அமாவாசை அன்று இந்த பொருளை வாங்கி அம்மன் கோவிலுக்கு தானம் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் எதிரி தொல்லை வரவே வராது. எதிரிகளால் வரும் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியமும், உங்கள் குடும்பத்தை அசைக்க முடியாது.

amman6
- Advertisement -

வாழ்க்கையில் படிப்படியாக சீக்கிரமாக நல்ல முன்னேற்றத்தை அடையும்போது, நமக்கு கண்ணுக்குத் தெரிந்த சில எதிரிகள், கண்ணுக்கு தெரியாமல் சில எதிரிகள் வரத் தொடங்கி விடுவார்கள். எதிரியே இல்லாமல் வாழ்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆனால் எதிரியை நம்முடைய நண்பனாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு சில சூட்சமமான விஷயங்களை கையாண்டாலே போதும், எதிரி இல்லாத வாழ்க்கையை நம்மால் வாழ்ந்து விட முடியும். எதிரிகளை நம் வசப்படுத்த, எதிரிகளை வீழ்த்த எதிரியின் மூலம் வரக்கூடிய எதிர்மறை ஆற்றலை, கண் திருஷ்டியை அழிக்க ஆன்மீகத்தில் சொல்லப்பட்டு இருக்கும் எளிமையான ஒரு சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

எதிரி தொல்லை நீங்க அம்மன் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்:
மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் நீங்கள் பிரத்தியங்கிரா தேவி சன்னிதானம் இருக்கும் கோவில், அப்படி இல்லை என்றால் வாராகி சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில், அப்படி இல்லை என்றால் பைரவர் இருக்கக்கூடிய சிவன் கோவில், இதில் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும். பிரத்யங்கிரா தேவி கோவில், வாராஹி தேவி கோவில் இந்த இரண்டு தெய்வங்களுக்கு முன்னுரிமை. இவர்கள் இருவருமே வீட்டின் அருகில் இல்லை என்றால் நீங்கள் பைரவரை வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இந்த அமாவாசை நாளில் குறிப்பாக பிரத்தியங்கிரா தேவி கோவிலிலும், வாராகி அன்னை கோவிலிலும் யாகம் நடத்தப்படும். அந்த யாகத்திற்கு உங்களுடைய கையால் வெள்ளை எள்ளு, வெண்கடுகு, வரமிளகாயை வாங்கி கொடுக்க வேண்டும். அளவு என்பது உங்களுடைய விருப்பம். எவ்வளவு வாங்கி கொடுக்க முடியுமோ உங்களுடைய சக்திக்கு ஏற்ப வாங்கி இந்த பொருட்களை தானமாக கொடுத்து விடுங்கள்.

முக்கியமான விஷயம் அந்த ஹோமத்தில் நீங்கள் அமர்ந்து, கலந்து கொள்ள வேண்டும். அந்த புகையை நீங்கள் சுவாசிக்கும் போது உங்களை எதிர்மறை சக்திகளோ அல்லது எதிரிகளின் கண் திருஷ்டியோ பொறாமை குணமோ உங்களை தாக்காமல் இருக்கும். முடிந்தால் குடும்பத்தோடு இந்த யாகத்திற்கு செல்லலாம். ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

இது தவிர மாதம்தோறும் சஷ்டி திதி வரும். அந்த திதியில் முருகப்பெருமானை வழிபாடு செய்து விரதம் இருந்து வந்தால் உங்களுடைய குடும்பத்திற்கு எதிரியால் தொல்லை வராது. எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறிவிடுவார்கள். தினமும் முருகரை வழிபாடு செய்து, ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொன்னால் சத்ரு தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இதை மட்டும் செய்யவில்லை என்றால் நம் வீட்டு பூஜை அறையில் தெய்வங்கள் உயிரோட்டமாக இருக்காது. நம்முடைய வீட்டில் தெய்வ சக்தியையும் உணர முடியாது.

எதிரிகளை சத்ரு சம்ஹாரம் செய்த கடவுள் தான் முருகப்பெருமான். அவனை நினைக்கும் போது எதிரிகளை வீழ்த்துவது சுலபமாகிவிடும். அது மட்டும் இல்லாமல் அவன் வெற்றி கடவுள். உங்கள் கஷ்டங்களை எல்லாம் போக்கி உங்களுக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுக்கக்கூடிய சக்தியும் அவனுக்கு உண்டு. மேல் சொன்ன இந்த வழிபாடுகளை செய்து வந்தாலே போதும் வாழ்வில் மேலோங்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான ஆன்மீகம் வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -