- Advertisement -
சமையல் குறிப்புகள்

‘கத்திரிக்காய் பூண்டு வறுவல்’ இப்படி மட்டும் செஞ்சி கொடுத்தால் ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் நீங்கள் சலிக்காம சாப்பிட்டுகிட்டே இருப்பீங்க!

- Advertisement -

கத்திரிக்காய் பூண்டு வறுவல் செய்வது எப்படி

கத்திரிக்காயில் விதவிதமான வதக்கல், பொரியல், தொக்கு என்று செய்து சாப்பிட்டிருப்போம். பூண்டு சேர்த்து இப்படி ஒரு முறை பொன்னிறமாக வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க ரசம் சாதம், சாம்பார் சாதம் என்று எல்லாவற்றுக்குமே சூப்பராக இருக்கும். அது மட்டும் அல்லாமல் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் என்று வெரைட்டி ரைஸுகளுக்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவல் எப்படி எளிதாக வீட்டில் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கத்திரிக்காய் பூண்டு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், பூண்டு – 15 பல், கத்திரிக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – ஒன்று, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், வெறும் மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

கத்திரிக்காய் பூண்டு வறுவல் செய்முறை விளக்கம்:

முதலில் கால் கிலோ அளவிற்கு நல்ல கத்திரிக்காயாக பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான கத்திரிக்காய் இருந்தாலும் இந்த முறையில் நீங்கள் வறுவல் செய்யும் போது ரொம்பவே சுவையானதாக இருக்கும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பூண்டு வறுபடும் பொழுதே ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து மெல்லியதாக நீளவாக்கில் பச்சடிக்கு நறுக்குவது போல நறுக்கி சேர்த்து வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கி வர வேண்டும். வெங்காயம் வதங்குவதற்கு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இவை மசிய வதங்கி வரும் வரை வதக்கி விடுங்கள். வெங்காயம், தக்காளி மசிந்ததும் நீங்கள் எடுத்து வைத்துள்ள கத்திரிக்காய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்தெந்த அளவுகளில் நறுக்கி கொள்ள வேண்டுமோ, அந்தந்த அளவுகளில் நறுக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

கத்தரிக்காயை முன்னரே நீங்கள் நறுக்கினால் கறுத்து போய்விடும் எனவே நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் போது பிரஷ் ஆக நறுக்கிக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடுங்கள். கால் பாகம் கத்திரிக்காய் வெந்து சுருண்டு வரும் பொழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு மசாலா வாசம் போக பிரட்டியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தீய்ந்து போய் விட வாய்ப்புகள் உண்டு.

இதையும் படிக்கலாமே:
முருங்கைக் கீரையின் சத்துக்கள் நிறைந்த இந்த பஞ்ச பாண்டவ ரசத்தை வைத்து பாருங்கள் தேவாமிர்தம் போல இருக்கும். இப்படி ஒரு சத்தான,ஆரோக்கியம் நிறைந்த ரசத்தை இதுவரை நீங்கள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பே இல்லை.

பின்னர் ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள். இடையிடையே திறந்து பார்த்து கிண்டி விடுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயின் சூட்டிலேயே கத்திரிக்காய் நன்கு மசாலாவுடன் சேர்த்து வறுபட்டு வரும். ஐந்தாறு நிமிடம் கழித்து நீங்கள் கத்திரிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், இந்த சுவையான பூண்டு கத்திரிக்காய் வறுவல் எல்லா விதமான சாதம் மற்றும் வெரைட்டி ரைஸ்களுக்கு ரொம்பவே அற்புதமான காம்பினேஷனாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி சூப்பரான ரெசிபியை உடனே ட்ரை பண்ணி உங்க வீட்டிலும் அசத்திடுங்க!

- Advertisement -