- Advertisement -
சமையல் குறிப்புகள்

அட்டகாசமான சுவையில் சூப்பரான காலிஃப்ளவர் பெப்பர் ப்ரையை இந்த சீக்ரெட் மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க. அப்பறம் பாருங்க இதோட சீக்ரெட் என்னன்னு எல்லாரும் உங்களை நச்சரிக்க ஆரம்பிச்சிடுவாங்க.

- Advertisement -

சைவப் பிரியர்களுக்கு காலிஃப்ளவர், மஸ்ரூம், பன்னீர் போன்றவை எல்லாம் ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லாம். அசைவ உணவில் என்னென்ன வகைகள் செய்யலாமோ அவை அனைத்தையும் இந்த பொருட்களை வைத்து அதே சுவையில் செய்யலாம். நம்மில் பெரும்பாலோர் அசைவ சாப்பாட்டை விரும்பி சாப்பிடுவார்கள். எல்லா நேரத்திலும் அசைவ சாப்பாட்டை சாப்பிட முடியாதல்லவா அது போன்ற நேரங்களில் இந்த மாதிரியாக சமையல்கள் செய்து சமாளித்து விடலாம். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் காலிஃப்ளவர் வைத்து ஒரு சூப்பரான பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

முதலில் 300 கிராம் அளவு காளிஃப்ளவரை நறுக்கி கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த பிறகு அரிந்து வைத்த  காலிஃப்ளவரை போட்ட பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். 10 நிமிடம் வரை இந்த காலிஃப்ளவர் கொதிக்கும் நீரிலே இருக்கட்டும். அதன் பிறகு இதை எடுத்து தண்ணீர் இல்லாமல் கடித்து கொள்ளுங்கள். இதனால் காலிஃப்ளவர் ஓரளவுக்கு வெந்து அதில் இருக்கும் பூச்சிகளும் வெளியே வந்து விடும்.

- Advertisement -

இப்போது இந்த பெப்பர் ஃப்ரைக்கு ஒரு சீக்ரெட் மசாலாவை அரைக்க வேண்டும். அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 2 லவங்கம், 1 பட்டை,1 ஏலக்காய், 2 காய்ந்த மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்து தனியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் அடுப்பில் அதே பேனை வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த காலிஃபிளவர் ஃப்ரை தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்யும் போது சுவை பிரமாதமாக இருக்கும். எண்ணெய் சூடானதும் 1 ஏலக்காய், 2 லவங்கம், 1 துண்டு பட்டை சேர்த்து பொரிந்த பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி நிறம் மாறியவுடன் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு காலிஃப்ளவர் இதில் சேர்த்து 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் சேர்த்த பிறகு நன்றாக கலந்து விட்டு 1/4 டம்பளர் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வரை மூடி போட்டு காளிஃபிளவரை வேக விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 20 ரூபாய்க்கு ருசியான ரோட் ஸ்டைல் பிரிஞ்சி இப்படித்தான் செய்யனுமா? இனி நாமளும் டேஸ்டியான பிரிஞ்சி வீட்டிலேயே செய்யலாமே!

காலிஃப்ளவர் 50% வரை வெந்த பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து வதக்கி விடுங்கள். இதில் தண்ணீர் ஊற்றி மசாலா முழுவதும் காலிஃப்ளவரில் சேர்ந்து சுவையான காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை சூப்பராக தயாராகி விடும். இந்த முறையில் காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை செய்தால் போதும் வீட்டில் உள்ளவர்கள் கூட திரும்பத் திரும்ப இதையே செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு பிரமாதமாக இருக்கும் நன்றாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -