- Advertisement -
- Advertisement -

பொதுவாக நம்முடைய வீட்டில் ஏதாவது தீமைகள் நடைபெறப் போகிறது என்றால் அதற்கு முன்பாகவே சில சகுனங்களால் நமக்கு தெய்வங்கள் உணர்த்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. அவற்றுள் குறிப்பாக கண்ணாடி உடைதல், எண்ணெய் கொட்டுதல், குங்குமம் கீழே சிதறுதல் இப்படி சில சகுனங்களை அபசகுணங்கள் என்று கூறுவோம்.

இப்படி ஏதாவது ஒரு நிகழ்வு நம் வீட்டில் நடந்து விட்டால் என்ன தீமை நடைபெறப் போகிறதோ என்ற பயத்திற்கு ஆளாகி மன சஞ்சலத்துடன் இருப்போம். அப்படி இருக்கும் போது கால பைரவரை நினைத்து எந்த பரிகாரத்தை செய்தால் நம்முடைய சஞ்சலங்கள் நீங்கும் என்றும் தீமைகள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

அபசகுணங்கள் நீங்க பரிகாரம்

காக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவர். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் கோவிலை பூட்டிவிட்டு அதன் சாவியை எடுத்து காலபைரவரின் சன்னதியில் கால பைரவரின் பாதத்தில் வைத்து விட்டு செல்வார்களாம். அப்படி செல்லும் பொழுது திருடர்களோ அல்லது அந்த கோவில் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ யாராவது சாவியை தொட நினைத்தால் அவர்களால் தொட முடியாத அளவிற்கு காலபைரவர் அந்த சாவியை பாதுகாத்து அவர்களுக்கு தக்க தண்டனையும் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

அதனால் தான் தீயவற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் காவல் தெய்வமாக காலபைரவர் திகழ்கிறார். இன்றளவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஒரு வழிமுறை பின்பற்றப்பட்டு தான் வருகிறது. சிறிது நேரம் காலபைரவரின் சன்னதியில் சாவியை வைத்துவிட்டு பிறகு தான் எடுத்துச் செல்வார்களாம்.

- Advertisement -

அப்படிப்பட்ட கால பைரவர் நமக்கு ஏற்படக்கூடிய தீமைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றுவார். அதற்கு செய்யக் கூடிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நமக்கு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியும் மஞ்சளும் இருந்தால் போதும். மஞ்சளில் சிறிது பன்னீரை ஊற்றி நன்றாக குழைத்து அதில் பச்சரிசியை போட்டு கலந்து அட்சதையாக தயார் செய்து வைத்துக். கொள்ளுங்கள்.

இந்த அட்சதியை நம்முடைய வீட்டு வாசலில் இரண்டு புறங்களிலும் “ஓம் காலபைரவரை போற்றி” என்று காலபைரவரை மனதார நினைத்துக் கொண்டு வைக்க வேண்டும். இதே போல் நம்முடைய வீட்டு நிலை வாசலிலும் காலபைரவரை போற்றி என்று பைரவரை நினைத்து இரண்டு புறமும் வைக்க வேண்டும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் ஒரு கலச செம்பில் சுத்தமான தண்ணீரை எடுத்து அதில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து கலந்து துளசி இலைகளை வைத்து வீடு முழுவதும் இந்த தண்ணீரை பைரவரின் மந்திரத்தை கூறியவாறு தெளிக்க வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய தீமைகளில் இருந்து காலபைரவர் நம்மை பாதுகாத்து நமக்கு காவலாக வீற்றிருப்பார்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீட்டிற்கு வர ஆடி 1ஆம் தேதி செய்ய வேண்டிய வழிபாடு

இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இந்த பரிகாரத்தை செய்து நமக்கு ஏற்படக்கூடிய தீமைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

- Advertisement -