- Advertisement -
வீட்டு குறிப்புகள்

சமையலறை சிங்க், பாத்ரூம் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டால் நொடியில் சிரமப்படாமல் அடைப்பை சுத்தம் செய்யும் மேஜிக் எப்படி?

- Advertisement -

நாம் அதிகம் தண்ணீர் பயன்படுத்தும் இடங்களாக இருப்பது சமையலறை சிங்க் மற்றும் பாத்ரூம் வடிகால்கள் ஆகும். இந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் அதிக அளவில் வெளியேறுகிறது. திடீரென ஏற்படும் அடைப்பு தண்ணீரை போக விடாமல் சில சமயங்களில் தடுத்து நிறுத்தி விடும். இது எரிசலை ஏற்படுத்தும். கொஞ்சம் கூட சிரமப்படாமல் நொடியில் இந்த அடைப்புகளை சரி செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பாத்ரூமில் இருக்கும் தண்ணீர் போகும் வடிகால் பாதை மற்றும் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சிங்க்கில் இருக்கும் வடிகால் பாதையில் சில சமயங்களில் கடுமையான அடைப்பு ஏற்பட்டு விடும். முடிகள் அல்லது உணவு துகள்கள், சோப்பு துண்டுகள் போன்றவை அடைத்து கொண்டு இருந்தால் அவ்வளவு எளிதாக பாத்ரூமில் தண்ணீர் போவது கிடையாது.

- Advertisement -

திடீரென ஏற்படும் இது போன்ற அடைப்புகளை சரி செய்வதற்கு பைப்புகளில் சென்று வேலை செய்ய தேவையில்லை. இந்த ஒரு சோடாவை தூவி விட்டால் போதும், நொடியில் அடைப்புகள் நீங்கி தண்ணீர் சரளமாக போக ஆரம்பித்து விடும். இதை காஸ்டிக் சோடா என்று கூறுவார்கள். இந்த காஸ்டிக் சோடா சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) என்று பொதுவான பெயர்களில் அழைக்கப்படுகிறது.

காஸ்டிக் சோடா மெழுகுவர்த்தி தயாரிப்பது, பயோடீசல், உரைபனி கண்ணாடி, சோப்பு தயாரித்தல் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது செல்ல பிராணிகள் மற்றும் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைக்க வேண்டிய ஒரு ரசாயன பொருளாகும். காஸ்டிக் சோடா பயன்படுத்தும் பொழுது கையுறைகள் அணிந்து பயன்படுத்துவது நல்லது. மேலும் இது நெடியை ஏற்படுத்தும் என்பதால் தொலைவில் வைத்து உபயோகியுங்கள்.

- Advertisement -

வடிகால்களில் ஏற்படும் அடைப்பை நீக்க, காஸ்டிக் சோடாவை கடைகளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது கெமிக்கல் ஷாப் அல்லது உரக்கடைகளில் கிடைக்கும். இதை வடிகால்களில் பயன்படுத்துவதற்கு ட்ரெய்ன் கிளீனர் என்று கேட்டு வாங்க வேண்டும். 100 ரூபாய் முதல் காஸ்டிக் சோடா விற்கப்படுகிறது. வடிகால்களில் இதை கொஞ்சம் போல் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி விட்டால் போதும், எவ்வளவு அடைப்புகள் இருந்தாலும் அதை அப்படியே இழுத்துக் கொண்டு போய் வெளியில் தள்ளி விடும். தண்ணீர் ஊற்றியதும் நுரைக்க ஆரம்பிக்கும். பின் பொங்கி அழுக்குகளை வெளியில் தள்ளும். உள்ளிருக்கும் பொருட்களை கரைத்து பஞ்சு போல ஆக்கி விடும் வீரியம் கொண்டது. இதனால் அடைப்புகள் நீங்கி சுலபமாக தண்ணீர் வெளியேறும். இதற்காக பைப்புகளை பிடித்து நோண்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரெயின் கிளீனர் பயன்படுத்தும் பொழுது தண்ணீர் முதலில் அதிகம் ஊற்றி விடக்கூடாது. சுடு தண்ணீர் ஊற்றியவுடன் ஒரு அரை மணி நேரம் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நீங்கள் தண்ணீரை தாராளமாக ஊற்றலாம். இதில் இருக்கும் வீரியம் கடினமான அடைப்புகளையும் சரி செய்யக்கூடிய அற்புதமான ஆற்றல் படைத்தது. கையில் ஏதாவது ஒரு உரை போல அணிந்து கொண்டு இதை பயன்படுத்துங்கள். குழந்தைகளிடமிருந்து எச்சரிக்கையாக பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளுங்கள். அடைப்பு இருக்கும் பொழுது மட்டுமல்லாமல், மாதம் ஒருமுறை இது போல ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு சுடு தண்ணீர் ஊற்றி விடுங்கள். எப்பொழுதும் உங்களுடைய வடிகால் பைப்புகள் சுத்தமாகவும், அடைப்புகள் இல்லாமலும் இருக்கும்.

- Advertisement -