நாளைய தினம் கார்த்திகை மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை. கார்த்திகை மாதம் என்றாலே வெளிச்சம் தரக்கூடிய மாதம் என்று அர்த்தம். தீப வழிபாட்டிற்கு இந்த மாதம் மிக மிக சிறப்பான மாதம். அதே போல மகாலட்சுமி வழிபாட்டிற்கும் இந்த மாதம் சிறப்பான மாதம். தீபம் என்றால் மங்கலம். மங்கலம் என்றாலே லக்ஷ்மி கடாட்சம் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
நாளைய தினம் கட்டாயம் எல்லோரும் நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த ஒரு வார்த்தையை சொல்லிப் பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் வறுமையானது நீங்கும். உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டம் தீரும். உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் வருகை இருக்கும்.
கார்த்திகை முதல் வெள்ளி வழிபாடு
தினமும் காலை விடிந்தவுடன் உங்கள் வீட்டு நிலை வாசல் கதவை யார் திறப்பார்கள்? நாளை ஒரு நாள் வீட்டின் குடும்பத் தலைவி நிலை வாசல் கதவை திறக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சுத்த பத்தமாக இருக்கும் பட்சத்தில், காலை எழுந்தவுடன் தலையை வாரி கட்டிக்கொண்டு, முகத்தை அலம்பி கொண்டு, பல் தேய்த்துக்கொண்டு, நிலை வாசல் கதவை திறக்கச் செல்ல வேண்டும். நெற்றியில் கட்டாயம் ஒரு ஸ்டிக்கர் பொட்டாவது இருக்க வேண்டும். நிலை வாசலை திறக்கும் போது ‘வரலட்சுமியே வருக வருக ! மகாலட்சுமியே வருக வருக !’ என்ற மந்திரத்தை சொல்லி நிலைவாசல் கதவை திறந்து திறக்க வேண்டும்.
நிலைவாசல் கதவை திறக்கும் போது இரண்டு கைகளும் வெறுமனே இருக்க வேண்டும். வாசலை கூட்ட துடைப்பம், பக்கெட், குப்பை கூடை போன்ற பொருட்களை கையில் எடுத்த செல்ல வேண்டாம். மேலே சொன்ன மந்திரத்தை சொல்லி, வாசல் கதவை திறந்த பிறகு, இரு கைகளை கூப்பி வணங்கி விட்டு, பிறகு அன்றாட வேலையை துவங்குங்கள். வாசல் தெளித்து அழகாக கோலம் போட்டு, நிலை வாசலை அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
நாளை காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன்பு இந்த எளிமையான பரிகாரத்தை எவர் ஒருவர் வீட்டில் செய்கிறீர்களோ, அவர்களுடைய வீட்டில் நிச்சயம் மகாலட்சுமியின் வருகை இருக்கும். அழகாக கோலம் போட்டு, நிலை வாசலில் இரண்டு பக்கமும் விளக்கு ஏற்றி வைத்து பிறகு வந்து பொறுமையாக குளித்துவிட்டு கூட உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றுக் கொள்ளலாம். தவறு கிடையாது. பெண்கள் சுத்த பத்தமாக இருக்கும் பட்சத்தில் முகம் கை கால்களை கழுவிக் கொண்டே, இந்த வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
சுத்தபத்தமாக இல்லாத பெண்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து தலைக்கு குளித்துவிட்டு பிறகு இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற முடியாத சூழ்நிலை இருந்தால், வீட்டில் இருக்கும் ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் அதில் தவறு கிடையாது. நாளைய தினம் அனைவரது வீட்டிலும் மிக மிக எளிமையான முறையில் தீபம் ஏற்றி, மகாலட்சுமியின் பூஜை செய்ய வேண்டும். காலை, நேரம் இருந்தால் செய்யுங்கள். முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி மகாலட்சுமி மனதார நினைத்து பூஜை செய்யுங்கள்.
அதிர்ஷ்டம் தரும் ஏஞ்சல் நம்பர்
உங்களுடைய வாழ்க்கையில் ஏமாற்றம் மட்டும் இருந்தால், அந்த ஏமாற்றத்தை சரி செய்ய நீங்கள் வேண்டியதை பெறுவதற்கு, ஒரு ஏஞ்சல் நம்பரையும் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாளைய தினம் வெள்ளிக்கிழமை அல்லவா. சுத்தபத்துமாக குளித்துவிட்டு, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு பேனா, சாதாரண நீள நிற பேனாவை எடுத்து, உங்களுடைய இடது கையில் இந்த நம்பரை எழுதிக் கொள்ளுங்கள்.
‘4418, 777’ இது ஒரு ஏஞ்சல் நம்பர். வாழ்க்கையில் நல்லது நடக்காதவர்களுக்கு, நல்லதே நடத்தித் தரும் ஏஞ்சல் நம்பர். என்ன வேண்டுதலை வைத்து இந்த பிரபஞ்சத்திடம் இந்த நம்பரை உங்களிடன் கையில் எழுதினால் சரி, அது உங்களுக்கு அப்படியே கிடைக்கும். வாழ்வில் ஏமாற்றங்கள் விலகும். நாளைய தினம் இதை செய்து பாருங்கள்.
ஒரு கோரிக்கையை வைத்து இந்த நம்பரை நாளை எழுத தொடங்குங்கள். நாளை தொடங்கி தினம் தினம் காலை குளித்துவிட்டு வேண்டுதலை வைத்து, இந்த நம்பரை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும். 48 நாட்கள் வரை இதை தொடர்ந்து செய்து பாருங்கள். நீங்கள் நினைத்ததை அடைந்து விட்டால், இந்த ஏஞ்சல் நம்பர் உங்களுக்கானது மட்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையிலிருந்து சுலபமாக வெளிவர மந்திரம்
அடுத்த தேவைகளுக்காகவும் இந்த நம்பரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய உடம்பில் இடது பக்கத்தில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இந்த நம்பரை எழுதிக் கொள்ளுங்கள். நல்லது நடக்க மேல் சொன்ன இந்த இரண்டு விஷயங்களை நாளை பின்பற்றி பாருங்கள். மகாலட்சுமி அருள் நிச்சயம் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.