- Advertisement -
- Advertisement -

நம்முடைய முகத்தை மேலும் அழகாக காட்டுவதற்கு நம்முடைய உதடுகள் உதவுகின்றன. அதனால் தான் இன்றைய காலத்தில் பலரும் அந்த உதடுகளுக்கு உதட்டுச் சாயத்தை தடவிக் கொள்கிறார்கள். இந்த உதட்டுச் சாயத்தில் கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால் உதட்டின் இயற்கையான நிறம் மறைந்து உதடு பொலிவிழந்து போய்விடும். இயற்கையிலேயே வீட்டிலேயே தயாரிக்க கூடிய உதட்டுச் சாயங்களும் இருக்கின்றன. அதை பயன்படுத்துவதன் மூலம் அந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படாது.

உதட்டில் இறந்த செல்கள் அதிகம் இருப்பதாலும், உதட்டை முறையாக பராமரிக்காமல் விடுவதாலும் உதட்டின் இயற்கையான நிறம் மாறி கருமையான தோற்றத்தை கொடுக்கும். புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும் ஆண்களுக்கும் உதடுகள் கருப்பாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆண்களை பொறுத்தவரை புகைபிடித்தல் பழக்கம் இருப்பவர்கள் அதை முற்றிலும் நிறுத்தினாலே படிப்படியாக அவர்களுடைய உதட்டின் இயற்கை நிறம் வந்துவிடும். ஐந்தே ஐந்து நாட்கள் எந்த பொருளை பயன்படுத்தினால் உதடு இயற்கை நிறத்தை பெரும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நம்முடைய சமையல் அறையில் இருக்கக்கூடிய பொருளாக தான் இந்த பொருள் திகழ்கிறது. இந்த பொருள் தான் கசகசா. இது மசாலா பொருட்கள் வகைகளில் சேர்ந்தது. பார்ப்பதற்கு ரவையை போல் இருக்கும். இதை முதல் நாள் இரவே ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் தண்ணீர் சேர்க்காமல் முதலில் நன்றாக அரைத்து விட்டு பிறகு சிறிது சிறிதாக தேவைக்கேற்றவாறு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதை நாம் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அன்றன்றைக்கு தயார் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன் வேறு எதுவும் நாம் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை. அரைத்த இந்த கசகசா விழுதை நம்முடைய உதட்டில் தடவி ஆள்காட்டி விரலை வைத்து நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இப்படி மசாஜ் செய்வதன் மூலம் அது உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்கும். அதோடு மட்டுமல்லாமல் உதட்டிற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

- Advertisement -

இதனால் உதட்டின் கருமை நிறம் மாறும். இதை ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்து விட்டு பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு எப்போதும் போல் கழுவிக்கொள்ளலாம். இதை தினமும் காலையிலும், இரவிலும் என்று இரண்டு வேளை உபயோகப்படுத்த வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் உபயோகப்படுத்தினால் போதும். பிறகு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதட்டின் கருமை நிறம் மாறி இயற்கையான நிறம் வந்துவிடும். மேலும் இதில் இயற்கையிலேயே ஈரத்தன்மை இருப்பதால் உதடு வெடிப்பு போன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. இது நாம் உண்ணும் உணவு என்பதால் இதை தப்பித்தவறி நம் வாய்க்குள் போனாலும் எந்த வித பாதிப்பும் நமக்கு ஏற்படாது. இந்த கசகசாவை பொடியாக செய்து வைத்து ஐந்து நிமிடத்திற்கு முன்பாக லேசாக தண்ணீர் ஊற்றி ஊற வைத்தும் இதை உபயோகப்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்

இந்த ஒரே ஒரு பொருளை வைத்து மிகவும் எளிமையாக நம்முடைய உதட்டின் நிறத்தை நம்மால் மீட்டெடுக்க முடியும்.

- Advertisement -