
நம் வீட்டில் காப்பர் பாட்டம் பொருத்திய பாத்திரங்கள் இருக்கிறது மற்றும் காப்பர் பொருட்கள் அதிகம் வைத்திருக்கிறோம் என்றால் அதை சுத்தம் செய்வதை பற்றி தெரிந்து இருக்கும். காப்பர் பாட்டம் வெசல்ஸ் மற்றும் காப்பர் பொருட்கள் சுத்தம் செய்ய பித்தளை பாத்திரங்களை ஜொலிக்க செய்யும் பீதாம்பரி கூட பயன்படுத்தி பார்த்ததுண்டு ஆனால் இரண்டு நாட்களுக்குள் மீண்டும் காப்பர் பொருட்கள் கருப்பாக மாறிவிடும். 2 வாரமானாலும் அப்படியே பளிச்சுன்னு புதுசாக இருக்க நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த ஒரு பொருளே போதும்! அது என்ன பொருள்? அதை வைத்து என்ன செய்யப் போகிறோம்? என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த வீட்டு குறிப்பு பதிவை நோக்கி பயணிப்போம்.
ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டம்ஸ் வாங்கி சாப்பிடுபவர்கள் அதில் கொடுக்கக் கூடிய சில்லி சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் போன்றவற்றை அவ்வளவாக பயன்படுத்தாமல் ஃப்ரிட்ஜில் சேகரித்து வைத்திருப்போம். இதன் எக்ஸ்பைரி காலம் பல சமயங்களில் முடிவடைந்து, வேண்டாம் என்று தூக்கித் தான் போடுவோம். அல்லது நாமே காசு கொடுத்து கூட இந்த பொருட்களை வாங்கி வைத்தாலும் வீணாக போய்விடும்.
அப்படி எக்ஸ்பைரி ஆன சில்லி சாஸ் உங்களிடம் இருந்தால் இனி தூக்கி போடாதீங்க! உங்க கிட்ட காப்பர் பாட்டம் பொருட்கள், காப்பர் பொருட்கள், செம்பு சம்பந்தப்பட்ட எந்த பொருட்கள் இருந்தாலும் அதை இந்த முறையில் நீங்கள் சுத்தம் செய்யலாம். பூஜை அறையில் கண்டிப்பாக செம்பு பாத்திரங்கள் வைத்திருப்போம். அதையெல்லாம் நீண்ட நாட்களுக்கு புதிதாக மின்ன செய்வதற்கு இந்த சில்லி சாஸ் ரொம்பவே உபயோகமாக இருக்கும்.
ரெட் சில்லி சாஸில் இருக்கும் மூலக்கூறுகள் காப்பர் பொருட்களை பளபளன்னு மின்ன செய்கிறது. காப்பர் வாட்டர் ஜக் போன்றவற்றை கூட இதை வைத்து சுத்தம் செய்யலாம். காப்பர் வாட்டர் ஜக் வைத்திருப்பவர்கள் அதை கண்டிப்பாக பயன்படுத்துங்கள். செம்பில் ஊறிய தண்ணீரை நாம் பருகுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக உடல் குளிர்ச்சி அடைகிறது. அந்த காலத்தில் எல்லாம் செம்பு பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்களில் தான் தண்ணீரை ஊற்றி வைப்பார்கள். இது இன்றும் பல இடங்களில் கடைபிடிக்க துவங்கி விட்டனர். நீங்களும் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிக்க ஆரம்பியுங்கள்.
சில்லி சாஸை நாட்பட்ட கருப்படைந்த செம்பு பாத்திரங்களில் கூட நன்கு எல்லா இடங்களிலும் படும்படி கைகளால் அல்லது பழைய டூத் பிரஷ் ஏதாவது வைத்து நன்கு தேய்த்து அப்படியே ஐந்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அஞ்சு நிமிடம் நன்கு ஊறி காய்ந்த பிறகு நீங்கள் டூத் பிரஷ் அல்லது கைகளால் லேசாக தேய்த்து சுத்தம் செய்தாலே போதும், அதில் இருக்கக்கூடிய கருப்புகள் அனைத்தும் கையில் ஒட்டிக்கொண்டு வந்துவிடும். அதன் பிறகு நீங்கள் சுத்தமான தண்ணீரால் கழுவி கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பாத்திரம் துலக்கும் லிக்விடை வீட்டிலேயே லிட்டர் கணக்கில் மிக எளிதாக இப்படி தயார் செய்யலாம். அதுவும் மிக குறைந்த விலையில்.
செம்பு பாத்திரங்களை கழுவும் பொழுது அரிசி கழுவிய தண்ணீரை வைத்து கழுவினால் ரொம்பவே பளிச்சுன்னு இருக்கும். கழுவிய பிறகு உடனே அதனை ஈரம் இல்லாமல் துடைத்து வெயிலில் 10 நிமிடம் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நீண்ட நாட்கள் ஆனாலும் அப்படியே புதிது போல இருக்கும். காப்பர் பாட்டம் மற்றும் காப்பர் பூஜை பொருட்கள், காப்பர் சம்பந்தப்பட்ட கிச்சன் பொருட்களை கூட இந்த முறையில் நீங்கள் எளிதாக சுத்தம் செய்து கொள்ளலாம்.