- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி உதிர்வை தடுக்கும் ஹேர் பேக்

முடி உதிர்வை தடுக்கும் ஹேர் பேக்

- Advertisement -

தலைமுடி உதிர்தல் பிரச்சினை என்பது ஆண்களுக்கும் இருக்கிறது, பெண்களுக்கும் இருக்கிறது, வயதானவர்களுக்கும் இருக்கிறது, குழந்தை பருவத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும் இருக்கிறது. அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது முடி உதிர்வு தான். முடி உதிர்வது என்பது அன்றாடம் நிகழக்கூடிய ஒரு செயல்தான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகப்படியாக முடி உதிர்தல் ஏற்பட்டால் அதனால் பிரச்சனைகள் உண்டாகும். அதே போல் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளராமல் இருந்தாலும் நம்முடைய முடியின் அடர்த்தியானது குறைந்து மெலிய ஆரம்பிக்கும். இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக செய்யக்கூடிய ஒரு ஹேர் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முடி உதிர்த்தலுக்கு பலவிதமான காரணங்கள் இருக்கிறது. உடல் ரீதியாக இருக்கக்கூடிய பிரச்சினைகளாலும் முடி உதிர்தல் என்பது ஏற்படும். மனரீதியான பிரச்சினைகளுக்கும் முடி உதிர்தல் என்பது ஏற்படும். மேலும் முடி சத்து இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்தல் ஏற்படும். இப்படி பல காரணங்களை கூறிக் கொண்டே செல்லலாம். முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் நிற்க வேண்டும் என்றால் நாம் ஆரோக்கியமான உணவு முறைகளை கையாள வேண்டும். போதிய அளவு நீர் அருந்த வேண்டும், முடி உதிர்தல் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய எளிமையான ஹேர் பேக்கையும் நாம் பயன்படுத்தினோம் என்றால் விரைவிலேயே முடி உதிர்தல் பிரச்சினை என்பது நீங்கும்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை தயார் செய்வதற்கு நமக்கு சாதம் வடித்த கஞ்சி வேண்டும். இந்த கஞ்சியில் உப்பு சேர்த்திருக்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு டம்ளர் அளவிற்கு சாதம் வடித்த கஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகத்தை சேர்க்க வவேண்டும். இந்த கருஞ்சீரகத்தை நாம் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் என்பது நிற்பதோடு புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும்.

அடுத்ததாக இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு செம்பருத்தி பொடியை சேர்க்க வேண்டும். செம்பருத்தி என்பது இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான கண்டிஷனர். இதை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய தலைமுடி ஆரோக்கியமாகவும் பட்டுப்போலவும் வைத்திருக்கும். முடி உதிர்வை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும். இதை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அப்படியே மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த ஹேர் பேக்கில் விட்டமின் இ கேப்ஸ்யூல் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக படும் படி தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெறும். பிறகு ஷாம்பு பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரை பயன்படுத்தியே தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ நாம் செய்வதன் மூலம் தலைமுடி உதிர்தல் என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். அதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ ஆரம்பிக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் அந்த வழுக்கை விழக்கூடிய இடத்திலும் முடிகள் வளர்வதை காண முடியும்.

இதையும் படிக்கலாமே: தலைமுடி ஆரோக்கியமாக இருக்க

ஆரோக்கியமான உணவு முறைகளையும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவதோடு இந்த ஒரு ஹேர் பேக்கையும் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் தீரும். மேலும் அடர்த்தியான கருமையான முடியையும் நம்மால் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்