- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்

- Advertisement -

முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும், சிறு வயதினருக்கும், முதியவர்களுக்கு என்று அனைத்து தரப்பினராலும் அனுபவிக்க கூடிய ஒரு பிரச்சினையாகவே திகழ்கிறது. இந்த முடி உதிர்வை தடுப்பதற்கு பல எண்ணெய்களும், ஹேர் மாஸ்குகளும் இருக்கின்றன. இதோடு மட்டுமல்லாமல் இதற்காக மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களும் பலர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சிரமப்படாமல் மிகவும் எளிமையான முறையில் இரண்டே இரண்டு பொருட்களை நாம் தேய்க்கும் எண்ணையுடன் சேர்த்து தேய்த்தாலே போதும். முடி உதிர்வை முதல் நாளிலேயே கண்கூடாக பார்க்க முடியும். அந்த அற்புதமான எண்ணெயை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது முதல் நிலை என்று தான் கூற வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் பொழுதும் ஒரு சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஏற்படத்தான் செய்யும். பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும் அவர்களின் தலைமுடியில் அந்த அளவிற்கு ஆரோக்கியம் இருக்காது. அப்படி தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு என்று சில பொருட்கள் இருக்கின்றன.

- Advertisement -

இந்த பொருட்களை நாம் உணவாக உண்ணும் பொழுது நம்முடைய உடலுக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியம் ஏற்படுகிறதோ அதே போல் தான் நாம் தலைக்கு தேய்க்கும் எண்ணையில் போடும் பொழுதும் அதன் சத்துக்கள் சிறிதும் குறையாமல் தலைமுடியை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும். அந்த பொருட்கள் தான் ஆளி விதை மற்றும் பாதாம்.

ஆளி விதையில் ஒமேகா 3 இருக்கிறது. இந்த ஆளி விதையை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது தலைமுடி உதிர்தல் பிரச்சினை முற்றிலும் நிற்கும். அதோடு மட்டுமல்லாமல் தலைமுடிக்கு சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தலைமுடியை வேகமாக வளர செய்யும். இந்த ஆளி விதையை நாம் உணவாக உட்கொள்வதோடு மட்டுமல்லாமல் இதிலிருந்து நாம் செல்லை தயார் செய்து நம் தலைக்கு தேய்ப்பதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

- Advertisement -

இந்த ஆளி விதையில் நாம் எண்ணெய் தயார் செய்யும் பொழுது அது நமக்கு பல மடங்கு அதிக நன்மையை தரும். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆளி விதையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் எட்டு பாதாம் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாமில் அதிக அளவு விட்டமின்கள் இருக்கின்றது ஒரு நாளைக்கு இரண்டு பாதாம் வீதம் நம் சாப்பிடும் போது நம் உடல் ஆரோக்கியம் பெறும்.

இதே போல் தான் நம் தலை முடிக்கு பயன்படுத்தும் போது தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். இப்பொழுது இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் பொடி செய்து கொள்ள வேண்டும். நைசாக பொடி செய்யக் கூடாது. கொரகொரப்பாக தான் பொடி செய்ய வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

தேங்காய் எண்ணெய் தேசாக சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொடியில் இருக்கும் சாறு எண்ணெயில் கலந்து எண்ணெயின் நிறம் மாறும் அளவிற்கு அடுப்பில் வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எண்ணையை ஆற வைக்க வேண்டும்.

எண்ணெய் ஆறியதும் அதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி ஒரு கண்ணாடி பாட்டில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் ஆரோக்கியமான ஆளி விதை எண்ணெய் தயாராகி விட்டது. இந்த எண்ணையை நாம் தினமும் தலைக்கு தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ளலாம் அல்லது தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தலையில் தடவி ஊறவைத்தும் தலைக்கு குளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: வெந்தய ஃபேஸ் க்ரீம்

எந்த வகையில் நாம் உபயோகப்படுத்தினாலும் இந்த எண்ணெய் நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முடி உதிர்தல் பிரச்சனையை முற்றிலுமாக நிறுத்தும். முடியை வேகமாக வளரச் செய்யும்.

சற்று முன்