- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இந்த விளக்கு எரியும் வீட்டில் சகல தெய்வங்களும் நிரந்தரமாக வந்து அமர்ந்து கொள்ளும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை. சகல தெய்வத்தையும் வசியம் செய்யும் சக்தி வாய்ந்த தீப பரிகாரம்.

- Advertisement -

நம்முடைய வழிபாட்டு பழக்கங்களில் முக்கியமான இடத்தை பெற்றது இந்த தீபம் ஏற்றும் முறை. எந்த ஒரு வீட்டில் காலையில் மாலையில் தொடர்ந்து தீபம் ஏறிகிறதோ அந்த வீடு ஒரு நாளும் வீணாய் போனதில்லை. எத்தகைய துன்பம் வந்தாலும் கூட அதையெல்லாம் தாண்டி முன்னுக்கு வரக் கூடிய ஆற்றல் இந்த தீபம் ஏற்றக் கூடிய வீட்டில் இருக்கும். அப்படி நாம் ஏற்றக் கூடிய தீபத்தை இன்னும் கொஞ்சம் சக்தி உடையதாகவும், ஆற்றல் உடையதாகவும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த தீபத்தை ஏற்றும் இடத்தில் சகல தெய்வங்களும் வந்து அமர்ந்து வாசம் செய்யும் என்று சொல்லப்படுகிறது. தீபம் ஏற்றும் எல்லா வீடுகளிலும் தெய்வ அனுகிரகம் நிச்சயமாக உண்டு. ஆனால் அதே தெய்வம் நிரந்தரமாக அந்த வீட்டில் இருக்கிறதா என்பது தான் கேள்வி. தெய்வங்கள் வந்து வந்து செல்லும் இடமாக வீடு இருப்பதை காட்டிலும் தெய்வங்கள் நிரந்தரமாகவே தங்கும் வீடாக மாறும் போது அந்த வீட்டில் சுபிட்சம் அதிகரிக்கும். அதற்கான ஒரு தீப பரிகார முறையை தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

சகல தெய்வங்களையும் வசியம் செய்யும் தீபம்
தெய்வங்களை வசியம் செய்ய முடியுமா என்றால் அது நிச்சயமாக முடியாது. வசியம் என்ற வார்த்தை நம் கட்டுக்குள் வைப்பது. தெய்வத்தை நம் கட்டுக்குள் வைத்திருப்பது என்பது முடியாது. ஆனால் தெய்வங்கள் ஒரு சில வாசனைக்கு வசியமாகி அந்த இடத்தில் தங்கி விடுவார்கள். அப்படியான ஒரு வாசனை மிக்க வசிய தீபத்தை தான் இப்போது நாம் ஏற்றப் போகிறோம்.

இந்த தீபத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் ஏற்ற தொடங்கலாம். தீபம் ஏற்றும் நாளில் குளித்து முடித்து சுத்தமாக காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஏற்றுங்கள். எந்த ஒரு தெய்வீக காரியத்தையும் இந்த நேரங்களில் செய்யும் போது அதற்கான பலன் பல மடங்காக கிடைக்கும். இந்த தீப முறைக்கு நமக்கு தேவையான பொருட்கள் புதிய மண் அகல் எப்போதும் இருப்பதை விட கொஞ்சம் பெரிய அகலாக வாங்கிக் கொள்ளுங்கள். அத்துடன் ஜவ்வாது, பச்சை கற்பூரம், குங்குமப் பூ. இவை மூன்றுடன் நல்லெண்ணெய் பஞ்சுத் திரி இவ்வளவு தான்.

- Advertisement -

இந்த தீபத்தை காலையில் எழுந்து குடித்து முடித்த பிறகு உங்கள் பூஜை அறையில் எப்பொழுதும் ஏற்றும் தீபமொன்று ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு புதிதாக வாங்கிய அகல் விளக்கை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு இதை ஒரு சிறிய தட்டின் மீது வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த அகலில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு அதில் கொஞ்சம் ஜவ்வாது, பச்சைக் கற்பூரம் ஒரே ஒரு பின்ச் குங்குமப்பூ சேர்த்த பிறகு இந்த தீபத்தை ஏற்றி வையுங்கள்.

இந்த தீபத்தை ஏற்றிய உடனே தீபத்தை குளிர வைக்க வேண்டாம். இந்த தீபம் தொடர்ந்து தெரிந்து கொண்டு இருந்தால் இன்னும் விசேஷம். அப்படி ஏற்றி வைக்க முடியாதவர்கள் சிறிது நேரம் ஏரிந்த பிறகு குளிர வைத்து விடுங்கள்.இந்த விளக்கில் உள்ள எண்ணெய் மற்ற பொருட்களை தினமும் மாற்ற முடிந்தால் மாற்றிக் கொள்ளலாம். இல்லையெனில் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் இவையெல்லாம் மாற்றி விளக்கை சுத்தம் செய்து மறுபடியும் புதிதாக போட்டு ஏற்றுங்கள். இதில் இருக்கும் இந்த ஜவ்வாது மற்ற பொருட்களின் மணத்திற்கு நீங்கள் வணங்கும் எந்த தெய்வமாக இருந்தாலும் சரி உங்கள் குலதெய்வமாக இருந்தாலும் சரி நிச்சயம் வந்து உங்களுக்கு அருளை தந்தே ஆக வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அமாவாசை அன்று இந்த பொருளை வாங்கி அம்மன் கோவிலுக்கு தானம் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் எதிரி தொல்லை வரவே வராது. எதிரிகளால் வரும் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியமும், உங்கள் குடும்பத்தை அசைக்க முடியாது.

இந்த தீப முறை வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் தினமும் இந்த ஒரு தீபத்தை வீட்டில் ஏற்றி உங்களுடைய இஷ்ட தெய்வங்களை உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வைத்து நல்ல முறையில் வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -