இந்த மந்திரத்தை சொன்னால் மழை பொழியும் தெரியுமா ?

varuna

பஞ்ச பூதங்களில் நீர் என்பது மனிதர்கள் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ இன்றியமையாததாகும். இந்த உலகம் 73 சதவீதம் நீரால் சூழப்பட்டது என்றாலும் அவை எல்லாம் உயிரினங்கள் பருக முடியாத உப்பு தன்மை கொண்ட கடல் நீராகும். 3 சதவீதம் அளவே உயிரினங்கள் குடிக்க தக்க நீர் நிலத்தடியில் இருந்தும், இன்ன பிற நீர்நிலைகளிலிருந்து பெறுகிறோம். அதற்கு மழை பொழிவு அவசியமாகிறது. அப்படி மழையை பொழியச் செய்ய மழை மற்றும் நீருக்கு அதிபதியான “வருண பகவானை” போற்றும் மந்திரம் இது.

Varuna Baghavan

வருண பகவான் மந்திரம்

ஓம் ஜலபிம்பாய வித்மஹே |
நீலபுருஷாய தீமஹி|
தன்னோ வருண ப்ரசோதயாத் ||

varuna

மிகவும் ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தை மற்ற மந்திரங்களை ஜெபிப்பது போல செய்ய முடியாதது. ஏனெனில் இம்மந்திரத்தை உச்சரிக்கும் காலங்களில் உடல், மனம், ஆன்ம சுத்தியை பேண வேண்டும். திங்கள் வெள்ளி ஆகிய கிழமைகளில், அன்றைய சுப நேரத்தில் உங்கள் ஊரில் ஆறு, குளம், ஏரி போன்ற ஏதேனும் ஒன்று இருந்தால், அதில் இறங்கி கழுத்தளவு நீரில், மேற்குத் திசையை பார்த்தவாறு நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ வருண பகவானை மனதார வேண்டி, இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபிக்க வேண்டும் இதை ஒரு நாள் மட்டும் செய்யாமல், சில தினங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால், மழை மேகங்கள் தோன்றி மழை பொழியும்.

varuna

- Advertisement -

வருண பகவான் வழிபாடு

நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் மேற்குத் திசையின் அதிபதியாகவும் பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீருக்கும், மழைபொழிவிற்கும் காரகராகவும் வருணபகவான் கூறப்படுகிறார். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நெய்தல் நிலம் எனப்படும் கடல் சார்ந்த நிலத்தில் கடலுக்கு அதிபதியாக வருணபகவான் சித்தரிக்கப்படுகிறார். உலகில் உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்கும் சுத்தமான நீருக்கு அடிப்படை காலா காலத்தில் பெய்ய வேண்டிய மழை ஆகும். அந்த மழைக்கு அதிபதியாக இருக்கும் வருண பகவானின் மனம் குளிர வருண காயத்ரி மந்திரத்தை துதிப்பதால், மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்புவதோடு மனிதர்களின் வாழ்வும் வளம் பெறும்.

வருண பகவான் வழிபாட்டிற்குரிய தினங்கள்

வருண பகவானை வழிபடுவதற்கு குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் என்று ஏதுமில்லை. தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, மேற்குத் திசையை நோக்கியவாறு கைகளைக் கூப்பி, வருண காயத்ரி மந்திரத்தை 108 முறை 1008 முறை வரை துதித்து வழிபடுவது எதிர்பார்த் பலனை கொடுக்க வல்லதாகும்.

varuna

“நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவ பெருந்தகை, எந்த ஒரு ஜீவனும் உயிர் வாழ அவசியமான நீரின் முக்கியத்துவத்தை எடுத்து கூறியுள்ளார். மேலும் அந்த நீரை இந்த உலகிற்கு வழங்கும் இயற்கையின் அற்புதமான “மழை” இந்த பூமியில் பெய்யா விட்டால் விவசாயம் செழிக்காமல், பஞ்சம் ஏற்பட்டு, சமூகமே வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு, அச்சமூக மக்கள் அனைவரும் நன்னெறிகளை விடுத்து குற்றச் செயல்கள் புரியும் மனிதர்களாக மாறுவார்கள் என யதார்த்த உண்மையையும் தனது திருக்குறள் நூலில் கூறியுள்ளார்.

https://dheivegam.com/wp-content/uploads/2017/07/water-life-crop.jpg

பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் தங்களின் தாகத்தை தனித்து கொள்வதற்கும், பெரும்பாலான உயிர்களுக்கு உணவளிக்க கூடிய மரம், செடி கொடிகள் போன்றவை உயிர் வாழவும், செழித்து வளரவும் இந்த வான் மழை அவசியமாகிறது. மேலும் மனிதர்கள் அனைவரின் பசியை போக்கும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாய மக்களுக்கு இந்த மழை ஒரு கட்டாய தேவையாகும். அப்படி மழை பொழிய செய்ய விரும்புபவர்கள் இம்மந்திரத்தை அதற்கேற்ற முறையில் ஜெபிக்க வருண பகவான் அருளால் மழை பொழியும்.

இதையும் படிக்கலாமே:
எத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we described a mantra for rain. It is called as Varuna japa mantra in Tamil or Mazhai vara manthiram. This can also be called as Varuna Manthiram or Varuna mantra in Tamil. One can get grace of Lord Varuna baghavan By chanting this mantra and rain will come for sure.