20 ரூபாய்க்கு ருசியான ரோட் ஸ்டைல் பிரிஞ்சி இப்படித்தான் செய்யனுமா? இனி நாமளும் டேஸ்டியான பிரிஞ்சி வீட்டிலேயே செய்யலாமே!

road-side-brinji-tamil
- Advertisement -

20 ரூபாய்க்கு சூப்பரான பிரிஞ்சி காலை நேரத்தில் பல தெருக்களில் சுட சுட விற்பனை செய்யப்படுகிறது. அதன் சுவையும், மணமும் ஆளை தூக்கும் வண்ணம் அவ்வளவு அருமையாக இருக்கும். அதில் பெரிதாக காய்கறிகளும் எதுவும் சேர்க்கப்பட்டிருக்காது. ஆனால் சுவை மட்டும் குறைந்த பாடில்லை! இத்தகைய ரோட் ஸ்டைல் பிரிஞ்சு ரெசிபி எப்படி நம் வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – இரண்டு கப், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், (மசாலா: பிரிஞ்சி இலை – 4, அண்ணாச்சி மொக்கு, கல்பாசி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் – தலா இரண்டு, சோம்பு – அரை டீஸ்பூன்), பெரிய வெங்காயம் – இரண்டு, தக்காளி – இரண்டு, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கேசரி பவுடர் – கால் ஸ்பூன், புதினா, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, தயிர் – அரை கப், எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மீல்மேக்கர் – 100 கிராம்.

- Advertisement -

செய்முறை 

இந்த பிரிஞ்சி செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து இதனுடன் தேவையான அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கி விடுங்கள்.

பச்சை வாசம் போக வதக்கிய பின்பு காம்பு நீக்கி முழுதாக அப்படியே பச்சை மிளகாய்கள், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். இவற்றுடன் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி மற்றும் புதினா இலைகளையும் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல நிறத்திற்கு கொஞ்சம் சிகப்பு நிற கேசரி பவுடரையும் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது விருப்பப்பட்ட காய்கறிகள் மற்றும் மீல் மேக்கர் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

- Advertisement -

பின்பு கடைசியாக அரைக்கப் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்ட பின்பு, தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ரெண்டு கப் பாஸ்மதி அரிசிக்கு மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் சேர்த்த பின்பு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் 20 நிமிடம் ஊற வைத்து எடுத்துள்ள பாஸ்மதி அரிசியை இதனுள் சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மசாலா அரைச்சு போட்ட மாங்காய் தேங்காய் சாதம் இப்படி கூட செய்யலாமா? இப்படி ஒரு அல்டிமேட் லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது மிஸ் பண்ணிடாதீங்க.

அரிசி சேர்த்ததும் மூடி போட்டு ஒரு பத்து நிமிடம் நன்கு வேக விடுங்கள். தண்ணீர் முழுவதும் உறிந்து கொண்டு தளதளவென மிதந்து வரும் பொழுது அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொண்டு தம் போட வேண்டும். ஒரு காட்டன் துணியை போட்டு பாத்திரத்தை மூடி அதன் மீது தட்டை போட்டு மூடுங்கள். பின்னர் மேலே வெயிட்டான பாத்திரம் ஏதாவது ஒன்றை வையுங்கள். 15 நிமிடத்தில் பூ போல சூப்பரான உதிரி உதிரியான ரோட் ஸ்டைல் பிரிஞ்சி அருமையான சுவையில் தயார்!

- Advertisement -