- Advertisement -

செல்வம் சேர வியாழக்கிழமை வழிபாடு

- Advertisement -

யாருக்குத்தான் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கும். கோடீஸ்வரனாக இருப்பவர் கூட பணத்தை அதிகளவு சேர்க்க வேண்டும் என்றுதான் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார். பணவரவை நாம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்வோம். அந்த முயற்சிகளோடு வியாழக்கிழமை அன்று எந்த தெய்வத்தை நாம் வழிபட்டு வந்தால் நம்முடைய செல்வ நிலை உயரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வம் சேர வியாழக்கிழமை வழிபாடு

அனைத்து தெய்வங்களுக்கும் எதை வேண்டி நாம் வழிபாடு செய்கிறோமோ அதை தரக்கூடிய ஆற்றல் என்பது இருக்கிறது. இருப்பினும் இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த தெய்வத்தை தான் வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். இதோடு மட்டுமல்லாமல் கிரகங்களும் சாதகமாக இருந்தால்தான் நம்முடைய வாழ்வில் செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி நம்முடைய செல்வ செழிப்பை உயர்வதற்கு உதவக்கூடிய கிரகங்களாக குரு பகவானும், சுக்கிர பகவானும் திகழ்கிறார்கள். இவர்கள் மட்டும்தானா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். மற்ற பிற கிரகங்களும் இதில் ஒரு பங்காகவே திகழ்கின்றன. அதிகப்படியான பங்கு வகிக்கக் கூடியவர்கள் குரு பகவான், சுக்கிர பகவான்.

குரு பகவானுக்கும் சுக்கிர பகவானுக்கும் என்ன வித்தியாசம்? சுக்கிர பகவான் என்பவர் அன்றாடம் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவராக திகழ்கிறார். அதாவது இன்றைய தினம் எனக்கு 500 ரூபாய் இருந்தால் போதும் என்று நினைத்தால் அந்த 500 ரூபாயை தரக் கூடியவராக சுக்கிர பகவான் திகழ்கிறார். அப்பொழுது குருபகவான் என்பவர் பெரும் பணத்திற்கு அதிபதியாக திகழ்கிறார்.

- Advertisement -

அதாவது நமக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும். 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்றால் அது நமக்கு கிடைக்கிறது என்றால் நமக்கு குரு பகவானின் அருள் இருக்கிறது என்று அர்த்தம். ஆக குரு பகவானின் அருளை நாம் பெற்றால் தான் பெரும் பணத்தை நம்மால் பெற முடியும். அப்பொழுதுதான் செல்வ நிலையும் உயரும். அப்படிப்பட்ட குரு பகவானுக்குரிய கிழமையாக திகழ்வதுதான் வியாழக்கிழமை. வியாழக்கிழமை குரு பகவானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.

பொதுவாகவே சிவ ஆலயங்களில் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை குருவாக நினைத்து வழிபாடு செய்வார்கள். குருபகவானும் தக்ஷிணாமூர்த்தியும் வேறு வேறு என்றாலும் வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய தக்ஷிணாமூர்த்தியை வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கும் பொழுது ஒரு சூட்சுமமான செயலை நாம் செய்ய வேண்டும். அந்த செயல்தான் செல்வநிலை உயர்த்துவதற்கு உதவக்கூடியதாக திகழப்போகிறது.

- Advertisement -

அது வேறு ஒன்றுமே இல்லை நம் கையில் 101 ரூபாய் என்று காணிக்கையை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். வேறு பணத்தை எடுத்துச் செல்லக்கூடாதா என்றால் தாராளமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் இதை காணிக்கை என்று கையிலேயே வைத்துக்கொண்டு அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் மிகவும் குறிப்பாக தக்ஷிணாமூர்த்தியை சிறப்பாக வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த கோவில் உண்டியலில் கையில் வைத்திருக்கக் கூடிய காணிக்கையான 101 ரூபாயை செலுத்தி விட்டு மனதார வழிபட்டு வீட்டிற்கு வரவேண்டும். இப்படி ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாம் செய்து வந்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு உயரும்.

இதையும் படிக்கலாமே: செல்வநிலை உயர மஹாலக்ஷ்மி மந்திரம்

முழு நம்பிக்கையுடன் செய்யக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அதில் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -