ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதம் ஆனது குலதெய்வ வழிபாட்டிற்கும் மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாகவே திகழக்கிறது. அந்த ஆடி மாதத்தில் ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி செல்ல இயலாதவர்கள் தங்களுடைய வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஆடி 1ஆம் தேதி செய்யக்கூடிய குலதெய்வ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குலதெய்வம் வழிபாடு
குலதெய்வ வழிபாடு என்பது சாதாரண வழிபாடு கிடையாது. குலதெய்வத்தை எந்த அளவிற்கு நாம் நினைத்து வழிபாடு செய்கிறோமோ அந்த அளவிற்கு குலதெய்வத்தின் அருள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற தெய்வங்களின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் தான் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும். நன்மைகள் உண்டாகும். அப்படி குலதெய்வத்தின் அருளைப் பெறுவதற்கு செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டை பார்ப்போம்.
இந்த வழிபாட்டை ஆடி 1ஆம் தேதி பிரம்ம முகூர்த்த வேளையிலேயே செய்துவிட வேண்டும். பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஆடி மாதம் என்றால் அம்மனுக்குரிய மாதம் அம்மன் என்றால் வேப்பிலை இல்லாமல் இருக்குமா? வேப்பிலையை பறித்து வந்து வீட்டு நிலை வாசலிலும் பூஜை அறை வாசலிலும் வைக்க வேண்டும்.
கண்டிப்பாக முறையில் ஆடி 1ஆம் தேதி நிலைவாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். நம்முடைய குலதெய்வமானது நம் வீட்டு நிலை வாசலில் தான் குடியிருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நாம் குலதெய்வ வழிபாட்டை நிலை வாசலில் இருந்து தான் செய்ய வேண்டும். நிலைவாசலின் இரண்டு புறங்களிலும் சிறிய தட்டை வைத்து அதில் வேப்பிலையை உருவி போட்டு அதற்கு மேல் சிறிய அகல் விளக்கை வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு ஒரு சிறிய செம்பை எடுத்துக் கொண்டு அதை சுத்தம் செய்த அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்த அது நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்து எடுத்து வந்து நிலை வாசலில் வைத்து விட்டு அதில் சிறிது மஞ்சள் தூள், சிறிது குங்குமம், சிறிது வேப்பிலை, ஒரு எலுமிச்சம் பழம், ஒரு ஒரு ரூபாய் நாணயம் இவற்றை போட வேண்டும். இவ்வாறு போட்டு முடித்த பிறகு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 108 முறை கூறி வீட்டிற்குள் வரவேண்டும் என்று அழைக்க வேண்டும். உதாரணமாக மாரி அம்மன் என்று இருந்தால் மாரியம்மனே வருக வருக என்று கூறவேண்டும்.
இப்படி 108 முறை கூறிவிட்டு அந்த செம்பை உங்களுடைய இரண்டு கைகளாலும் எடுத்து பயபக்தியுடன் வீட்டிற்குள் வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். இந்த செம்பில்தான் குலதெய்வம் வீற்றிருக்கிறார் என்று பொருள்படுகிறது. பிறகு குலதெய்வத்திற்கென்று ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக படைத்து உங்களுடைய வழிபாட்டை நீங்கள் நிறைவு செய்து கொள்ளலாம்.
மறுநாள் காலையில் இந்த செம்பில் இருக்கக்கூடிய தண்ணீரை வீடு முழுவதும் ஒரு இடம் விடாமல் பாத்ரூம் முதற்கொண்டு தெளிக்க வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை செடிகளில் ஊற்றி விட வேண்டும். இதற்குள் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை பூஜையறையில் வைத்து விடுங்கள். ஒரு ரூபாயை பணம் சேமித்து வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்க வாங்க வேண்டிய பொருட்கள்
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை ஆடி 1ஆம் தேதி செய்பவர்களுடைய வீட்டில் குலதெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக ஏற்பட்டு சீரும் சிறப்புடன் நலமுடனும் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.