- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பாத்திரம் துலக்கும் லிக்விடை வீட்டிலேயே லிட்டர் கணக்கில் மிக எளிதாக இப்படி தயார் செய்யலாம். அதுவும்...

பாத்திரம் துலக்கும் லிக்விடை வீட்டிலேயே லிட்டர் கணக்கில் மிக எளிதாக இப்படி தயார் செய்யலாம். அதுவும் மிக குறைந்த விலையில்.

- Advertisement -

மாத மாதம் மளிகை பொருட்கள் வாங்கும்போது அதோடு நிச்சயம் பாத்திரம் விலக்க பயன்படும் லிக்விட் அல்லது ஏதாவது ஒரு சோப்பை நாம் சேர்த்து வாங்குவதுண்டு. அதுவும் சில நாட்களிலேயே தீர்ந்து விடும். இனிமே உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே மிக சுலபமாக லிட்டர் கணக்கில் நாமே பாத்திரம் துலக்க பயன்படும் லிக்விடை எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
RO வாட்டர் – 1 1/2 லிட்டர், சிட்ரிக் ஆசிட் – 25 கிராம், G.சால்ட் – 150 கிராம், வாஷிங் சோடா – 100 கிராம், AOS (ஆல்பா ஒளிபின் சல்போநேட்) – 50 மில்லி, SLES (சோடியம் லாரேத் சல்பேட்) – 700 மில்லி, லைம் சென்ட் – 10 மில்லி

- Advertisement -

பாத்திரம் விளக்க லிக்விட் செய்முறை:
என்னடா பொருட்களின் பெயர்கள் ஒன்றும் புரியவில்லையே என்று என்ன வேண்டாம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கும் அதன் விலையும் குறைவு தான். இப்போது செய்முறைக்கு வருவோம்.

முதலில் ஒரு சிறிய பக்கெட் அல்லது டஸ்ட்பின் மாதிரியான பிளாஸ்டிக் கூடையை எடுத்துக்கொண்டு அதில் ஒன்றரை லிட்டில் தண்ணீர் ஊற்றவேண்டும். பிறகு அதில் நாம் மேல குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக தண்ணீரில் சேர்த்து கலக்க வேண்டும். அனைத்தையும் ஒரே சமயத்தில் போட்டு கலக்கவேண்டாம்.

- Advertisement -

இதில் சிட்ரிக் ஆசிட் சேர்க்கும்போது மட்டும் நுரை பொங்கும். அந்த நுரை தணியும் வரை கலக்க வேண்டும். இதில் லைம் சென்ட் என்பது எலுமிச்சை வாசனை போன்ற நறுமணத்திற்காக மட்டுமே சேர்க்கப்படுகிறது. இந்த மனம் உங்களுக்கு தேவை இல்லை என்றால் இதை சேர்க்க வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: இந்த ஐடியா மட்டும் முன்னவே தெரிந்திருந்தால் ரேசன் பாமாயில் என்ன? அதோட கவர கூட வீணா தூக்கி கீழே போட்டு இருக்க மாட்டோமே அப்படின்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க.

இப்போது இந்த கலவையை குறைந்தது 12 மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். 12 மணி நேரம் கழித்து பார்த்தால் இந்த திரவம் நாம் கடையில் வாங்கும் லிக்விட் போலவே மாறி இருக்கும். இதை நாம் அப்படியே பயன்படுத்தலாம். இதை கொண்டு நாம் பாத்திரம் துலக்கும் போது பாத்திரம் பளிச்சென்று சுத்தமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

சற்று முன்