பானைத் தண்ணீர் ஜில்லுனு இருக்க சில டிப்ஸ்

paanai
- Advertisement -

இப்போது கடுமையான வெயிலின் தாக்கம் எல்லா இடத்திலும் இருக்கிறது. பிரிட்ஜில் தண்ணீர் வைத்து குடிப்பதை விட, இந்த மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. சொல்லப்போனால் பிரிட்ஜ் தண்ணீரை அறவே தவிர்ப்பது நல்லது.

நீங்க இந்த வெயில் காலத்துக்கு புதுசாக பானை வாங்கினாலும் சரி, அல்லது போன வருடம் வாங்கிய பழைய பானையாக இருந்தாலும் சரி அந்த பானையில் தண்ணீரை ஜில்லுனு வைக்க ஒரு சில வீட்டு குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

பானை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

முதலில் செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை மண் பானை வாங்க கூடாது என்று சொல்லுவார்கள். மண் பானை வாங்கும் போது ஒற்றை பானையாக வாங்க கூடாது. அந்த மண்பானைக்கு மேலே மூடி சேர்த்து வாங்கலாம். அப்படி இல்லை என்றால் சின்னதாக தயிர் உரை போடும் குட்டி பானை அல்லது வேறு ஏதாவது மண் பாண்டங்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

மண்பானையை வாங்கும்போதே அதை தட்டி பார்த்து வாங்க வேண்டும். அதில் ஏதாவது விரிசல் இருந்தால் அதன் சத்தமே நமக்கு காட்டிக் கொடுத்து விடும். உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் அந்த பானையில் தண்ணீர் ஊற்றி பார்த்து வாங்குங்கள். விரிசல் இருக்கும் பானையில் தண்ணீரை ஊற்றும் போது சலசலன்னு கீழே கொட்டும் அதை வைத்தே நீங்கள் கண்டுபிடித்த விடலாம்.

- Advertisement -

வாங்கிய புது பானையை எப்படி பழகுவது

புது மண் பானையை தேங்காய் நாரை போட்டு உள்பக்கம் வெளிப்பக்கம் நன்றாக தேய்த்து கழுவி விட வேண்டும். எப்போதுமே மண் பானையை சோப்பு போட்டோ அல்லது வேறு ஏதாவது கெமிக்கல் பவுடர் போட்டு தேய்த்து கழுவக்கூடாது. தேவைப்பட்டால் எலுமிச்சம் பழத்தோலை வைத்து கூட தேய்க்கலாம். சிங்கில் கழுவும் போது பானையை இந்த பக்கம் அந்த பக்கம் இடித்தால் விரிசல் விடும் ஜாக்கிரதையாக கழுவுங்கள்.

இந்த பானையை விட அகலமான பெரிய பாத்திரம் ஒன்று எடுத்து, அதில் தண்ணீரை நிரப்பி, இந்த பானையை அதன் உள்ளே இறக்கி, பானைக்கு உள்ளேயும் தண்ணீரை ஊற்றி, ஒரு நாள் முழுவதும் அப்படியே ஊற வைக்க வேண்டும். மறுநாள் அந்த பானையை எடுத்து வெறும் தேங்காய் நாரை போட்டு தேய்த்து கழுவி குடிக்கின்ற நீரை, முதல் நாள் இரவே பானை நிரம்ப ஊற்றி வைத்து விட்டால், மறுநாள் காலை ஜில்லுனு சூப்பரான தண்ணீர் தயார். தேவை என்றால் ஒரு வெள்ளை துணியில் வெட்டிவேர் போட்டு கட்டி அந்த வெட்டிவேரை இந்த பானை தண்ணீரில் போட்டு குடிப்பது உடலுக்கு ரொம்ப ரொம்ப குளிர்ச்சியை தரும்.

- Advertisement -

பழைய பானையை மீண்டும் பயன்படுத்துவது எப்படி?

சரிங்க. எங்க வீட்ல போன வருடம் வாங்கிய பழைய பானை தான் இருக்கிறது. ஆனால் அந்த மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்தால் ஜில்லுனு ஆகவில்லை என்ன செய்யலாம். அந்த மண்பானைக்கு உள்ளே கொஞ்சமாக கல் உப்பை தூவி, அந்த கல்லுப்பைக் கொண்டு மண் பானைக்கு உள்பக்கமும் மேல் பக்கமும் தேய்த்து கழுவ வேண்டும்.

கடந்த வருடம் முழுவதும் அந்தப் பானையில் தண்ணீரை ஊற்றி ஊற்றி, தண்ணீரில் இருக்கக்கூடியதூசிகள் எல்லாம் அந்தப் பானையின் ஓட்டையை அடைத்திருக்கும். அதனால் பானை தண்ணீர் ஜில்லுனு ஆகாமல் இருக்கும். கல் உப்பை வைத்து தேய்க்கும் போது அந்த ஓட்டைகள் எல்லாம் திறக்கப்படும். பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவி விட்டு அந்தப் பானையிலேயே, தண்ணீர் ஊற்றி வைத்து குடிக்கும் போது, புது பானையில் தண்ணீர் ஊற்றி குடிப்பது போல, தண்ணீர் ஜில்லுனு இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

எப்போதுமே பானையை ஈரமான மண்ணுக்கு மேலே வைக்கும் போது அந்த பானை தண்ணீர் எப்போதும் ஜில்லுனு இருக்கும். ஒரு திக்கான காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து லேசாக பிழிந்து, அந்தப் பானையை சுற்றி அப்படியே கவர் செய்தது போல மூடி வையுங்கள். இப்படி செய்தால் குளிர்ச்சியான தண்ணீர் உங்க வீட்டு பானையில் எப்போதும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இல்லத்தரசிகளுக்கு பயன்படும் 5 வீட்டு குறிப்புகள்.

அதேபோல உங்க வீட்டில் பானையில் தண்ணீர் குறைய குறைய அது நிரம்பும் அளவுக்கு ஊற்றி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பானையில் தண்ணீர் நிரம்ப இருக்கும்போது, அதனுடைய குளிர்ச்சி தன்மை இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதுவரை பானையை பயன்படுத்தாதவர்கள், பானையை பயன்படுத்துவதில் சந்தேகம் உள்ளவர்களுக்கு, இந்த பயனுள்ள குறிப்புகள் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -