக்கை வைத்து மட்டும் நிர்ணயிக்கப்படுவது கிடையாது. ஒருவருக்கு மரியாதை கிடைக்கிறது என்றால் இன்றைய கலியுகத்தில் அது வெறும் பணம் காசை வைத்து மட்டும் தான். நீங்களும் இதுபோல போலியான கௌரவத்தில் போய் சிக்கிக் கொள்ளக்கூடாது.

ஆனால் வேலை செய்யும் இடத்தில் நம்முடைய திறமை வெளிப்பட வேண்டும். அந்தஸ்து உயர வேண்டும் என்றால், நம்முடைய பர்சனாலிட்டியும் ரொம்ப ரொம்ப முக்கியம். சில பேருக்கு அறிவு இருக்கும், திறமை இருக்கும். பார்ப்பதற்கு அந்த பர்சனாலிட்டி என்ற சொல்ல கூடிய முக வசீகரம் இருக்காது. இதை கொண்டு வருவது எப்படி. ஆன்மீக ரீதியாக இதற்கு ஒரு வழிபாடு உள்ளது.  வெள்ளிக்கிழமை தோறும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்பாளை நினைத்து, இந்த மந்திரத்தை சொன்னாலே போதும் நிராகரிக்கப்பட்ட இடத்தில் நீங்கள் முன்னிலையில் நிற்பீர்கள்.

- Advertisement -

பாலா திரிபுரசுந்தரி மந்திரம்

ஐம் க்லீம் சௌம் சர்வாங்க சுந்தரி தேவியை,
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை நமோ நமஹ !

வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி கொஞ்சம் சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு அம்பாளை வணங்கி இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். 48 வெள்ளிக்கிழமை இந்த மந்திரத்தை சொல்லி முடிப்பதற்குள் உங்களுடைய இமேஜ் மாறும். நீங்களும் சீக்கிரம் விஐபி ஆவீர்கள்.

- Advertisement -

மீண்டும் ஒருமுறை பதிவு செய்து கொள்கின்றோம். வெறும் அழகு அந்தஸ்து இவைகளை பார்த்து மட்டும் கொடுப்பது, மரியாதை கிடையாது. நம்முடைய திறமை, நல்ல எண்ணம், நம்முடைய குணாதிசயங்களை வைத்து தான் நமக்கான மரியாதை கிடைக்க வேண்டும் என்பதை யாரும் மறக்காதீங்க. போலியான மனிதர்களிடருந்து, கிடைக்கக்கூடிய போலியான மரியாதைக்காக ஏங்கி நம்முடைய சந்தோஷத்தை நாம் என்றுமே இழக்கக்கூடாது.

மரியாதையை கேட்டு வாங்க கூடாது முதல் விஷயம். நம்முடைய திறமையின் மூலம், நம்முடைய படிப்பின் மூலம், நாம் பிறருக்கு செய்யக்கூடிய உதவியின் மூலம், மரியாதை நமக்கு தானாக தேடி வர வேண்டும். மரியாதையை கொடுப்பது வெறும் பணம் மட்டும் கிடையாது. படிப்பு நம்முடைய தகுதி இவைகளை வளர்த்துக் கொண்டால் நமக்கான மரியாதை நம்மை தேடி வரும். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

ஆனால் இவையெல்லாம் இருந்தும் ஒரு சில பேர் ஒதுக்கப்படுவார்கள் அதற்கு காரணமே தெரியாது. இதுபோல பிரச்சனைகள் உங்களுக்கோ அல்லது உங்கள் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் ஒருவருக்கோ இருந்தால் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வாருங்கள். அம்பாள் உங்களுக்கான நல்லதை சீக்கிரம் செய்து விடுவாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -