- Advertisement -

பாத்ரூம் கதவை சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு

நாம் குளிக்கும் போது தண்ணீர் எல்லாம் சிதறி சிதறி பாத்ரூம் கதவுக்கு பின்பக்கம் இருக்கும் இடமும் சரி, பாத்ரூமில் தரையை ஒட்டி, ஒட்டி இருக்கும் டயல்ஸும் சரி, நிறைய உப்பு கறை படிந்து விடும். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ இந்த இடத்தை எல்லாம் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் இந்த கறை நிரந்தரமாக, அடர்த்தியாகி அந்த இடத்தில் தங்கிவிடும். பார்ப்பதற்கே உங்க பாத்ரூம் அழகாக இருக்காது. இப்படிப்பட்ட கறைகளை சுத்தம் செய்வதற்கு ஒரு எளிமையான வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பாத்ரூம் கதவு சுத்தம் செய்ய டிப்ஸ்

ஒரு சின்ன பிளாஸ்டிக் கப் எடுத்துக்கோங்க. அதில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 3 டேபிள் ஸ்பூன், கல் உப்பு 1 டேபிள்ஸ்பூன், ஹேர்பிக் 3 டேபிள்ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த லிக்விடை ஒரு ஸ்பாஞ்ச் நாரில் தொட்டு கறை இருக்கும் பகுதியில் தடவி விட வேண்டும். அதாவது பாத்ரூம் கதவுக்கு பின்பக்கம் முழுவதும் இந்த லிக்விடை அப்ளை செய்யுங்கள்.

பாத்ரூமில் தரையில் உப்பு கறை இருந்தாலும் அந்த இடத்தில், இந்த லிக்விடை அப்ளை செய்யலாம். சுவரில் ஒட்டி இருக்கும் டயல்ஸிலும் இந்த லிக்விடை அப்ளை செய்து விட்டு, 15 லிருந்து 20 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து விடுங்கள். உங்க பாத்ரூம் காய்ந்து இருக்கும் போது தான் இந்த லிக்விடை அப்ளை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு ஸ்டீல் நாரை வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தாலே போதும் உங்க பாத்ரூமில் படிந்திருக்கும் உப்பு கறைகள் எல்லாம் சுலபமாக நீங்கிவிடும். இரண்டு மாதம் பாத்ரூம் டீப் கிளீனிங் செய்யவில்லை, மூன்று மாதம் கிளீன் செய்யவில்லை என்றால் இந்த டிப்ஸ் நிச்சயம் ஒர்க்கவுட் ஆகும்.

வருடகணக்காக எங்க பாத்ரூமில் உப்பு கறை படிந்து இருக்கிறது என்றால் அதை இந்த முறையில் மொத்தமாக ஒரே முறையில் சுத்தம் செய்ய முடியாது. ஆனால் வாரத்தில் ஒரு நாள் இந்த லிக்விடை வைத்து உங்கள் பாத்ரூமில் சுத்தம் செய்யத் தொடங்குங்கள், மூன்றிலிருந்து ஐந்து வாரம் இந்த முறைப்படி உங்களுடைய பாத்ரூமை சுத்தம் செய்தால் உங்க பாத்ரூமில் நீண்ட நாள் படித்திருக்கும் உப்பு கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி தொடங்கி விடும்.

- Advertisement -

தினமும் சுத்த செய்ய சொல்லவில்லை வாரத்தில் ஒரு நாள் என்ற வீதத்தில், தொடர்ந்து ஐந்து வாரங்கள் உங்கள் பாத்ரூமில் இப்படி சுத்தம் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். பாத்ரூமில் இந்த லிக்விடை வைத்து சுத்தம் செய்து விட்டீர்கள்.

இதையும் படிக்கலாமே: பானைத் தண்ணீர் ஜில்லுனு இருக்க சில டிப்ஸ்

அந்த இடம் சுத்தமாக காய்ந்த பிறகு கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை தொட்டு சுத்தம் செய்த இடத்தில் எல்லாம் தடவி விட்டால், மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் அதிகமாக உப்பு கறை படியாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இல்லத்தரசிகளுக்கு இந்த எளிமையான வீட்டு குறிப்பு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -