அபாரமான முடி வளர்ச்சியை பெற வாரம் ஒரு முறை மட்டும் இப்படி செய்து வந்தால் போதும். அப்புறம் பாருங்க உங்க முடி வளர்ச்சியை உங்களால் தடுக்கவே முடியாமல் அதுவா வளர்ந்து கொண்டே செல்லும்.

hair tips
- Advertisement -

முடி உதிர்வை தடுப்பது முடி வளர்ச்சி அதிகப்படுத்துவது போன்ற பிரச்சனைகள் எல்லாம் இப்பொழுது பெரும் அளவு பெருகி விட்டது. அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவு முதற் கொண்டு வாழும் சூழ்நிலை வரை எல்லாம் மாறி விட்டது. இது மட்டும் இன்றி நம்முடைய பழக்க வழக்கங்களும் இந்த முடி வளரும் தடுக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. முடி உதிர்வை தடுக்க முதலில் முடிக்கு ஆரோக்கியமானவற்றை கொடுக்க வேண்டும். இந்த அழகு குறிப்பு பதிவில் அப்படி ஒரு ஆரோக்கியமான முடி பராமரிப்பு எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

முடி வளர தேவையான எண்ணெய் தயாரிக்கும் முறை
இந்த எண்ணெய் தயாரிக்க நமக்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் நாலு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் செட்டில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் நாலு டேபிள் ஸ்பூன், அரிசி ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன், கருப்பு எள் ஒரு டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி.

- Advertisement -

இப்போது அடுப்பில் இரும்பு கடாய் வைத்து சூடான பிறகு முதலில் வெந்தயம் சேர்த்து லேசாக வறுபட்டதும் அரிசி, எள் இரண்டையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அடுத்து கறிவேப்பிலையை போட்டு அதன் ஈரம் வற்றும் வரை வதக்கிய பிறகு தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் இரண்டையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். இப்போது எண்ணையின் நிறம் நன்றாக மாறி இருக்கும்.

அடுப்பை அணைத்து விட்டு இது நன்றாக ஆறிய பிறகு ஒரு பௌலில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு நேரத்திற்கு ஒருவருக்கு தேய்க்க சரியாக இருக்கும். அதிகமாக தேவை எனில் இது போல தயார் செய்து பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து தேவைப்படும் போது எடுத்து டபுள் பாயில் முறையில் லேசாக சூடு படுத்திய பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது இந்த எண்ணையை நீங்கள் தலைக்கு தேய்த்து நன்றாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு இரண்டு மணி நேரம் வரை இது உங்கள் தலையில் அப்படியே ஊற வேண்டும். ஆகையால் இதை விடுமுறை நாட்களில் செய்தால் சரியாக தான் இருக்கும். இந்த எண்ணெய் தலையில் ஊறுவதால் நம் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் முடி வளர தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நாம் சேர்த்து இருக்கும் பொருளில் உள்ளது அவை அனைத்தும் முடிக்கு கிடைக்கும்.

இது தலையில் ஊறும் நேரத்திற்குள்ளாக ஒரு கண்டிஷனரை தயார் செய்து விடுவோம். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கல் அரிசியை சுத்தமாக கழுவி ஆற வைத்து விடுங்கள். அதில் ஒரு கப் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி இரண்டு மணி நேரம் வரை தட்டு போட்டு அப்படியே வைத்து விடுங்கள். இந்த நீரில் அரிசி ஊறி அதன் சத்துக்கள் முழுவதுமாக இறங்கி இருக்கும். அதை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தலைமுடியில் இரண்டு மணி நேரம் இந்த எண்ணெய் ஊறிய பிறகு மயில்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து தலை முடியை அலசிய பிறகு கடைசியாக இந்த அரிசி ஊற வைத்த தண்ணீரை தலைக்கு தேய்த்து அப்படியே விட்டு விடுங்கள் வேறு தண்ணீர் ஊற்றி அலச வேண்டாம் இது ஒரு நல்ல கண்டிஷனராக இருக்கும் முடி மிருதுவாக பார்க்க அழகாகவும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெற இந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதும். முடி உதிர்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும்.

வாரத்திற்கு ஒரு முறை இது போல நம்முடைய தலைமுடிக்கு கொஞ்சம் நேரம் செலவு செய்து இந்த முறையை பின்பற்றினால் போதும் முடி உதிர்வு பிரச்சனை என்பது இருக்கவே இருக்காது. அது மட்டும் இன்றி நல்ல முடி வளர்ச்சியுடன் இதில் சேர்த்து இருக்கும் பொருட்கள் எல்லாம் முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல உடல் குளுமைக்கும் பயன்படும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -