- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டம் தீர செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு

கஷ்டம் தீர செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு

- Advertisement -

முருகனுக்கு உகந்த கிழமை செவ்வாய் கிழமை ஆகும். இந்த செவ்வாய் கிழமையில் முருகனை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு அல்லல் நீங்கும் என்பது ஐதீகம். “எனக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறாய் இறைவா..” என்று புலம்புபவர்களுக்கு, இந்த பரிகாரம் மிக சிறந்த பலனளிக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு இதை செய்ய துன்பமில்லா வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. அதை எப்படி செய்வது? என்பதை நாம் தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் முருகன் கோவில் மட்டும் தான் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. மற்ற படை வீடுகள் அனைத்தும் மலை மேல் உள்ளது. குன்றில்லா முருகன் கோவில் அதிசக்தி வாய்ந்தது. ஒருமுறை திருச்செந்தூர் சென்று வந்தாலே வந்த துன்பம் எல்லாம் நீங்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் 11 ரூபாயை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிலருக்கு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றாலே ஏதாவது ஒரு தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். கோயிலுக்கு சென்றாலும் அங்கு பிரச்சனைகள் வரும். போகின்ற வழியிலேயே அல்லது வருகின்ற வழியிலேயே சண்டைகளும், சச்சரவுகளோடும் நிம்மதி இல்லாமல் வீட்டிற்கு வரக்கூடும். இப்படி கோவிலுக்கு சென்றாலே பிரச்சனைகள் வருகிறது என்றால் உங்களை பிடித்த பீடை, தரித்திரம், கர்மா அனைத்தும் உங்களை விட்டு நீங்க போகிறது என்பது தான் அர்த்தம், எனவே இதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். கெட்ட கர்மா நீங்குவதற்காகவே கோவிலுக்கு போகும் போது இது போல கெட்டதெல்லாம் நமக்கு நடக்கும்.

எப்பொழுது உங்களுக்கு கோவிலுக்கு செல்ல முடிகிறதோ, அதுவரை நீங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் 11 ரூபாயை முடிந்து வைத்து முருகனிடம் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். அறுபடை வீடுகளில் ஒரு படை வீட்டிற்கு நீங்கள் செல்லும் பொழுது, முடிந்து வைத்த காணிக்கைகளை கொண்டு செல்லுங்கள். அங்குள்ள உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள். மலை கோவில்களில் அமைந்துள்ள அறுபடை வீடுகளை காட்டிலும், அதிக சக்தி வாய்ந்தது கடலோர பகுதியில் அமைந்துள்ள இந்த திருச்செந்தூர் முருகன் தான்.

- Advertisement -

திருச்செந்தூர் முருகனை நினைத்து மனதார வழிபடுபவர்களுக்கு கெட்டது நடக்கும் போதெல்லாம் இது போன்ற அறிகுறிகள் தென்படும். உங்களுக்கும் தென்படுகிறதா? என்று பாருங்கள். ஆபத்து நடக்கும் பொழுது அல்லது நமக்கு பிரச்சனைகள் தலைக்கு மேல் தலை விரித்தாடும் பொழுது சேவல், மயில், முருகன் படம் அல்லது யாமிருக்க பயமேன் என்கிற வாசகம், முருகனுடைய வேல், காவடி இவற்றில் ஏதாவது ஒன்று நம் கண் முன்னே வந்து, “நான் இருக்கிறேன் பயப்படாதே” என்று நினைவூட்டும் படியாக நம்முடனே பயணிக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஆரோக்கியம் அள்ளித்தரும் பன்னீர் திராட்சை ஜூஸ் இப்படி போடுங்கள்.

இது போன்று யாருக்காவது நடந்திருந்தால் அவர்களுக்கு முருகனுடைய பரிபூரண அருள் இருப்பதாகவே அர்த்தம். ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் மனதாரப் பிரார்த்தித்து 11 ரூபாயை முடிந்து வைப்பவர்களுக்கு எப்பொழுதும் கலியுக கண்கண்ட கடவுளான முருகப் பெருமான் உடன் இருந்து வழி நடத்துவார். உங்கள் பிரச்சனைகள் யாவையும் நொடியில் தீர்த்து, உங்களுக்கு நல்வழியை காட்டுவார். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள், நற்பலன் அடையுங்கள்.

சற்று முன்