- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரம்ம சாபம் உண்டாக காரணம்

பிரம்ம சாபம் உண்டாக காரணம்

- Advertisement -

இவ்வுலகில் பொல்லாத சாபங்கள் பலவிருக்க குறிப்பிட்ட இந்த 13 வகையான சாபங்கள் ரொம்பவே முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் இந்த பிரம்ம சாபம் பற்றிய தகவல்கள் தான் அறியாதவையாக இருக்கின்றன. பிரம்ம சாபம் உண்டாக காரணம் என்ன? பிரம்ம சாபம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் என்னென்ன? என்பது போன்ற சுவாரஸ்யம் நிறைந்த ஆன்மீகம் சார்ந்த தகவலைத் தான் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

குலதெய்வ சாபம், பித்ரு சாபம், பெண் சாபம், சர்ப்ப சாபம், பிரேத சாபம் என்று 13 வகையான சாபங்கள் ரொம்பவும் முக்கியமான சாபங்களாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இவ்வகையான சாபங்களை ஒரு மனிதன் பெற்றுவிட்டால், அதற்குரிய தண்டனைகளை காலம் முழுக்க அனுபவிக்க வேண்டி இருக்குமாம். அதில் இந்த பிரம்ம சாபம் என்பது குருவை குறிப்பது ஆகும். பிரம்மம் என்பது குருவாகும்.

- Advertisement -

“குரு பிரம்மா, குரு தேவோ” என்று சொல்லப்படும் குருவை அவமதிப்பவர்களுக்கு பிரம்ம சாபம் உண்டாகிறது. உங்களுக்கு அறிவை கொடுத்த அல்லது கலையை கற்றுக் கொடுத்த, எந்த விதையை கற்றுக் கொடுத்த குருவாயினும் அவரை மறந்து விட்டால், இந்த சாபம் உங்களை பின் தொடரும். குருவானவர் எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தான் கற்ற வித்தையை தன் சீடனுக்கும் முழுமையாக கற்றுக் கொடுக்க வேண்டும். கற்ற வித்தைகளை மறைப்பதும், பிரம்ம சாபத்திற்கு ஆளாக வழி வகுக்கும்.

அப்படி உங்களுக்காக தன் முழு வித்தைகளையும் அல்லது ஞானத்தையும் கற்றுக் கொடுத்த குருவை மறந்தால் பிரம்ம சாபம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் கற்ற வித்தையை தவறாக பயன்படுத்தினாலும், உங்களுக்கு பிரம்ம சாபம் ஏற்படும். சில விஷயங்களை கற்கும் பொழுது அதை வைத்து நல்லதும் செய்ய முடியும், கெட்டதும் செய்ய முடியும் என்று இருக்கும். கற்ற வித்தையை வைத்து தவறான வழியில் பணம் சம்பாதிப்பது அல்லது மற்றவர்களை ஏமாற்றுவது போன்ற செயல்களை செய்தால் பிரம்ம சாபம் உங்களை பின்தொடர மறப்பதில்லை.

- Advertisement -

குருவை மறப்பது, கற்ற வித்தையை தவறாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல் தான் தெரிந்து கொண்ட வித்தையை தன்னோடே அழிந்து போகட்டும் என்று நினைப்பதும் மகா பாவமாகும். அடுத்தடுத்த சந்ததியினருக்கு அதனை கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களுடைய சீடர்களுக்கு அதனை முழுமையாக கற்பித்து விட்டு செல்ல வேண்டும். அது தான் நல்ல குருவிற்கு அழகாகும்.

இதையும் படிக்கலாமே:
பெருமாள் மகாலட்சுமி வீட்டிற்குள் வர பரிகாரம்

குரு சொல்லிக் கொடுத்த வித்தையை சீடன் பாதியை மறைத்து, மீதியை மட்டும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும், பிரம்ம சாபத்தை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இன்றைய நவநாகரிக உலகில் இதை பலரும் செய்து வருகின்றனர். தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என்றாலே அவர்களுக்கு மனம் வருவதில்லை! இத்தகையவர்களுக்கு பிரம்ம சாபம் ஏற்பட்டு, அடுத்த பிறவியில் கல்வி கற்க முடியாத நிலையை பிரபஞ்சம் ஏற்படுத்தும். பல குழந்தைகளால் சரியாக படிக்க முடியாமல் போகலாம், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் அறிவில்லாத குழந்தைகளும் இவ்வுலகில் இருக்க தானே செய்கின்றனர். எந்த விஷயத்திலும் திறமை இல்லாமல் இருப்பது, கல்வி கற்க முடியாமல் தடை ஏற்படுவது, அறிவற்றவர்களாக மற்றவர்கள் மூலம் ஏமாற்றப்படுவது போன்றவையும் பிரம்ம சாபத்தினால் வரக்கூடிய விளைவுகள் ஆகும்.

சற்று முன்