- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

குரு பெயர்ச்சிக்கான பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரியா ?

சுப கிரகங்களில் ஒருவரான குருபகவான் 4-10-2018 அன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் அசுப பலனுடைய ராசிக்கார்கள் பலரும் பரிகாரங்கள் செய்து வருகின்றனர். இதில் பலர் குரு பகவானுக்குரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்கின்றன. இப்படி செய்வது சரியா என்று பார்ப்போம் வாருங்கள்.

தட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம், குரு பகவான் நவகிரகங்களில் ஒருவர். ஆகவே தட்சிணாமூர்த்தி வேறு குருபகவான் வேறு. குரு பெயர்ச்சிக்கான பரிகாரம் செய்ய நினைப்போர் குரு பகவானுக்கு தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழக்கத்தை மாற்றி, சமீபகாலமாக மக்கள் தனினமூர்த்திதான் குரு பகவான் என்று நினைத்து, தட்சிணா மூர்த்தியின் சன்னதியில் குரு பகவானுக்கான பரிகாரங்களை செய்கின்றனர். இப்படி செய்வதனால் ஒரு பலனும் இல்லை.

எல்லா ஆலயங்களிலும் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். அதனால் அவரை தென்முகக்கடவுள் என்றே அழைப்பார்கள். நவகிரகங்களில் ஒருவரான குருபகவானின் திசை வடக்கு. இரண்டு பேரும் வீற்றிருக்கும் திசைகளே வேறாக இருக்கின்றது. வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். தட்சிணாமூர்த்தி வெள்ளை உடை அணிபவர். இப்படி அனைத்திலும் இருவருக்கும் இடையே பல வித்யாசங்கள் உள்ளன.

உண்மை இப்படி இருக்க, குருவுக்கு பரிகாரம் செய்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்குத் தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.

- Advertisement -