நாளைய தினம் மார்கழி 29. மார்கழி மாதம் நிறைவு அடையக்கூடிய இந்த நாளை தான், போகிப் பண்டிகையாக கொண்டாடுகின்றோம். அது மட்டுமல்லாமல் இந்த நாளில் திருவாதிரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இருக்கிறது. அம்பாளுக்கு, மகாலட்சுமிக்கு, நடராஜருக்கு, மாரியம்மனுக்கு உகந்த இந்த நன் நாளில் நாம் செய்யக்கூடிய விஷயங்கள் நம் வீட்டுக்கு சுபிட்சத்தை கொடுக்கும். எல்லோருடைய வேண்டுதலும் இப்போது என்னவாக இருக்கிறது. பணம் வேண்டும்.
கடன் சுமை குறைய வேண்டும். வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைக்க வேண்டும். வறுமை விலக வேண்டும். நிறைய பணம் சேர வேண்டும் என்றுதான் பிரார்த்தனைகளை செய்கின்றோம். இன்று ஓடி ஓடி உழைக்கின்றோம். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம். இருப்பினும் அந்த முயற்சிகளில் தோல்வி வருமானத்தில் தடை, இதை தகர்க்க ஏதாவது வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் கைகொடுக்கும். வரும் போகி பண்டிகை அன்று இந்த 5 பொருட்களை வாங்கினால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவால் என்பது ஐதீகம்.
போகி அன்று வாங்க வேண்டிய ஐந்து பொருட்கள்
எதற்காக இந்த தேவையில்லாத செலவு. இதையெல்லாம் வாங்கி நாம் என்ன செய்யப் போகின்றோம் என்று சில பேர் சிந்திக்கலாம். இந்த பொங்கல் பண்டிகையில் மட்டும், தாங்கள் அறுவடை செய்த பொருட்களை விற்று, பணம் சம்பாதிக்க கூடிய உழவர்களுக்கு ஒரு நன்றி கடன் செலுத்தும் வகையிலாவது நாம் இதை வாங்க வேண்டும்.
இந்த விழா காலங்களில் நாம் செய்யக்கூடிய செலவுகள் நமக்கு இரட்டிப்பு மடங்காக திரும்பவும் கிடைக்கும். இதை சுப செலவு என்று சொல்லலாம். சிக்கனப்படுத்தி ஒரு துண்டு கரும்பு வாங்குவது, ஒரு துண்டு மா இஞ்சி வாங்குவது, மஞ்சள் கொத்து பேரம் பேசுவது, போன்ற தவறை செய்யாதீங்க. மனநிறைவுடன் முடிந்தவரை பேரம் பேசாமல் தேவையான அளவு கரும்பு மஞ்சள் கொத்து, காய்கறிகள் இவைகளை எல்லாம் நிறைவாக வாங்கி இறைவனுக்கு வைத்து வழிபாடு செய்யுங்கள்.
உங்களுக்கு தேவைக்கு அதிகமாக இருந்தால் தேவைப்படுபவர்களுக்கு அந்த பொருட்களை தானம் செய்யுங்கள் தவறு கிடையாது. நாம் அடுத்தவர்களுக்கு நல்லது செய்யும்போது நமக்கான நல்லதை அந்த கடவுள் செய்து கொடுப்பார் அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.
சரி, நாளை அப்படி என்னென்ன அந்த ஐந்து பொருட்கள் வாங்க வேண்டும். நம் வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய ஐந்து பொருட்கள் தான். கல் உப்பு, கல்கண்டு, மஞ்சள் கிழங்கு, (மஞ்சள் கொத்து), நெய், இந்த ஐந்து பொருட்கள் தான். இந்த பொருட்களை எல்லாம் நாம் சமையலுக்கு பயன்படுத்த போகின்றோம். மா இஞ்சியை வைத்து பொங்கலுக்கு வழிபாட்டை மேற்கொள்வோம்.
சர்க்கரை பொங்கல் சமைக்க நெய் பயன்படுத்துவோம். கல்கண்டு போட்டு கூட சர்க்கரைப் பொங்கல் செய்யலாம். மஞ்சள் அரைத்து சுவாமி படத்திற்கு வைக்கலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் முகத்தில் பூசிக்கொள்ளலாம் சமையலுக்கும் பயன்படுத்தலாம். இப்படி பல வகையான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த ஐந்து பொருட்களை போகி தினத்தன்று அதாவது 13-1-2025 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் வாங்குவது சிறப்பான பலனை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: திருவாதிரை விரதம் இருக்கும் முறை
ஐந்து பொருட்களும் உங்களால் வாங்க முடியாது என்றால் இதிலிருந்து ஏதாவது ஒரு பொருளை ஆவது பணம் கொடுத்து வாங்குங்கள். நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு நல்லதே நடக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் அனைவருக்கும் போகிப் பண்டிகை மற்றும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.