- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

கருந்திட்டுகளும் கருவளையமும் நீங்க

- Advertisement -

அன்றாடம் வெளியே சென்று வீட்டிற்கு வருபவர்களும் வீட்டிற்குள்ளே இருப்பவர்களும் பலவிதமான அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்படக்கூடிய பிரச்சனைகளில் பொதுவான ஒன்றாக திகழ்வதுதான் கண்களை சுற்றி இருக்க கூடிய கருவளையம் மற்றும் முகத்தில் ஆங்காங்கே வரக்கூடிய கருந்திட்டுகள் மேலும் வெயிலில் சென்று வருவதன் மூலம் ஏற்படக்கூடிய கருமை. இவற்றை நீக்குவதற்கு பலவிதமான பேஸ் பேக்குகளையும், பேஸ் க்ரீம்களையும் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தினாலே போதும். எப்பேர்ப்பட்ட கருமையும், கருத்திட்டும், கருவளையமும் முற்றிலும் நீங்கி பிரகாசமான முகத்தை பெற முடியும். அந்தப் பொருட்கள் என்ன அதை எப்படி பயன்படுத்துவது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

கருந்திட்டுகளும் கருவளையமும் நீங்க

ப்ளீச்சிங் ஏஜென்ட் இருக்கக்கூடிய எந்த பொருட்களாக இருந்தாலும் அதை நம்முடைய முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்கும் என்று கூறப்படுகிறது. இது அழகு நிலையம் வைத்திருக்கக்கூடிய அழகு நிபுணர்கள் கூறக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட ப்ளீச்சிங் ஏஜென்ட் அதிகம் இருக்கக்கூடிய பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் நம்முடைய முகம் என்றுமே பிரகாசமாக இருக்கும்.

- Advertisement -

இந்த உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசை மற்றும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் சேர்க்கக்கூடிய மிக முக்கியமான ஒரு பொருள்தான் கற்றாழை. என்றும் குமரி என்று கூறக்கூடிய கற்றாழையை நாம் உணவாக எடுத்துக் கொண்டாலும், முகத்திற்கு பயன்படுத்தினாலும், தலைமுடிக்கு பயன்படுத்தினாலும் அது மிகுந்த பலனை தரும். கற்றாழையை நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொழுது என்றும் இளமையாக இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த கற்றாழையில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு நாம் உருளைக்கிழங்கு சாறு எடுத்து இருக்கிறோமோ அதே அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இதை நம்முடைய முகத்தில் தடவ வேண்டும். முகத்தை முதலில் குளிர்ந்த நீரினால் நன்றாக சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு இதை ஒரு பஞ்சை பயன்படுத்தி நனைத்து நம்முடைய கண்களின் அடிப்பகுதியிலும், இமைகளின் மேலும் நன்றாக வட்ட வடிவில் தடவ வேண்டும். பிறகு நம்முடைய முகத்திலும் வாய்களை சுற்றி தடவ வேண்டும். மீதம் இருக்கக்கூடிய இந்த ஜூஸை நம்முடைய உடலில் எந்த இடத்தில் எல்லாம் கருமை இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை நன்றாக தடவி 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இது நன்றாக உணர்ந்துவிடும்.

பிறகு குளிர்ந்த நீரினால் மிருதுவான ஒரு பருத்தித் துண்டை வைத்து துடைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான். இப்படி நாம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நாள்பட்ட கருத்திட்டுகளும், கருவளையமும், கருமையும் படிப்படியாக நீங்க ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:முடி உதிர்வை தடுக்கும் ஹேர் பேக்
அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை அடிக்கடி நம்முடைய முகத்தில் நாம் தடவுவதன் மூலம் கருமையும் கருவளையமும், கருத்திட்டும் முற்றிலும் நீங்கி பிரகாசமான முகத்தை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -