- Advertisement -

வெற்றி தரும் பிரம்ம முகூர்த்த விளக்கு

- Advertisement -

வெற்றிகளை தன் பக்கம் குவித்து, வாழ்க்கையில் வெற்றி காண வேண்டுமென்றால், ஒரு மனிதன் செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடு பிரம்ம முகூர்த்த வழிபாடு. ஒரு மனிதனுக்கு இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், செய்யும் வேலையாக இருந்தாலும், செய்யும் தொழிலாக இருந்தாலும் அதில் நல்ல வருமானம் இருக்க வேண்டும், கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும், ஆரோக்கியமான வாழ்வு தேவை, மருந்து மாத்திரை சாப்பிடாமல் நல்லதொரு ஆரோக்கியமான வாழ்க்கை தேவை.

இதையெல்லாம் ஒரு சேர கடவுள் நமக்கு கொடுத்து விட்டால் போதும். நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி விடலாம். மேலே சொன்ன விஷயங்களில் ஒரு சில பேருக்கு ஒரு சில விஷயங்கள் நல்லபடியாக கிடைத்திருக்கும். ஒரு சில விஷயங்கள் என்னதான் செய்தாலும் கிடைக்கவே கிடைக்காது. அப்படி உங்களுடைய வாழ்க்கையில், உங்களுக்கு எது கிடைக்கவில்லையோ, அது கிடைக்க வேண்டும் என்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றி வேண்டுதல் வைத்துப் பாருங்கள்.

- Advertisement -

27 நாட்களில் நீங்கள் வைத்த வேண்டுதல் நிறைவேற 99 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. அந்த ஒரு சதவிகிதம் வாய்ப்பு இல்லையே. என்ன செய்வது. அது நம்முடைய தலைவிதி. அதை மாற்ற யாராலும் முடியாது. இருந்தாலும் இந்த 99% நம்பிக்கையை நம் மனதில் வைத்து நேர்மறை ஆற்றலோடு இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வோம். முயற்சியும் செய்து பார்ப்போம் நிச்சயம் நல்லது நடக்கும்.

வெற்றி தரும் பிரம்ம முகூர்த்த வழிபாடு

பிரம்ம முகூர்த்தம் நேரம் என்றால், காலை 5:30 மணிக்கு முன்பாக ஒவ்வொருவர் ஒவ்வொரு நேரத்தை சொல்வார்கள். ஆனால் இந்த விளக்கை நீங்கள் அதிகாலை 3:33 மணியிலிருந்து 4:33 மணிக்குள் ஏற்ற வேண்டும். இந்த ஒரு மணி நேரமும் உங்களுடைய வீட்டில் விளக்கு எரிய வேண்டும். சரியாக அதிகாலை 3:33 மணி அடிக்கும்போது உங்கள் பிரார்த்தனை சொல்லி பூஜை அறையில் விளக்கு ஏற்றி விடுங்கள். 4:33 வரை அந்த விளக்கு எறிய வேண்டும்.

- Advertisement -

அந்த விளக்கு, தீபச்சுடருக்கு முன்பாக நீங்கள் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை இந்த பிரபஞ்சத்தில் வைக்க வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் மட்டுமே போதும்.

லட்சக்கணக்கான பேர் வேண்டுதல் வைக்கும் போது பிரபஞ்சத்திடம் அந்த வேண்டுதல் போய் சேர கொஞ்ச நேரம் எடுக்கும். ஆனால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எல்லோரும் தூங்குவார்கள். இந்த பூமியே அமைதியாக இருக்கும். அந்த சமயத்தில் நாம் வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதல் இறைவனின் காதில் சீக்கிரம் போய் விழும்.

- Advertisement -

அனைவருக்கும் புரியும்படி சொல்லப் போனால் இறைவனிடம் நாம் பேசுவதற்கு அந்த நேரத்தில் டிராபிக் ஜாம் இருக்காது. அவ்வளவுதான். நம்முடைய ரூட் ரொம்ப ரொம்ப காலியாக இருக்கும். ரூட் கிளியர் ஆகும் போது, வேண்டுதலும் சீக்கிரமாக பகவான் இடத்தில் சீக்கிரம் போய் சேருவதற்காக, அந்த காலத்திலேயே சொல்லப்பட்ட வழிபாடுதான் இந்த பிரம்ம முகூர்த்த வழிபாடு.

ஏதாவது ஒரு கோரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். 27 நாட்களில் ஒரு நாள் கூட தவறவிடக்கூடாது. இடையில் ஒரு நாளை தவிர விட்டால், மீண்டும் 27 நாள் கணக்கு வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். 27 நாளும் நேரத்தையும் தவற விடக்கூடாது வழிபாடு கடுமையாக இருக்க வேண்டும்.

பெண்களாக இருந்தால் கூட 27 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய முடியும். ஆகவே உங்களுடைய மாதவிடாய் நாட்களை கணக்கு வைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை செய்யத் துவங்குங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி, சுலபமாக சாதித்துக் கொள்ள இது ஒரு சுலபமான வழிபாடு.

சில பேருக்கு எல்லாம் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை நிறைவேற்றிக்கொள்ள நல்ல வேலை கிடைக்காமல், தவிப்பார்கள். வியாபாரத்தில் நஷ்டம் இருக்கும். அதையெல்லாம் சரி செய்ய பெரிய அளவில் சிரமம் எடுக்க வேண்டாம். இந்த வழிபாட்டை செய்துவிட்டு உங்கள் அன்றாட வேலைகளை துவங்குங்கள். அது போதும் மத்ததை இறைவன் பார்த்துக் கொள்வான். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

இதையும் படிக்கலாமே: நிலை வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த பரிகாரம் உங்கள் கண்களில் இன்று பட்டால் நீங்கள் வாழ்க்கையில் கோடீஸ்வரராக ஒரு யோகத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கிறான் என்று நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை நாளைய செய்ய துவங்குங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -