- Advertisement -
மந்திரம்

சந்திர கிரகணமான இன்று அனைவரும் ஜபிக்க வேண்டிய மந்திரம்

சூரிய கிரகணமோ வருடத்தில் ஒரு முறை அல்லது சில வருடங்களுக்கு ஒரு முறை என்று வரும். ஆனால் சந்திர கிரகணமோ வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு மூன்று முறை கூட வர வாய்ப்புண்டு. ஜோதிட கலையின் படி சந்திரன் மனிதர்களின் மனதை ஆளும் மனோகாரகனாவார். இந்த சந்திரனின் மீது பூமியின் நிழல் ஏற்படும் நிகழ்வு தான் “சந்திர கிரகணமாகும்” அந்த கிரகண வேளையில் கூற வேண்டிய மந்திரம் இது.

சந்திர கிரகணம் மந்திரம்

ஆம் ஐம் க்ளீம் ஸோமாயா நமஹ

- Advertisement -

இந்த மந்திரத்தை சந்திர கிரகணம் நிகழும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் நெய் தீபம் ஏற்றி சாம்பிராணி தூபம் போட்டு, சந்திர பகவானை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். மேலும் இரவில் சந்திர கிரகணம் நிகழும் வேளையில் ஒரு சுத்தமான துணியை கீழே விரித்து, அதில் அமர்ந்து வலது கையில் தர்பை புல் கட்டை பிடித்து கொண்டு இம்மந்திரத்தை கண்களை மூடி தியான நிலையில் வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளாகவோ ஜெபிக்க வேண்டும்.

சந்திரன் 16 நாட்கள் தேய்ந்தும் 16 நாட்கள் வளர்ந்தும் இந்த பூமிக்கு இரவில் வெளிச்சம் தருகிறார். மாதம் தோறும் வரும் அமாவாசை பௌர்ணமிக்கு எப்படி சில சிறப்புக்கள் உண்டோ அதேபோல சந்திர கிரகணத்திற்கும் சில சிறப்புக்கள் உண்டு. அதே வேலையில் சில கெடுதலான பலன்களும் கிரகணத்தால் ஏற்படும். கிரகண வேளையின் சந்திரனின் மீதும் விழும் பூமியின் நிழல் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகும். கிரகணம் நீடிக்கும் வரை அந்த நிழலானது பூமியில் வாழும் உயிர்களின் மீது ஒரு விதமான கெடுதலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே மனிதர்களாகிய நாம் இம்மந்திரத்தை கூறுவதால் கிரகணத்தின் தீய தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
மிகுதியான மழைபொழிவை தரும் வருண மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we suggested the mantra that needs to be chanted during Chandra grahan period in Tamil language. It is called as Chandra grahan mantra in Tamil or Chandra Grahanam manthiram.

- Advertisement -