
எந்த ஒரு மனிதனும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடனும் பிறர் போற்றும் வகையில் நல்ல பேரும் புகழும் பெற்று செல்வ செழிப்புடன் வாழவே ஆசைப்படுவான். அப்படி வாழ வேண்டும் என்றால் அதற்கு இந்த அம்பிகையை வணங்கினால் அனைத்தும் சாத்தியமாகும் என்று சரித்திரங்கள் சொல்கிறது. அது எந்த அம்பிகை, எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
பேர் புகழ் செல்வம் அனைத்தையும் ஒரு சேர அடைய நாம் வணங்க வேண்டிய தெய்வம் புவனேஸ்வரி தாயார். புவி துவங்கிய நாள் முதலே தோன்றியதால் தான் அம்பிகைக்கு இந்த பெயர் உருவானது என்று ஐதீகம் உண்டு. அத்தகைய சக்தி கொண்ட அற்புதமான இந்த அன்னையை வணங்கும் போது நமக்கான இத்தனையும் கிடைக்கும்.
செல்வம் பேர் புகழ் அந்தஸ்து அதிகரிக்க புவனேஸ்வரி தாயார் வழிபாடு
இந்த அம்பிகையின் கையில் அங்குசம் இருக்கும். இந்த அங்குசமானது ஆளுமையின் அம்சத்தை குறிக்கும். அதே போல் இந்த அங்குசமானது அடக்குவதற்கு பயன் படக்கூடிய பொருள். ஆகையால் அனைத்து இடங்களிலும் ஆளுமை திறனுடனும் பெரிய அந்தஸ்துடனும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அங்குசத்தை தனியாக வாங்கி வழிபடலாம் அல்லது அது போன்றதொரு முத்திரையை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் ஆளுமை திறனுடன் இருக்கலாம்.
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் அவர்கள் கல்வித்திறன் மேம்படவும் இந்த அன்னையை வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம். இந்த வழிபாட்டிற்கு புவனேஸ்வரி தாயாரின் திரு உருவப்படம் ஒன்றை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல தரமான பசு நெய்யில் வல்லாரை கீரையை சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு அந்த கீரையை புவனேஸ்வரி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து வழிபட்ட பிறகு அதை உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் கல்வித்திறன் மேம்படும்.
செல்வம் சேர அம்பிகை வழிபாடு
இந்த வழிபாட்டிற்கு இரண்டு பித்தளை கிண்ணங்களை வாங்கிக் கொள்ளுங்கள். இது மிகச் சிறிய அளவில் இருந்தாலே போதும். தினமும் இந்த அன்னைக்கு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் தேனும், ஒரு கிண்ணத்தில் வெற்றிலை வைக்க வேண்டும். இந்த வெற்றிலையின் முனையானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அந்த வெற்றிலையின் மேல் இரண்டு பச்சை கற்பூரத்தை வைத்து பூஜை அறையில் அப்படியே வைத்து விடுங்கள். தேனை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நெய்வேத்தியமாக கொடுத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை ஹனுமன் கோவிலுக்கு இந்த பொருளை தானம் செய்தால், பிடிக்காத வேலை கூட பிடிக்கும். வராத சம்பளம் கூட கை நிறைய வரும்.
பச்சை கற்பூரம் ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறு நாள் பச்சை கற்பூரத்தை எடுத்து கால் படாத இடம் அல்லது ஓடையில் போட்டு விடலாம். பச்சை கற்பூரத்தை தூக்கி போடும் முன்பு உங்களை திருஷ்டி சுற்றுவது போல் சுற்றிக் போடும் போது அனைத்து கெட்ட சக்திகளும் உங்களை விட்டு நீங்கி விடும். வெற்றிலையை செடிகளுக்கு போட்டு விடுங்கள். இப்படி தினமும் இந்த அம்பிகையை வழிபட்டு வர உங்களுக்கு செல்வம் பேர் புகழ் அந்தஸ்து ஞானம் என அனைத்து கிடைத்து நல்ல நிலையில் வாழும் அருளை பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.