வைகாசி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரமாக இருந்தாலும் சரி, வைகாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும் சரி, அதைப்போலவே வைகாசி மாதத்தில் வரக்கூடிய வியாழக்கிழமையும் மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. அப்படி வரக்கூடிய வைகாசி மாதத்தின் முதல் வியாழக்கிழமையை நாம் குபேர வியாழன் என்று கூறுகிறோம். பொதுவாகவே வியாழக்கிழமை என்றால் குரு பகவானுக்கும், குபேர பகவானுக்கும் உகந்த கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட நாளில் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
குபேர வியாழன் வழிபாடு
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குரு பகவானுக்குரிய கிழமையாக தான் வியாழக்கிழமை திகழ்கிறது. குரு பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்தும் தோஷங்களில் இருந்தும் விடுபடுவதற்கு வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அதுவும் குருபகவானுக்குரிய தானியமான கொண்டைக்கடலையை மாலையாக கோர்த்து சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறுவார்கள். அதே போல் தான் குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்கு உரியதாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் குபேர பகவானை நினைத்து குபேர வழிபாடு அல்லது குபேர தீபமோ ஏற்றும் பொழுது மகாலட்சுமி மற்றும் குபேரரின் அருளால் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் ஏற்படாது.
வைகாசி மாதத்தில் வரக்கூடிய முதல் வியாழக்கிழமையை குபேர வியாழன் என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில் குபேர பகவானுக்குரிய நேரமான மாலை 5:30 மணிக்கு மேல் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து நாம் வழிபாடு செய்வதன் மூலம் சகல ஐஸ்வரியங்களையும் நம்மால் பெற முடியும். நீண்ட நாட்களாக நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த வறுமைகள் அனைத்தும் நீங்க ஆரம்பிக்கும். இதற்கு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபங்கள் அனைத்தையும் ஏற்று முடித்த பிறகு தனியாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்திற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் குரு பகவானின் அம்சம் பொருந்திய கொண்டைக்கடவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கருப்பு கொண்டைக்கடலையை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெள்ளை கொண்டை கடலையைக் கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான பசு நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டுக் கொள்ளுங்கள்.
இந்த தீபத்திற்கு பின்புறமாக ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை வைக்க வேண்டும். இந்த ரூபாய் நோட்டு குபேரரின் அம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது என்பதால் இந்த ரூபாய் நோட்டை வைத்து நாம் தீபம் ஏற்றும்பொழுது குபேரரின் அருளையும் நம்மால் பெற முடியும். தங்களால் எந்த ரூபாய் நோட்டை வைக்க முடியுமோ அதை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தீபம் ஏற்றி வைத்து முழு மனதோடு குபேர பகவானையும் குரு பகவானையும் வழிபாடு செய்து கொள்ளுங்கள். இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். அரை மணி நேரம் எரிந்து முடித்த பிறகு அதை குளிர வைத்து விடுங்கள். அன்று இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும்.
மறுநாள் காலை வெள்ளிக்கிழமை அன்று இந்த ரூபாய் நோட்டை எடுத்து உங்களுடைய பர்சிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ, பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இதை எக்காரணத்தை கொண்டும் செலவு செய்யக்கூடாது. இந்த ரூபாய் நோட்டுடன் சிறிது பச்சை கற்பூரம் அல்லது ஜவ்வாது போன்றவற்றை தடவி வைப்பது இன்னும் கூடுதல் சிறப்பை தரும். தீபத்திற்கு கீழே நாம் வைத்திருந்த கொண்டை கடலையை பறவைகளுக்கு தானமாக தர வேண்டும். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் குரு பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும் குபேர பகவானின் அருளையும் நம்மால் பெற முடியும். அதனால் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:தடைகளை நீக்கி பணவரவை அதிகரிக்க
குருவின் அருளும் குபேரரின் அருளும் ஒருசேர கிடைப்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. அதன் அடிப்படையில் இவர்கள் இருவருக்கும் உகந்த வியாழக்கிழமை இந்த முறையில் தீபம் ஏற்று வழிபாடு செய்ய இவர்களின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.