- Advertisement -
- Advertisement -

இன்று நாம் பார்க்கப் போவது பீம பைரவரை பற்றிய ஒரு மந்திரம்தான். அஷ்ட பைரவரில் இவரும் ஒருவர். அஷ்டபைரவர் என்றால், பைரவருக்கு 8 அவதாரம். அஷ்ட பைரவர்களில் 7வது அவதாரம் இந்த பீம பைரவர். இவரே பீஷண பைரவர் என்றும் சொல்லுவார்கள். இவருடைய வாகனம் சிங்கம். வாரணாசியில் பீம சண்டி சன்னிதானத்தில், இந்த பீம பைரவரை நாம் காணலாம்.

நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களை எல்லாம் இந்த பீம பைரவர் சிங்க அவதாரம் எடுத்து வந்து அழிப்பார் என்பது இந்து மதத்தில் இருக்கக்கூடிய நம்பிக்கை. நவகிரகங்களில் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த பைரவரை மனதார நினைத்து வழிபாடு செய்தாலே போதும். கேதுவால் உண்டாகப்படும் பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை. உங்களுக்கு கேதுவால் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் இன்று நீங்கள் கட்டாயம் இந்த பைரவரை ஒரு முறை வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

பீஷண பைரவர் மந்திரம்

உங்கள் வாழ்வில் என்ன துன்பத்திலிருந்து உங்களால் விடுபட முடியவில்லை? அந்தத் துன்பம் உங்களை விட்டு நீங்க வேண்டும் என்று இன்று நீங்கள் இந்த பீம பைரவரை மனதார நினைத்து வழிபாடு செய்யலாம். தீராத கடன் தீர, தீராத எதிரி தொல்லை தீர, ஏவல் பில்லி சூனியம் விலக, எதிரி தொல்லை விலக, இந்த பைரவரை நினைத்து வழிபாடு செய்யலாம்.

முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் பைரவர் சன்னிதானத்திற்கு சென்று இரண்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அந்த கோவிலில் அமர்த்தி இந்த மந்திரத்தை 308 முறை சொல்லுங்கள். முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கு ஏற்றி பைரவரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 308 முறை சொல்லலாம்.

- Advertisement -

இந்த மந்திரத்தை இன்று தேய்பிறை அஷ்டமி அன்று சொன்னால் அவ்வளவு சக்தி உங்களுக்குள் வந்துவிடும். உங்களுக்குள் சிங்கத்தின் மன தைரியம் வரும் என்றால் சொன்னா கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பிரகலாதன் அழைத்த போது, நரசிம்மர் அவதாரம் எடுத்து வந்து, அரக்கனை வதம் செய்தார். அதேபோல தான் இன்று நீங்கள் இந்த பைரவரை கூப்பிட்டால் உங்களுடைய பிரச்சினைகளை வதம் செய்ய அந்த பைரவரே சிங்கத்தின் மீது வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார். இன்று நீங்கள் சொல்ல வேண்டிய பீம பைரவர் மந்திரம் இதுதான்.

மந்திரம்

ஓம் க்லீம் பீஷண பைரவா பாதம் சரணம் சரணம் !

- Advertisement -

எளிமையான தமிழ் வார்த்தைகளைக் கொண்ட இந்த மந்திரத்தை இன்றைய தினம் உச்சரிக்க தவறாதீர்கள். தீரா துன்பங்கள் உங்களை விட்டு விலக இதுபோல உக்கர தெய்வங்களை, அதற்கு உகந்த நாட்களில் வழிபாடு செய்வது ரொம்பவும் நல்லது. யாராவது உங்களுடைய வாழ்க்கையை கெடுக்க நினைக்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: 22-03-2025 சனி மஹா தேய்பிறை அஷ்டமி

ஏவல் பில்லி சூனியம் வைத்து உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விட்டார்கள். பணத்தை ஏமாற்றி விட்டார்கள் என்றால் இன்றைய தினம் நீங்கள் இந்த பைரவரை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -