
மாதம் பிறந்த உடன் அந்த மாதத்தில் நமக்கு எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு ஒவ்வொரு செலவிற்கும் தேவையான அளவு தொகையை ஒதுக்கி வைத்து குடும்பம் நடத்துபவர்கள் தான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள். அப்படி ஒவ்வொரு செலவிற்கும் இவ்வளவு தொகை என்று கணக்கு போட்டு வாழ்ந்தாலும் திடீரென்று ஏதாவது ஒரு முக்கியமான தேவைக்காக பணம் தேவைப்படும். அப்பொழுது கடனாக கேட்டால் கூட ஒரு சிலருக்கு பணம் கிடைக்காமல் போய்விடும். அந்த சூழ்நிலையில் மகாலட்சுமி தாயாருக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி எந்த பரிகாரத்தை செய்தால் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
திடீரென்று ஏற்படக்கூடிய செலவுகள் பல இருக்கின்றன. அதை நாம் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாது. அதனால்தான் அதை திடீர் செலவுகள் என்று கூறுகிறோம். என்னதான் பார்த்து பார்த்து செலவு செய்தாலும் ஒரு குடும்பத்தில் திடீரென்று செலவுகள் ஏற்படத்தான் செய்யும். அந்த செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு என்பது வரவேண்டும். அந்த பணவரவை தரக்கூடிய தெய்வமாக திகழ்பவள்தான் மகாலட்சுமி தாயார்.
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். மற்ற கிழமைகளில் செய்யக்கூடாது. இதற்கு முதலில் ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கல் உப்பை போட வேண்டும். இவ்வளவுதான் அளவு என்று இல்லை. உங்களுக்கு எவ்வளவு தோன்றுகிறதோ அவ்வளவு போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் காய்ச்சாத பசும்பால் ஐந்து சொட்டு வருவது போலோ அல்லது ஒரு டீஸ்பூன் ஊற்றிக் கொள்ளுங்கள். இதே போல் தயிரும் ஐந்து சொட்டு அல்லது ஒரு டீஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கோமியத்தை சேர்க்க வேண்டும். இன்றைய காலத்தில் கோமியம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதையும் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த தண்ணீரை வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து சுவர்களிலும் உள்ளிருந்து வெளியே வருவது போல் தெளித்துக் கொண்டே வரவேண்டும். இந்த தண்ணீர் தரையில் படக்கூடாது. முக்கியமாக நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கதவுகளின் பின்புறமும் இந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். இப்படி தெளித்து வீட்டிற்கு வெளியே வந்து வீட்டு நிலை வாசலிலும், தலைவாசல் கதவிற்கு பின்புறமும் நன்றாக தெளித்து விட வேண்டும்.
பிறகு நிலை வாசலில் இரண்டு புறங்களிலும் அகல விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சத்தில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு நேராக வீட்டு பூஜை அறைக்கு வந்து மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்து அதற்கு நடுவே ஒரு விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த விளக்கை சுற்றி மூன்றுக்கு மேற்பட்ட வாசனை நிறைந்த மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு மகாலட்சுமி தாயாரிடம் உங்களுடைய அவசர தேவை என்னவோ அந்த தேவையை முழுமனதோடு கூற வேண்டும். இப்படி கூறி வழிபாடு செய்ய வேண்டும். தங்களுக்கு மகாலட்சுமியின் மந்திரங்களோ ஸ்தோத்திரங்களோ தெரியும் என்னும் பட்சத்தில் அதையும் படிக்கலாம்.
இதையும் படிக்கலாமே:கஷ்டம் தீர செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு
இப்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாருக்கு தீபத்தை ஏற்றுவதோடு தீர்த்தத்தையும் வீட்டில் தெளித்து வர வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் திடீரென்று எந்த செலவுகளும் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவு நிறைவு செய்து கொள்கிறோம்.