ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் என்பது வேண்டும். எந்த அளவிற்கு குலதெய்வத்தின் அருள் இருக்கிறதோ அதே அளவிற்கு முன்னோர்களின் அருளும் இருக்க வேண்டும். இவர்கள் இருவரின் அருளும் இருந்தால் அவருடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு உகந்த நாளாக கருதப்படுவது தான் அமாவாசை. அதுவும் குறிப்பாக இந்த ஐப்பசி அமாவாசையில் நாம் செய்யக்கூடிய சில வழிமுறைகள் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் பரிபூரண அருளை பெற முடியும். அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்காக விரதம் இருந்து அன்றைய தினத்தில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கும் வழக்கம் பலருக்கும் இருந்து வருகிறது. இன்னும் சிலரோ சில குறிப்பிட்ட அமாவாசை தினத்தில் மட்டும் இந்த வழிபாட்டை செய்வார்கள். அனைத்து அமாவாசைக்கும் முன்னோர்களை எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ இல்லையோ இந்த ஐப்பசி அமாவாசை தினத்தில் முன்னோர்களின் வழிபாட்டை கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும்.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று தான் பித்ருக்கள் அவர்களுடைய உலகத்திற்கு செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது புரட்டாசி மாதம் முழுவதும் தங்களுடைய சந்ததியினரை பார்ப்பதற்காக பூலோகம் வந்தவர்கள் இந்த ஐப்பசி அமாவாசை தினத்தில் தான் மேலோகம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் அவர்களை வழிபட்டோம் என்றால் அவர்கள் நமக்கு பரிபூரண ஆசீர்வாதத்தை தருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இப்படி இவர்களுடைய பரிபூரணமான ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய தினத்தில் முன்னோர்களின் வழிபாட்டை மேற்கொள்வதோடு தங்களால் இயன்ற அளவு தான தர்மங்களை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பசுமாட்டிற்கு உணவளிப்பது, அன்னதானம் செய்வது, வஸ்திர தானம் செய்வது அதீத பலனை தரும் என்று கூறப்படுகிறது. பொதுவாக தான தர்மங்களை நாம் செய்யும் பொழுது நம்முடைய கர்மவினைகள் தீரும் என்று கூறுவார்கள்.
அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தில் நாம் தான தர்மம் செய்யும்பொழுது நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக இந்த ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் நாம் செய்யும்போது அதற்கு அதீத பலன் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் நம்மால் இயலும் பட்சத்தில் நம்முடைய குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற செய்யும்.
இதையும் படிக்கலாமே: மீளாத கடனில் இருந்து மீள மந்திரம்
இந்த எளிமையான வழிமுறையை ஐப்பசி அமாவாசை தினத்தன்று பின்பற்றுபவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெறும் அதனால் அவர்களின் வாழ்க்கையில் எதிர்ப்பாராத நன்மைகள் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.