முருங்கைக் கீரையின் சத்துக்கள் நிறைந்த இந்த பஞ்ச பாண்டவ ரசத்தை வைத்து பாருங்கள் தேவாமிர்தம் போல இருக்கும். இப்படி ஒரு சத்தான,ஆரோக்கியம் நிறைந்த ரசத்தை இதுவரை நீங்கள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பே இல்லை.

- Advertisement -

முருங்கைக்கீரை இதில் இல்லாத சத்துக்களே கிடையாது வாரம் இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு சத்துக்கள் இந்த கீரையில் நிறைந்துள்ளது. இந்த கீரையில் இது வரை பொரியல், கூட்டு, சூப் என்று செய்து இருப்போம். இதில் ரசம் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும் முருங்கைக் கீரையே நல்ல சத்தான ஆரோக்கியமான பொருள் தான் அத்துடன் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் எப்படி அத்தனை ஐந்து பொருட்களும் ஒன்றாக சேர்த்த இந்த பஞ்ச பாண்டவ ரசத்தை வைத்து சாப்பிட்டு பாருங்கள் அமிர்தம் போலவே இருக்கும். வாங்க அந்த ரசத்தை எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை -1 கப், தனியா -1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் -5, பூண்டு -15 பல், மிளகு -1டேபிள் ஸ்பூன், சீரகம் -1 டேபிள் ஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, தக்காளி -3, துவரம் பருப்பு – 1கப், பச்சை மிளகாய் – 2, நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், வெல்லம் – 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி – 1 கைப்பிடி.

- Advertisement -

இந்த ரசம் வைப்பதற்கு முதலில் ஒரு கப் துவரம் பருப்பையும் மூன்று தக்காளியையும் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது முருங்கைக் கீரை அதில் சேர்த்து சர்க்கரையும் சேர்த்து (சர்க்கரை சேர்ப்பதால் கீரையின் பச்சை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்) ஒரு கொதி வந்ததும் வடிகட்டி இதை ஒரு புறம் அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ரசத்திற்கு தேவையான பொடியை அரைத்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் தனியா சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து அதையும் லேசாக வறுத்தப் பிறகு மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள் மிளகு நன்றாக பொரிந்தவுடன், சீரகம் சேர்த்து அதுவும் பொரிந்தவுடன் எடுத்து ஆற வைத்துக் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்தவுடன், கறிவேப்பிலை பூண்டை தோலுடன் நசுக்கி அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பெருங்காயம் சேர்த்த பிறகு வேக வைத்த பருப்பு தக்காளி கரைச்சலையும் ஊற்றி, புளியும் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கொதிக்க விடுங்கள். இது ஒரு கொதி வந்த பிறகு வெல்லம் சேர்த்த பிறகு அரைத்து வைத்த பொடியை சேர்த்து அதுவும் ஒரு கொதி வந்தவுடன் கடைசியாக முருங்கைக் கீரையை சேர்த்து நுரையுடன் வரும் போது அடுப்பை அனைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இது கறி வருவலா, இல்லை வாழைக்காய் வறுவலா, என்ற சந்தேகம் உங்களுக்கே வரும். ஒரே ஒரு வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாக்குறீங்க.

முருங்கைக் கீரையை ஏற்கனவே நாம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடித்து வைத்திருப்பதால் அதிகம் வேக வேண்டிய அவசியம் இல்லை. கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்தக் கீரையை வடித்து எடுத்த பிறகு அரைத்தும் கூட ரசத்தில் சேர்த்து கொடுக்கலாம். இதனால் கீரையின் சத்துக்கள் முழுவதும் கிடைக்கும். இந்த ரசத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இந்த ரசம் வைத்து சுட சுட சாதம் வடித்து ஊற்றி சாப்பிட்டு பாருங்கள் இதன் ருசியை சொல்ல வார்த்தைகளே இல்லை.

- Advertisement -