நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும் இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் தலையெழுத்தை நீங்களே மாற்றி எழுதிக் கொள்ளலாம்.

nattu marunthu kadai

நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக, மனநிறைவாக அமைய வேண்டுமா. என்ன செய்வது? நம் தொழில் சிறப்பாக நடக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும். அல்லது பாட்டன், பூட்டன் சேர்த்துவைத்த சொத்தாவது இருக்கவேண்டும். நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும். இதில் எல்லாம் அமைய இல்லை என்றாலும், ஏதாவது ஒன்றாவது நல்லபடியாக அமைய வேண்டுமா?. அப்போதுதான் நம் தலைவிதி நன்றாக இருக்க முடியும். ஆண்டவன் எழுதிய எழுத்தை நம்மால் அவ்வளவு சுலபமாக மாற்றி எழுதிவிட முடியுமா? கட்டாயம் முடியாது. என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இறைவழிபாட்டின் மூலமும், நம்முடைய விடாமுயற்சியின் மூலமும் நம் கஷ்டங்களை குறைத்துக் கொள்ளலாம். நம் வாழ்க்கையை விதியை முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும், ஓரளவு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பது தவறு ஒன்றும் இல்லை. அந்த வகையில் சித்தர்கள் நமக்கு கூறிவிட்டு சென்ற ஒரு எளிமையான சின்ன பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தின் மூலம் நம் மனதில் நினைத்ததை, இந்த பொருள் கொண்டு ஒரு வெள்ளைப் பேப்பரில் எழுதினால் அது விரைவாக நிறைவேறும் என்று பழமையான நூல்களில் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா? அது என்ன பொருள் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான் அது. வசம்பு. இந்த வசம்பிற்கு வசீகரிக்கும் தன்மையானது அதிகமாகவே உள்ளது. நீங்கள் எழுதியதை உங்கள் வசப்படும் தன்மை இந்த வசம்பிற்க்கு கட்டாயம் உண்டு என்று நம்பி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

முதலில் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வசம்பை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளவும். ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, அந்த தீபத்தில் இந்த வசம்பை சுட வேண்டும். வசம்பை சுட்டால் கரியாக மாறும். அந்த வசம்பு கறியை உங்கள் விரல்களில் தொட்டு ஒரு வெள்ளை பேப்பரில் உங்கள் மனதில் என்ன நினைத்து இருந்தாலும் அதை ஒருமுறை எழுதிக்கொள்ளுங்கள். அதாவது ‘நல்ல வேலை கிடைக்க வேண்டும். நல்ல பணம் சம்பாதிக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்கவேண்டும். தீராத நோய் தீர வேண்டும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் இவ்வளவு பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும்.’ உங்களது தலையெழுத்தை நீங்கள் எப்படி மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி எழுதிக் கொள்ளலாம். (உங்கள் தகுதிக்கு தகுந்த ஆசையாகத் தான் இருக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்றெல்லாம் எழுதி சோதனை செய்யக் கூடாது.) இப்படி உங்கள் மனதில் இருக்கும் ஏதாவது ஒரு நிறைவேறும் படியான, ஞாயமான கோரிக்கையை மட்டும் அதில் எழுதிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் கோரிக்கை எழுதப்பட்ட அந்த பேப்பரை நான்காக மடித்து ஒரு பச்சைநிற டப்பாவிற்குள் போட்டு மூடி வைக்க வேண்டும். அந்த பச்சை நிற டப்பாவில் முதலில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, நான்கு வசம்பு துண்டுகளைப் போட்டு அதன் பின்பு இந்த பேப்பரை அதன் மேல் வைத்து  விடுங்கள். உங்களது தொழில் நன்றாக முன்னேற வேண்டுமென்றால் இந்த டப்பாவை நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். மற்றபடி வேறு குறிக்கோள்கள் இருந்தால், இதை உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம். (உங்கள் கோரிக்கைகளை எழுதுவதற்கு வெள்ளை பேப்பரை விட பனை ஓலை கிடைத்தால் இன்னும் சிறப்பு. சித்தர்கள் இந்த பரிகாரத்தின் கூறியிருப்பது பனை ஓலை தான். இந்த காலத்திற்கு பனை ஓலை கிடைக்காது என்பதால் வெள்ளை பேப்பர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.)

தினம்தோறும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த டப்பாவின் முன்பு அமர்ந்து நீங்கள் என்ன கோரிக்கையை எழுதி வைத்துள்ளீர்களோ, அந்த கோரிக்கை நடக்க வேண்டும் என்று மனதார நினைத்து 15 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால் உங்களது கோரிக்கை விரைவில் நடக்க என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தும் உங்கள் கண்களுக்கு விரைவாக புலப்படும். உங்கள் கோரிக்கை வெற்றியடையும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேறி விடலாம். உங்கள் தலையெழுத்து மாற தானே செய்யும்.

இதுபோக வசம்பை சிகப்பு கயிறு கட்டி நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் தொங்கவிட்டால் மிகவும் நல்லது. நல்ல சக்தியை வசியம் செய்யும் வித்தை இந்த வசம்பிற்கு உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்றாலும், நாட்டு மருந்து கடைகளில் போய் ‘வசம்பு’ என்ற பெயரை கேட்டு வாங்க கூடாது. ‘உரைப்பான்’ அல்லது ‘பெயர் சொல்லாதது’ என்று சொல்லி வாங்குங்கள். வசம்பு என்ற பெயரை உச்சரித்து விட்டு பரிகாரம் செய்தால், பரிகாரம் பலிக்காது என்பதும் ஒரு ரகசியக் குறிப்பு தான்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டிலும் நகை சேர வேண்டுமா? தங்கத்தை சேர்க்கும் மஞ்சள் நிறப் பூ! அது என்ன பூ?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vasambu payangal in Tamil. Vasambu pariharam. vasambu maruthuva gunangal Tamil. Vasambu nanmaigal Tamil. Vasambu payangal Tamil.