செவ்வாய்க்கிழமை ஹனுமன் கோவிலுக்கு இந்த பொருளை தானம் செய்தால், பிடிக்காத வேலை கூட பிடிக்கும். வராத சம்பளம் கூட கை நிறைய வரும்.

hanuman
- Advertisement -

அக்கரைக்கு இக்கரை பச்சைங்க. அவ்வளவுதான். இந்த வேலை சரியில்லை என்று படாத பாடுபட்டு இன்னொரு வேலையை தேடி போவோம். ஆனால் அந்த வேலை இதைவிட மோசமாக இருக்கும். ஏற்கனவே பார்த்து இருந்த வேலையே எவ்வளவோ தேவையாம் என்ற அளவுக்கு கொடுமை நடக்கும். இப்படி வேலையை மாற்றிக் கொண்டே செல்லாமல் இருக்கின்ற வேலையை எப்படி நமக்கு பிடித்தமான வேலையாக மாற்றிக் கொள்வது என்று யோசிப்பது இந்த காலத்தில் புத்திசாலித்தனம். நீங்கள் புத்திசாலியாக இருக்க விரும்புகிறீர்களா.

நீங்கள் செய்யும் வேலையில் என்ன உங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது என்பதை முதலில் பாருங்கள். அதை சரி செய்வதற்கான ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுங்கள். செய்யும் வேலையை கஷ்டப்படாமல் செய்வதற்கு உண்டான தீர்வு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். இப்படி செய்கின்ற வேலையில் ஏராளமான பிரச்சனை, குடைச்சல் இருக்கிறது என்றால் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு கூடவே சேர்த்து ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தையும் செய்யலாம். அனுமன் உங்களுக்கு வேலையில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துக் கொடுப்பார். அது என்ன பரிகாரம் பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

வருமானம் பெருக அனுமன் வழிபாடு:
வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை வந்தால் ஹனுமன் கோவிலுக்கு செல்லுங்கள். அனுமனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த லட்டு, அனுமனுக்கு லட்டு பிடிக்குமா. ஆமாங்க அனுமனுக்கு லட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பூந்தி லட்டு வாங்கிக் கொண்டு போய் அனுமனின் பாதங்களில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, அந்த லட்டுவை வாங்கி கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம். பெரியவர்கள் முதியவர்கள் யாருக்கு வேண்டும் என்றாலும் இந்த லட்டுவை தானமாக கொடுக்கலாம்.

வாரம் தோறும் இதை செய்து வந்தாலே உங்கள் வேலையில் இருக்கும் பிரச்சனை படிப்படியாக குறையும். அதுமட்டுமில்லை சொந்த தொழிலில் பிரச்சனை என்பவர்களும் இதே போல லட்டு தானத்தை செய்தால் தொழிலில் நல்லபடியாக முன்னேற்றம் அடையலாம். நிறைய லாபத்தை பார்க்கலாம்.

- Advertisement -

சில பேருக்கு ஆரோக்கிய பிரச்சனை. என்னதான் உழைக்க வேண்டும் என்று நினைத்தாலும் உடம்பு ஒத்துழைக்காது. ஏதாவது ஒரு மருந்து செலவு வந்து கொண்டே இருக்கும். நீங்கள் செவ்வாய்க்கிழமை ஹனுமன் கோவிலுக்கு தேங்காய் தானமாக கொடுக்க வேண்டும்‌ மூன்று தேங்காய்களை வாங்கி அனுமன் கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு தானமாக கொடுக்கலாம் அல்லது அங்கே இருக்கும் ஏழை எளியவர்களுக்கு சமைப்பதற்கு மூன்று தேங்காயை வாங்கி தானமாக கொடுக்கலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: கடன் என்னும் கடலில் சிக்கித் தவிப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லையே இல்லாமல் வாழ முருகப்பெருமானை இந்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் போதும்.

சில பேருக்கு ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷத்தால் திருமணமே நடக்காது. அப்படிப்பட்டவர்கள் சனிக்கிழமை துவரம் பருப்பை வாங்கி ஹனுமன் கோவிலுக்கு தானமாக கொடுத்தால், கூடிய சீக்கிரத்தில் தோஷம் விலகி திருமணம் நல்லபடியாக நடக்கும். அது மட்டுமல்ல அனுமன் கோவிலுக்கு வாரம்தோறும் செவ்வாய் கிழமை சென்று வழிபாடு செய்தால் கணவன் மனைவி ஒற்றுமை கூட பலப்படும். பிரிந்த ராமனையும் சீதையையும் ஒன்று சேர்க்க கஷ்டப்பட்டவர் தான் அனுமன் அல்லவா. ஆகவே பிரிந்த தம்பதிகளையும் ஒன்று சேர்த்து வைக்கும் சக்தி இந்த ஹனுமன் வழிபாட்டிற்கு உண்டு. செவ்வாய்க்கிழமை ஹனுமன் வழிபாட்டை செய்து பாருங்கள் வாழ்வில் மேலும் மேலும் முன்னேற்றம் பெறுவீர்கள் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -