
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க ஒரு விடிவு காலம் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இன்றைய தினம் அருமையான தினமாக அமைந்திருக்கிறது. வெள்ளிக்கிழமையோடு சேர்த்து தீபாவளி அமாவாசையும் வந்திருக்கிறது. பொதுவாக சாதாரண நாட்களை விட, அமாவாசை நாட்களுக்கு சக்தி அதிகம் என்று சொல்லுவார்கள். பிரபஞ்சத்திலிருந்து நேர்மறை ஆற்றல் பூமிக்கு அதிகமாக ஈர்க்கப்படக்கூடிய இந்த நாளில், நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் இரட்டிப்பு பலன் தரும்.
அந்த வகையில் உங்களுக்கு இருக்கும் கடன் சுமை உங்களை விட்டு நீங்க வேண்டும் என்று சொல்லி இந்த 2 பொருளை தலையை சுற்றி நெருப்பில் போடுங்கள். நிச்சயமாக கடன் கரைந்து வருமானம் பெருகுவதை கண்கூடாக காணலாம். அந்த இரண்டு பொருள் என்ன. அந்த பொருட்களை எப்படி நெருப்பில் போடுவது, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
படிகாரம், கிராம்பு அதுதான் அந்த 2 பொருள். ஒரு மண் அகல் விளக்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் கற்பூரம் ஏற்றி வைத்து விடுங்கள். அக்கினி பகவானின் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கடன் எல்லாம் இந்த தீயில் எரிந்து பொசுங்கி விட வேண்டும் என்று கையில் ஒரு சின்ன கட்டி படிகாரகல், 3 கிராம்பு வைத்து உங்கள் தலையை 3 முறை சுற்ற வேண்டும்.
கடன் எல்லாம் கருகிப் போக வேண்டும், கடன் எல்லாம் கருகிப் போக வேண்டும், என்று மூன்று முறை சொல்லி அந்த 2 பொருளையும், உங்கள் முன்னால் எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தில் போட்டு விடுங்கள். இவ்வளவு தான் பரிகாரம். அந்த நெருப்பில் படிகாரமும் கிராம்பும் எரிந்து சாம்பல் ஆன பின்பு, அந்த சாம்பலை எடுத்து வெளியில் கொட்டி விடவும்.
இந்த பரிகாரத்தை நாளைய தினம் எந்த நேரத்தில் செய்து. மாலை 6:00 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் செய்தாலும் தவறு கிடையாது. காரணம் நாளைய தினம் மாலை 6:00 மணிக்கு அமாவாசை திதியானது நிறைவடைகின்றது. மதியம் 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பான பலனைத் தரும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற
உங்கள் மீது பட்டிருக்கும் கண் திருஷ்டியின் காரணமாகத்தான் கடன் அதிகரிக்கிறது. அந்த கண் திருஷ்டி நீங்கும்போது கடன் சுமை தானாக குறையும். கண் திருஷ்டியை குறைக்க கூடிய வேலையை இந்த பரிகாரம் செய்யும். கடன் சுமையில் இருக்கக்கூடிய வேலையையும் இந்த பரிகாரம் செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பல வருடங்கள்.