- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசித்திரை மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -

நடக்கவே நடக்காது, என்று முடிவு செய்த ஒரு நல்ல விஷயத்தை நடத்திக் காட்டக் கூடிய சக்தி தான் வாராஹி அன்னை. இனிமேல் இந்த பிரச்சனையில் இருந்து என்னால் வெளிவரவே முடியாது, இனிமேல் என்னுடைய வாழ்க்கையே முடிந்தது, இனிமேல் என்னால் சிரிக்கவே முடியாது, இனிமேல் கடன் இல்லாமல் என்னால் வாழவே முடியாது, இப்படி உங்களால் இனிமேல் செய்ய முடியாத விஷயத்தை செய்து காட்டக்கூடிய அதிசக்தி வாய்ந்த பரிகாரமும், ஒரு மந்திரமும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வியாழக்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் சேர்ந்து இந்த சித்திரை மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி வந்திருக்கிறது. இந்த நாளில் வாராகியை வழிபாடு செய்தால் நடக்காத நல்ல காரியங்கள் கூட நடக்கும்.

- Advertisement -

17-4-2025 இன்று வியாழக்கிழமை மதியம் 1.24 மணிக்கு பஞ்சமி திதியானது பிறக்கவிருக்கிறது. நாளை 18-4-2025 வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி வரை இந்த பஞ்சமி திதி இருக்கிறது. வாராகி வழிபாடு செய்ய இரவு நேரம்தான் சிறப்பானது என்று சொல்கிறது சாஸ்திரம். ஆகவே இன்று வியாழக்கிழமை இரவு இந்த வழிபாட்டை நீங்கள் வீட்டில் மேற்கொள்ளலாம்.

முடியாதவர்கள் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம். உங்கள் வீட்டில் வாராகி சிலை, திருவுருவப்படம் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, வாராஹி அன்னையை உள்ளம் உருக நினைத்து, இந்த வழிபாட்டை மேற்கொள்ளுபவர்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு.

- Advertisement -

ஜாதிக்காய் பரிகாரம்

இன்றைய தினம் 3 ஜாதி காய்களை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் ஜாதிக்காயை போட்டு பூஜை அறையில் வைத்து விட்டு வாராகியை நினைத்து விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் ஜோதி ஸ்வருபம் தான் வாராஹி. கவலைப்படாதீங்க வாராகி வந்து பூஜை அறையில் அமர்ந்து கொள்வாள். அந்த ஜாதிக்காயை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு வாராகியின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

வராகி மந்திரம்

ஓம் ஐம் க்லௌம்
அதிசய கார்ய
சித்தி தாயை நமஹா !

- Advertisement -

வாராஹியினுடைய காரிய சித்தி மந்திரம் இது. இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது நடக்காத நல்ல காரியங்கள் கூட நடந்து விடும் என்பது நம்பிக்கை. ஜாதிக்காயை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அந்த ஜாதிக்காயை கொண்டு போய் அப்படியே பணப்பெட்டியில் வைத்தால், வீண் விரைய செலவுகள் குறையும். கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை.

வருமானமும் தானாக படிப்படியாக உயர துவங்கும். மூன்றில், இரண்டு ஜாதிக்காயை பீரோவில் வையுங்கள், ஒரே ஒரு ஜாதிக்காயை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான வேலைகளுக்கு வெளியே செல்லும்போது ஜாதிக்காயில் கொஞ்சமாக தண்ணீரோ அல்லது பன்னீரோ விட்டுக் குழைத்தால் கொஞ்சம் திலகம் கிடைக்கும். அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். வாராகி நினைத்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: 18-04-2025 நாளை வராக ஜெயந்தி

அந்த ஒரு ஜாதிக்காய் பல நாட்களுக்கு உங்களுக்கு அப்படியே வரும். அதை நீங்கள் மூன்று மாத காலத்திற்கு மேல் கூட பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது. பீரோவில் வைத்த ஜாதிக்காய்க்கு 1 வருடம் பவர் இருக்கும். அதை ஒரு வருடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். இந்த எளிமையான சூட்சம பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும். வாராஹி உங்களோடு துணை நிற்பால் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்