ஒருவருக்கு கருமையான தலைமுடியும் சுருக்கம் இல்லாத முகமும் இருந்தால் அவர் இளமையாக இருக்கிறார் என்று அனைவரும் நினைப்பார்கள். அந்த வகையில் இளமைக்கும் தலைமுடி மற்றும் முகத்திற்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. முதுமை அடைந்து விட்டோம் என்பதற்கு முதல் அறிகுறியாக தான் தலைமுடியும் முகமும் திகழ்கிறது. அப்படிப்பட்ட முதுமையை விரட்டி அடித்து இளமையாகவே இருப்பதற்கு தலைமுடி மற்றும் முகத்தை என்றும் இளமையாக வைப்பதற்கு பப்பாளி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பப்பாளி இலையில் பப்பேன் என்னும் என்சைன் இருக்கிறது. இது தலையில் இருக்கக்கூடிய பொடுகை நீக்க உதவுகிறது. மேலும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அது மட்டுமல்லாமல் ஆன்டி ஃபங்கல் இன்பலேசன் இதில் இருப்பதால் எந்தவித தொற்றுகளும் ஏற்படாமல் முடி உதிர்வை தடுக்கிறது.
மன அழுத்தத்தாலும், கவலையாலும் முடி உதிர்வு பிரச்சினையை சந்திப்பவர்கள் இந்த சாரை தலையில் தேய்ப்பதன் மூலம் மன அழுத்தம் குறைந்து மனம் லேசாக மாறுகிறது. இதில் அதிக அளவு விட்டமின் இ இருப்பதால் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. மேலும் தோலில் ஏற்படக்கூடிய அரிப்பு, சொரி, சிரங்கு போன்றவற்றிற்கும் இது ஒரு மிகச்சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
முதலில் இரண்டு பப்பாளி இலைகளை எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கால் டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதிலிருந்து வடிகட்டியை பயன்படுத்தி சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தலைக்கு உபயோகப்படுத்துவதாக இருந்தால் ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தலைமுடிக்கு ஏற்ற அளவு எடுத்து அதை சூடு செய்து அடுப்பில் இருந்து இறக்கி விட்டு அதில் இந்த சாற்றை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். எந்த அளவிற்கு எண்ணெய் எடுக்கிறோமோ அந்த அளவுக்கு சாறை அதில் சேர்க்க வேண்டும். இதை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது தலையில் இருக்க வேண்டும். இதை தலையில் தேய்ப்பதன் மூலம் சளி பிடிக்கும் என்ற பயம் எதுவும் தேவையில்லை. அதனால் குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்த அதிகபட்சம் 2 மணி நேரம் வரை தலையில் வைத்து இருக்கலாம். பிறகு மிதமான ஷாம்புவை போட்டு தலையை அலசி விட வேண்டும். முகத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தால் இந்த பப்பாளி இலை சாறை அப்படியே நேரடியாக முகத்தில் தடவலாம் அல்லது வீட்டில் சுத்தமான கஸ்தூரி மஞ்சள் இருந்தால் அதில் இந்த சாற்றைக் கடந்து பேக் போலவும் செய்து உபயோகப்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய்
பல மருத்துவ குணம் கொண்ட பப்பாளி இலை சாறை நாம் மருந்தாக உட்கொள்வதைப் போல நம் முகத்திற்கும் தலைமுடிக்கும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்