- Advertisement -

வாஸ்து நாள் அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

இந்த வருடத்தில் எப்படியாவது சொந்த வீடு வாங்கி விட வேண்டும் அல்லது சொந்த நிலம் வாங்கி விட வேண்டும், என்ற யோசனையில் இருப்பவர்கள், புது நிலம் வாங்க, வீடு கட்ட, பணம் சேர்த்துக் கொண்டிருப்பவர்கள், கட்டிய வீட்டை முழுமையாக முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தி வைத்திருப்பவர்கள், நிலம் வீடு இது போன்ற சொத்துக்களை விற்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம், ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டிய நேரமும் காலமும் வந்துவிட்டது.

இந்த சித்திரை மாதம் வாஸ்து பகவான் கண் விழிக்கக்கூடிய வாஸ்து நாள் அன்று, நம்முடைய பிரச்சனைகள் தீர வாஸ்து பகவானை வழிபாடு செய்தாலே போதும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். நாளைய தினம் வாஸ்து பாவனை பின் சொல்ல கூடிய முறைப்படி வழிபாடு செய்து வணங்கினாலே உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் உங்கள் வீட்டில் நிம்மதி பிறக்கும்.

- Advertisement -

சித்திரை மாதம் வாஸ்து நாள் வழிபாடு

நாளைய தினம் 23-4-2025 புதன்கிழமையோடு சேர்ந்து வாஸ்து நாள் வரவிருக்கிறது. இந்த நாளில் அதிகாலை வேலையிலேயே எழுந்து நீங்கள் செய்யக்கூடிய பூஜை தடைபடக்கூடாது என்று, மனதார பிரார்த்தனை செய்து கொண்டு நீங்கள் குளிக்கின்ற அந்த தண்ணீர் கங்கா தீர்த்தமாக மாறட்டும் என்று வேண்டி, கங்கா தாயே என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, குளித்து விட வேண்டும். இதுபோல குளித்துவிட்டு ஒரு பூஜையை செய்ய துவங்கினால், நாம் செய்யும் பூஜையில் வழிபாடுகளில் தடைகள் எதுவும் வராது. நாம் செய்யும் பூஜை முழு பலனையும் நமக்கு கொடுக்கும் இது முதல் விஷயம்.

வாஸ்து பகவானை வழிபாடு செய்வதற்கு செங்கல் மிக மிக முக்கியம். ஒரு புது செங்கல் வாங்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே நீங்கள் வாஸ்து பாகமான செங்கல் வைத்து பூஜை செய்கிறீர்கள் என்றால், அந்த பழைய செங்கலை பூஜைக்கு பயன்படுத்தலாம். ஒரு செங்கல்லை நன்றாக கழுவி அதன் மேலே மஞ்சள் தடவி, சிவப்பு நிற குங்குமத்தால் அந்த தடவிய மஞ்சளுக்கு மேலே ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, அந்த செங்கல்லை பூஜையறையில் ஒரு தட்டின் மேலோ அல்லது மனப்பலகையின் மீது வைத்து பூக்கள் போட்டு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த செங்கலுக்கு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். செங்கல் மேலேயே தீபம் ஏற்றி வைக்கலாம். பிறகு கொஞ்சம் உதிரி புஷ்பங்களை கையில் எடுத்து அந்த செங்கலுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்களுடைய வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதை வாஸ்து பகவானிடம் சொல்லி பூக்களால் அர்ச்சனை செய்து, பின் சொல்லக் கூடிய மந்திரத்தை 108 முறை சொல்லி இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வளவுதான் வழிபாடு. இந்த வழிபாட்டை நாளை காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். முடியாதவர்கள் நாளைய தினம் இரவு எட்டு மணிக்கு முன்பு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வாஸ்து பூஜையின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் வாஸ்து பகவானே நமோ நமஹ !
ஓம் கிரக லட்சுமியே நமோ நமஹ !

இவ்வளவுதான். இந்த இரண்டு வரி மந்திரத்தை சொன்னாலே போதும். உங்களது வீடு நிலம் சம்பந்தப்பட்ட வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். சொந்த வீட்டில் இருந்து கொண்டு அந்த வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தால் கூட, நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வாஸ்துவினால் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகி, வீட்டில் நிம்மதி பிறக்கும். இந்த ஒரு நாள் இந்த வழிபாட்டை மேற்கொண்ட பிறகு, மூன்று நாள் கழித்து செங்கலை சுத்தம் செய்து பத்திரமாக பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாடு

அடுத்த மாதம் வாஸ்து நாள் வரும் போது அந்த செங்கலை நீங்கள் மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம். கூடிய சீக்கிரம் புது வீடு கட்டி அந்த செங்கலை நீங்கள் கடகால் போடுவதற்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் சொந்த வீட்டில் இருந்தால் ஒரு வருடம் முழுவதும் வாஸ்து பகவானை அந்த செங்கலை வைத்து வழிபாடு செய்து விட்டு, உங்கள் வீட்டிற்குள்ளேயே மண் பாங்கான இடத்தில் அந்த செங்கல்லை புதைத்து வைத்துக் கொள்ளலாம். வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட, சக்தி வாய்ந்த பூஜை இது. நம்பிக்கை இருந்தால் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -