
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களையும் தடைகளையும் உடனடியாக தீர்க்கக்கூடிய கடவுள்கள் என்றால் அந்த பட்டியலில் இவர்கள் இரண்டு பேருக்கு முதலிடம். இவர்களிடம் நீங்கள் எந்த பிரச்சினையை சொன்னாலும், அதை உடனடியாக தீர்த்து வைப்பார்கள். அவர்கள் யார் தெரியுமா. ஹனுமன், நந்தி தேவர். இன்று போகிப் பண்டிகை.
மார்கழி மாதம் முடிவடைகிறது. இந்த நாளோடு நம்முடைய வாழ்க்கையை பிடித்த தரித்திரமும் விலக வேண்டும். தை 1ஆம் தேதி பிறக்கும் போது, நம்மை பிடித்த கண் திருஷ்டி எல்லாம் விலகி, நம்மை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியெல்லாம் வெடித்து சிதறி, தைப்பொங்கல் அன்று ஒரு புது வாழ்விற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றால், போகி பண்டிகை அன்று நீங்கள் இவர்கள் கோவிலில் காலடியை எடுத்து வைக்க வேண்டும்.
ஏதாவது ஒரு கோவில் உங்கள் வீட்டு பக்கத்தில் அனுமன் கோவில் இருந்தாலும் சரி, சிவன் கோவிலில் இருந்தாலும் சரி, அந்த கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஹனுமன் கோவிலுக்கு சென்றால் அனுமனுக்கு பிடித்த வெண்ணெய் வாங்கி சாத்தலாம். செந்தூரம் வாங்கி சென்று அனுமன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து அதை வீட்டிற்கு கொண்டு வந்து தினம்தோறும் நெற்றியில் வைத்து, உங்களுடைய வேலைகளை துவங்க, காரிய தடைகள் ஆனது நீங்கும்.
ராமன் போரில் வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஹனுமான் தான். ஹனுமனை வேண்டி, ஹனுமனை பிரார்த்தித்து, நீங்கள் என்ன முயற்சிகளை மேற்கொண்டாலும் அது உங்களுக்கு வெற்றியைத் தரும். இந்த போகி தினத்தில் முடிந்தால் ஹனுமன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
நந்தி தேவர். சிவன் காதில் நீங்கள் எதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை எல்லாம் இந்த நந்தி தேவரின் காதுகளில் சொல்லுங்கள். உங்கள் வேண்டுதலை எல்லாம் நந்தி தேவர் அப்படியே கொண்டு போய் சிவபெருமான் காதில் சொல்லிவிடுவார். போகி பண்டிகை அன்று சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். நந்தி தேவரின் காதில் உங்களுடைய வேண்டுதலை மூன்று முறை சொல்லுங்கள். நந்தி தேவருக்கு அருகம்புல் வாங்கிக் கொண்டு போய் மாலையாக சாத்துங்கள்.
இதையும் படிக்கலாமே: போகிப் பண்டிகை அன்று வாங்க வேண்டிய 5 மங்களப் பொருட்கள்
பிறகு பாருங்கள் நீங்கள் வைத்த வேண்டுதலானது எவ்வளவு சீக்கிரத்தில் பலிக்கிறது என்று. மேலே சொன்ன இந்த இரண்டு எளிமையான வழிபாட்டையும் எந்த நேரத்தில் எந்த நாளில், செய்தாலும் தவறு கிடையாது. ஆனால் நாளைய தினம் போகிப் பண்டிகை. மார்கழி மாதம் நிறைவடைய கூடிய நாளில், இந்த வழிபாட்டை செய்வது உங்களுக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.