
இன்றைய தினம் சித்திரை 31. இந்த தமிழ் மாதத்தின் கடைசி நாள். இதுநாள் வரை வாழ்க்கையில் தொடர்ந்த கஷ்டங்கள் எல்லாம், இன்றோடு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று குலதெய்வத்தை நினைத்து பின் சொல்லக்கூடிய முறையில் இந்த எளிமையான பரிகாரத்தை செய்தாலே போதும். உங்களுடைய துன்பங்கள் எல்லாம் இந்த மாதத்தோடு முடிந்துவிடும். பிறக்கப் போகும் வைகாசி மாதம் புது பொலிவுடன் தோன்றுவதற்கு நாளைய காலை எழுந்ததும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் இறுதியில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பரிகாரம் என்றதுமே பெரிய அளவில் இருக்கும் என்று பயந்து விட வேண்டாம். உங்க வீட்டு சிங்க் அல்லது வாஷ்பேஷன் பக்கத்துல போங்க. இரண்டு உள்ளங்கைகளையும் கல் உப்பு வைத்துக்கொண்டு, அந்த கல்லுப்பில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு உள்ளங்கை முதல், முழங்கை வரை, அதாவது கையில் முட்டி பகுதி இருக்கும் அல்லவா, அந்த இடம் வரை கல்லுப்பை நன்றாக தேய்த்துக் கொடுத்து தண்ணீர் ஊற்றி இரண்டு கைகளையும் கழுவி விடுங்கள்.
அடுத்தபடியாக உங்களுடைய கால்கள் கால் பாதத்தில் இருந்து முழங்கால் வரை கல் உப்பு தேய்த்து கழுவி விட வேண்டும். இல்லையென்றால் கல்லுப்பு கலந்த தண்ணீரில் உங்கள் பாதங்களை பத்து நிமிடம் மூழ்கி இருக்கும் படி வைத்துவிட்டு, பிறகு கால்களை எடுத்துவிட்டு, பிறகு கால்களை வெறும் தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.
இதுபோல உங்கள் கைகளையும் கால்களையும் உப்பு கலந்த தண்ணீரில் முதலில் கழுவி விட்டாலே உங்களைப் பிடித்த நெகட்டிவ் எனர்ஜி முழுவதும் உங்கள் உடம்பை விட்டு வெளியேறிவிடும். (இந்த பரிகாரம் இன்றைக்கு மட்டுமல்ல. ஏதாவது வெளியிடங்களுக்கு சென்று வந்த பிறகு கண் திருஷ்டியால் உடல் உபாதைகள் இருக்கிறது, உடல் சோர்வு இருக்கிறது என்றால், உடனே இந்த பரிகாரத்தை பயன்படுத்துங்கள். உடம்பை பிடித்த நெகட்டிவ் எனர்ஜி உடனடியாக வெளியேற இந்த பரிகாரம் டக்குனு வேலை செய்யும்).
இரவு தூங்க செல்வதற்கு முன்பு இப்படி கை கால்களை கழுவி விட்டு, மூன்று கிராம்புகளை மட்டும் உங்கள் உள்ளங்கைகளில் எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி எரிகின்ற சூடத்தில் போட்டு விட்டாலே போதும். உங்களை பிடித்த கண்திருஷ்டி தரித்திரம் கஷ்டங்கள் எல்லாம் அந்த நிமிடத்தோடு உங்களை விட்டு விலகி விடும். பிறக்கின்ற வைகாசி மாதம் உங்களுக்கு நல்லபடியாக பிறக்கும். இது ஒரு எளிமையான பரிகாரம்தான். இன்று இரவு தூங்க செல்லும் போது குலதெய்வத்தை நினைத்து இதை செய்து விடுங்கள். சரி வைகாசி மாதம் முழுவதும் நன்மை நடக்க என்ன பரிகாரம் செய்வது.
நாளை காலையில் எழுந்து குளிக்கும் போது, அந்த குளிக்கின்ற தண்ணீரை வலது கையால் தொட்டு, இந்த தண்ணீர் கங்கா தீர்த்தமாக மாறட்டும். இந்த மாதம் முழுவதும் எனக்கு நன்மையே நடக்க வேண்டும் என்று தண்ணீரில் வேண்டுதல் வைத்து, அந்த தண்ணீரில் நீராடி விட வேண்டும். நீங்கள் குளிக்கின்ற தண்ணீர் தீர்த்தமாக மாறும். உங்களுக்கு இந்த வைகாசி மாதம் நல்லபடியாக பிறக்கும்.
குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, ஒரு கைப்பிடி அளவு சர்க்கரையை எடுத்து 2 கைகள் முழுவதும் தேய்த்து சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்து விட்டு முடிந்தால் கோவிலுக்கு செல்லுங்கள். எறும்புகளுக்கு வாயில்லா ஜீவன்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யுங்கள். முடிந்தால் இரண்டு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள்.
இதையும் படிக்கலாமே: பிரம்ம சாபம் உண்டாக காரணம்
இந்த வைகாசி மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மை மட்டும்தான் நடக்கும். மேல் சொன்ன இந்த இரண்டு பரிகாரங்களும் மிக்க மிக மிக எளிமையானவை என்றாலும், மிக மிக சக்தி வாய்ந்தது. இத்தனை மாதம் இல்லாத ஒரு நல்லது உங்கள் வாழ்க்கையில் நடக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உங்களுக்காக அந்த குல தெய்வமே வந்து இந்த பரிகாரத்தை சொன்னதாக நினைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த நிறைவு செய்து கொள்வோம்.