- Advertisement -
ஜோதிடம்

புதன பகவானால் யோகம் பெறும் ராசிகள்

- Advertisement -

ஒவ்வொருடைய வாழ்விலும் ஏற்றங்களும் இறக்கங்களும் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு கிரகங்களின் இடமாற்றம் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ஆகையால் தான் இன்றளவும் நாம் எந்த ஒரு செயலை துவங்கும் முன்பும் ஜாதகம் பார்க்கும் வழக்கத்தை கொண்டுள்ளோம். இந்த நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றிக் கொண்டிருக்கும். இந்த இடம் மாற்றமும் ஒவ்வொருவருடைய வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில எந்த கிரகம் இடமாற்றம் செய்ய போகிறது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வழிபாட்டு முறைகளிலும் சரி ஜோதிட சாஸ்திரத்திலும் சரி நவகிரகங்களுக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு. இந்த நவக்கிரகங்களளானது குறிப்பிட்டு கால இடைவெளியில் ஒவ்வொரு ராசியில் பயணித்துக் கொண்டிருப்பார்கள். இந்த மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளுக்கும் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அது நன்மையாகவும் இருக்கலாம் தீமையாகவும் இருக்கலாம். அந்த வகையில் புதன் பகவானவர் வரும் மே மாதம் 23ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையப் போவதாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலனை தரப்போகிறது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

- Advertisement -

புதனால் யோகம் பெறும் ராசிகள்

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் இந்த புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, பேச்சு, படிப்பு, வியாபாரம் போன்றவை ஒருவருக்கு சிறப்பாக அமைய உதவி புரியும் கிரகமாக திகழ்கிறார். அதுமட்டுமின்றி புதனின் அனுகிரகம் இருந்தால் கோடீஸ்வர யோகத்தையும் எளிதாக பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியான புதன் பகவான் தன்னுடைய இட பெயர்ச்சியின் மூலம் எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்களை தரப் போகிறார் என்பதை பார்க்கலாம்.

கடக ராசி

கடக ராசி காரர்களுக்கு புதபகவானின் இந்த இடமாற்றமானது பல நற்பலன்களை கொடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை அதிகரிக்கும். சுயமாக தொழில் செய்பவர்களுக்கு அதில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும். அது மட்டுமின்றி திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழ்நிலையும் நல்ல பண வரவிற்கான யோகமும் அமையும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களும் புதபகவானின் இந்த மாற்றத்தால் நற்பலன்களையே பெறப்போகிறார்கள். இவர்களுக்கும் இந்த காலக்கட்டத்தில் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை எளிதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன் மட்டும் இன்றி இவர்களுடைய உடல் ஆரோக்கியமும் குடும்ப சூழ்நிலையும் சிறப்பானதாக மாறும் என்றும் பணவரவு அதிகரித்து பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:சகல ஐஸ்வர்யம் தரும் குபேர வியாழன் வழிபாடு

புதபகவானின் இந்த மாற்றத்தால் கடகம் மற்றும் சிம்ம ராசிகளுக்கு பல நற்பலன்கள் கிடைக்கப்போவதாக ஜாதக சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த பலன் பொதுவானதாக கருதப்படுகிறது. இது அவரவர் ஜாதக நிலைமைக்கு ஏற்ப சில மாற்றங்களுக்கும் வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது. இந்த கிரகங்களின் மாற்றம் நமக்கு எந்த விதமான பலன்களை கொடுப்பதாக இருந்தாலும் நம்முடைய முயற்சியும் உழைப்பும் இருந்தால் தான் அதில் நிச்சயம் நற்பலன்களை பெற முடியும். அந்த வகையில் இந்த புத பகவானின் இடம் மாற்றத்தை நம்முடைய உழைப்பும், முயற்சியுடன் சேர்த்து நல்ல முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் நற்பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -