- Advertisement -

இதனால் தானே நீங்களும் கடனாளியானீங்க! இந்த தவறுகளை எல்லாம் இனிமே செய்யவே செய்யாதீங்க!

கடனாளி ஆவதற்கு நாம் செய்யும் பெரிய பெரிய தவறுகள் தான் காரணமாக இருக்கும் என்று, நாம் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம். அதாவது பெரிய அளவில் கடன் வாங்கி, தொழில் துவங்கி நஷ்டம் ஏற்பட்டால் தான் அது கடன் என்று அர்த்தமில்லை. தினந்தோறும் நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட நம்மை கடனாளியாக மாற்றுவதற்கு காரணமாக இருந்து வருகிறது. இந்த தவறுகள் நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் எத்தனை பேர் இந்த தவறுகளை செய்யாமல் இருக்கின்றோம்? நாள் தவறாமல் செய்யும் இந்த தவறுகளை திருத்திக் கொள்வது என்பது சற்று கடினம் தான். ஆனால் திருத்தி கொண்டோமேயானால் வாழ்க்கையில் கடன் இல்லாமல் வாழலாம். கடன் இல்லாமல் வாழ்க்கையா? அதிர்ச்சியாக உள்ளதா? நீங்களும் கடன் இல்லாமல் வாழ என்ன செய்யலாம்? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

முதலில் நாம் எல்லோரிடத்திலும் இருக்கும் ஒரு தவறு இதுதான். அவசரத் தேவைக்காக 500, 1000 என்று அடுத்தவர்களிடம் கைநீட்டி சில்லறை கடன்களை வாங்குவது. நம்முடைய தேவைகளுக்கு பணம் இல்லாத நேரத்தில் சில்லறை கடன்களை வாங்கி செலவழிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு எவ்வளவு பணம் தேவையோ, அதை அனாவசிய செலவு செய்யாமல் நம் கையில் வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். ‘சில்லறை கடன் சீரழிக்கும்’ என்பதை மறந்துவிடாதீர்கள்.

- Advertisement -

ஒருவருக்கு 10,000, 20,000 என்று சின்ன சின்ன கடன்களும் இருக்கும். அதே நபருக்கு லட்சக்கணக்கிலும் கடன் இருக்கும். இப்படி ஒரு சூழ்நிலையில் இருப்பவர் என்ன செய்வார்? பெரிய கடனை அடைக்க பார்ப்பார். ஏனென்றால் அதற்கான வட்டி விகிதம் அதிகம் என்பதும் ஒரு காரணமாக இருக்கும். அந்த கவனத்தில், சின்ன சின்ன கடன்களை கவனிக்காமல் விட்டு விடுவார்கள். ஆனால் இது தவறு. நமக்கு இருக்கும் சிறிய கடன்களை முதலில் அடைத்து விட்டால், பெரிய கடனை சுலபமாக அடைந்து விடலாம் என்பதே உண்மை. ஏனென்றால் சின்ன சின்ன கடன்கள் நிறைய இடத்தில் வாங்கி இருப்போம். பெரிய கடன் என்பது ஒரு இடத்திலோ அல்லது இரண்டு இடத்திலோ இருக்கும். சின்ன கடன்களை எல்லாம் அடைத்து விட்டோம். மீதம் இந்த இரண்டு கடன்கள் மட்டும் தான் உள்ளது. என்ற மனப்பான்மையை நம் கடனை விரைவாக திருப்பிக்கொடுக்க நம்மைத் தூண்டும் என்பது தான் இதற்கு காரணம்.

இன்றைய சூழ்நிலையில் சிலபேருக்கு இந்த பழக்கம் அதிகமாகவே உள்ளது. நம் வீட்டுக் குழந்தைகளுக்கு செலவு செய்வது என்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் அந்தக் குழந்தைக்கு அப்போதுதான் ஒரு வயது ஆகியிருக்கும். அதற்காக மாதம் ஒரு புது துணி எடுப்பார்கள். அந்த வருடத்தில், அந்தத் துணியை ஒருமுறைதான் போட்டிருப்பார்கள். அடுத்தமுறை போடுவதற்குள் அந்த குழந்தை வளர்ந்து இருக்கும். பயன்படுத்தாமல் இருக்கும் அந்த துணிகள் வாங்கிய கணக்கை கொஞ்சம் திரும்பிப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் மயங்கியே விழுந்து விடுவீர்கள். இவையெல்லாம் உங்கள் பட்ஜெட்டில் துண்டு விழச் செய்யும். கடன் வாங்காமல் என்ன செய்வது? சற்று சிந்தித்தால், இவையெல்லாம் தேவையில்லாத எதற்கும் பிரயோஜனம் இல்லாத, ஆடம்பர அனாவசிய செலவு.

- Advertisement -

கையில் காசு கொஞ்சம் இருக்கின்றது என்பதால் ஹோட்டலுக்குப் போய் தினம்தோறும் வாய்க்கு ருசியாக உணவினை அருந்துவார்கள். இதற்காக ஆகும் செலவு ஒரு பக்கம் இருக்க, ஹோட்டலில் நன்றாக சாப்பிட்டு சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து இருக்கும். அதைக் குறைப்பதற்கு ஜிம்முக்கு போவார்கள். உடற்பயிற்சி செய்ய. உடற்பயிற்சி செய்ய செல்லும் இடத்திற்கு முன்பணமாக ஒரு தொகையையும் கொடுத்து இருப்பார்கள். ஒரு மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து செல்வார்கள். அதன் பின்பு அங்கு போவதற்கும் நேரமிருக்காது. இப்படி எவ்வளவு பணத்தை விரயமாக்கி இருப்பீர்கள், என்பதை உங்களால் சிந்திக்க முடிகிறதா? மாத கடைசியில் கையில் பணம் இருக்காது. பட்ஜெட் தட்டுபாடு. கடன் வாங்குவீர்கள்.

இப்போதெல்லாம் நவநாகரீகம் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டில் போய்தான் ஷாப்பிங் செய்கின்றோம். எதை வாங்க போகின்றோம்? எந்த அளவிற்கு வாங்கப் போகின்றோம்? எவ்வளவு பட்ஜெட்டில் வாங்க போகின்றோம்? இதெல்லாம் யோசித்தா அந்த கடைக்கு செல்கின்றோம்? வரையறையை கிடையாது. கையில் கிடைப்பதை எடுத்து பையில் போட்டுக் கொள்ள வேண்டும். பைக் கூட கிடையாது. ட்ராலி. தூக்க வேண்டிய அவசியமில்லை. இஷ்டத்திற்கு வாங்குவது! சூப்பர் மார்க்கெட்டில் இருந்து எடுத்து வந்த பாதி பொருட்கள் உபயோகப்படுத்தாமல் குப்பை தொட்டிக்கு தான் செல்லும். இந்த அனாவசிய செலவு தேவையா? அண்ணாச்சி கடையில மளிகை சாமான் வாங்கி பாருங்க. பட்ஜெட்ல பாதி சேமிக்கலாம்.

- Advertisement -

அடுத்தவர்களைப் பார்த்து சில பழக்க வழக்கங்களை நாமும் மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பழக்கம் பெண்களுக்கு அதிகமாக இருக்கும். அக்கம்பக்கத்தினர் வீட்டில் ஏதாவது ஒரு பொருள் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அந்தப் பொருளை நாம் வாங்கலாமா? வாங்கினால் நமக்கு என்ன பயன்? என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். அதேபோல் நம் வீட்டிற்கும் ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று சொல்லி, வாங்கி ஒரு மாதம் கூட முழுமையாகப் பயன்படுத்தாமல் அதை தூக்கி ஒரு ஓரமாக வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால், அதை பாதி விலைகாவது விற்று விடுங்கள். கடனில் பாதி தொகையாவது அடைக்கலாம்.

இந்தக் காலத்தில் எந்த பொருட்களை வேண்டுமென்றாலும், கையில் காசு இல்லை என்றால் கூட சுலபமாக வாங்கி விடலாம். EMI. கடைசியில் இந்த EMI தொகையை கட்ட சம்பள பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டு, வீட்டு செலவுக்கு கடன் வாங்குவோம். கஷ்டம் தெரியாமல் ஒரு பொருளை வாங்கி விட்டீர்கள். உங்களால் EMI தொகையை அடைக்க முடியவில்லை, என்றால் தயவு செய்து கடன் வாங்காதீர்கள். அந்த பொருளை விற்பதுதான் சரியான முடிவு.

உங்களிடம் சலுகைகள் என்று சொல்லி, யாராவது உங்கள் தலையில் எதையாவது கட்ட பார்த்தார்கள் என்றால் அதில் மயங்காதீர்கள். எனக்கு வேண்டாம். இல்லை. எனக்கு இது தேவைப்படாது. என்று ‘NO’ சொல்லி பழக கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்களின் மூளை சலவைக்கு நாம் அடிமையாகி விட்டோம் என்றால் நம்மை சுலபமாக ஏமாற்றி விடுவார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த அறிவுரைகளை உங்கள் வீட்டில் ‘சிக்கனமாக செலவு செய்யும் மனைவிமார்கள் ஆக இருந்தால், கணவன்மார்களுக்கும், சிக்கனமாக செலவு செய்யும் கணவன்மார்கள் ஆக இருந்தால், மனைவிமார்களுக்கும் இந்த அறிவுரைகளை கூறி இருப்பார்கள்.’ கட்டாயம் சொல்லியிருப்பாங்க. ஆனால் யார் கேட்டீங்க! வீட்டில் இருப்பவர்கள் சொன்னால் அது எடுபடாது. கண்ணுக்கு தெரியாத மூன்றாவது நபர் யாராவது சொன்னால், அது சரி! என்று தான் கூறுவீர்கள். வீட்டில் உள்ளவர்கள் சொல்வதையும் காதில் கேட்டு நடந்தால் கடனாளி ஆகாமல் இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே
நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும் இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் தலையெழுத்தை நீங்களே மாற்றி எழுதிக் கொள்ளலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have. Kadan prachanai theera tips. Kadan prachanai theera Tamil. Kadan theera Tamil. Kadan theera vali Tamil. Kadan theera valigal Tamil.

- Advertisement -