- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முக நிறத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி கிரீம்

- Advertisement -

உணவே மருந்து என்று கூறுவதன் மூலம் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை உணர்கிறோம். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வைத்து நம் முகத்தின் அழகையும் நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் இன்று கொத்தமல்லியை வைத்து கிரீம் செய்வதைப் பற்றி தான் அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கீரைகளை நாம் உண்ணும்பொழுது அதில் இருக்கும் சத்துக்களை எப்படி உடம்பு உத்தரிக்கிறதோ அதேபோல்தான் கீரைகளை நம் முகத்தில் தடவும் பொழுதும் நம் தோல் ஆனது அதன் சத்துக்களை ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் நம் உடலுக்கு ஏற்ற உணவுப் பொருட்களையே பயன்படுத்தி நம் முகத்தையும் தலையையும் பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கொத்தமல்லி கிரீம் செய்முறை
கொத்தமல்லியை சுத்தம் செய்து அதை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு இருக்கும் அளவிற்கு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் காய்ச்சாத 100 எம்எல் பசும்பாலை ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த சாரில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்த்து கட்டி விடாத அளவிற்கு நன்றாக கலக்க வேண்டும்.

கலந்த இந்த விழுதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிண்ட வேண்டும். கெட்டியான பிறகு அதை அப்படியே அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிட்டு ஆற விட வேண்டும். ஆரிய இந்த கலவையில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணையை ஊற்ற வேண்டும். பிறகு எட்டு சொட்டு டீ ட்ரி ஆயிலை விட வேண்டும். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும். கலந்த இந்த விழுதை தினமும் முகத்தை சுத்தம் செய்து விட்டு முகத்தில் தடவி 30 நிமிடம் அப்படியே வைத்திருந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

- Advertisement -

கொத்தமல்லியில் ஆன்ட்டி ஏஜிங் ப்ராப்பர்டி அதிகமாக இருப்பதால் முகத்தில் முதிர்ச்சி தன்மையை குறிக்க உதவுகிறது. பால் நம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கி முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பாதாம் எண்ணெயில் விட்டமின் சி மற்றும் இ இருப்பதால் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்கி முகத்தை மிருதுவாக வைக்க உதவுகிறது. டீ ட்ரி எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் முகம் மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் வறண்டு போகாமலும் பாதுகாக்க உதவுகிறது.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து நாம் உபயோகப்படுத்தும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் கரும்புள்ளிகளையும் மறையச் செய்கிறது. மேலும் முகநிறத்தை மேம்படுத்தவும் இது உதவி செய்கிறது. முகத்தை மிருதுவாகவும், அழகாகவும், வெண்மையாகவும், இளமையாகவும் தக்கவைத்துக் கொள்ள இந்த கிரீமை தினமும் நாம் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: பப்பாளி இலை சாறு அழகு குறிப்பு

கடையில் ஓசியாக கொடுக்கக்கூடிய கொத்தமல்லியை வீணாக்காமல் நம் முகத்தை அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -