- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

இந்த ஒரு மாவை வைத்து ஃபேஸ் பேக் போட்டால் ப்ளீச்சிங்காக பியூட்டி பார்லர் பக்கமே செல்ல மாட்டீர்கள்

- Advertisement -

மாதத்திற்கு ஒரு முறையாவது ப்ளீச்சிங் செய்தால்தான் முகம் பிரகாசமாக இருக்கும் என்று இன்றைய இளைய தலைமுறையினர் பியூட்டி பார்லர் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்கிறார்கள். சில பேர் வாரத்திற்கு ஒருமுறை கூட இவ்வாறு செய்வது உண்டு. அப்பொழுதுதான் சூரியனால் ஏற்பட்ட கருமை நிறம் மாறி பிரகாசமாக திகழும் என்று செய்வார்கள். இவ்வாறு செய்வதற்கு பதிலாக நம் வீட்டில் சமையலுக்கு உபயோகப்படுத்தும் இந்த ஒரு மாவை வைத்து ஃபேஸ் பேக் போட்டோம் என்றாலேயே ப்ளீச்சிங் செய்வதை விட பல மடங்கு பலனை பெற முடியும். அப்படிப்பட்ட மாவு எந்த மாவு என்றும் அதை எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்றும் தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருத்திட்டுக்கள், மங்குகள், சூரிய கதிர்களால் ஏற்பட்ட கருமை நிறம் போன்றவற்றை மாற்றி நம்முடைய இயற்கை நிறத்தை கொண்டு வருவதற்கும் கருமையாக இருப்பவர்கள் மேலும் தங்களுடைய நிறத்தை வெளிறச் செய்வதற்கும் உதவுவது தான் ப்ளீச்சிங். இந்த ப்ளீச்சிங் பியூட்டி பார்லர் சென்று செய்தோம் என்றால் அதில் பல ரசாயனங்கள் கலக்கப்பட்டு அதனால் நம் முகத்தின் இயற்கை பொலிவு மறைந்து விடும்.

- Advertisement -

அதற்கு மாறாக இயற்கையாக நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வீட்டிலேயே பிளீச்சிங் செய்வதன் மூலம் நம்முடைய சருமத்திற்கு எந்தவிதம் பாதிப்பும் ஏற்படாது. மேலும் பியூட்டி பார்லர் போய் பிளீச்சிங் செய்வதை விட பல மடங்கு அதிக பலனையும் அது தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு உதவக்கூடிய மிகவும் முக்கியமான பொருள்தான் சோள மாவு.

சோளமாவை நாம் முகத்தில் தடவினால் உடனடியாக முகத்தில் பிரகாசம் தென்படும். கருமை நிறம் மறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக அளவு ப்ளீச்சிங் ஏஜென்ட் இயற்கையிலேயே இருப்பதால் இதை நம் முகத்திற்கு நாம் எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். மேலும் இந்தச் சோளமாவை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று எந்த வித வித்தியாசமும் இன்றி பயன்படுத்தலாம்.

- Advertisement -

சோள மாவு ஃபேஸ் பேக்:
முகத்திற்கு மட்டும் நாம் சோளமாவை பயன்படுத்துவது என்றால் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்தால் மட்டும் போதும். கழுத்து கைகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கேற்றார் போல் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவு சோளமாவு எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். கடைசியாக இதனுடன் நாம் ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன் சேர்க்க வேண்டும். ஆலிவ் எண்ணெய் இல்லாதவர்கள் சாதாரண தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். அவ்வாறு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் பொழுது ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் அதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இதை நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் பதத்திற்கு வருவதற்கு தேவைப்பட்டால் பாலை சேர்த்துக் கொள்ளலாம். பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு இதை முகத்தில் நன்றாக தடவி 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நீங்களே உங்கள் முகத்தை பார்த்து அசந்து போகும் அளவிற்கு முகம் வெண்மையாக தெரியும்.

இதையும் படிக்கலாமே: அபாரமான முடி வளர்ச்சியை பெற வாரம் ஒரு முறை மட்டும் இப்படி செய்து வந்தால் போதும். அப்புறம் பாருங்க உங்க முடி வளர்ச்சியை உங்களால் தடுக்கவே முடியாமல் அதுவா வளர்ந்து கொண்டே செல்லும்.

நம் கண்ணையே நம்மால் நம்ப முடியாத அளவிற்கு நம் முகம் வெண்மையாக திகழ்வதற்கு இந்த ஒரு சோள மாவு ஃபேஸ் பேக்கே போதும்.

- Advertisement -