
இயற்கையிலேயே நல்ல நிறமாக இருந்துவிட்டு வளர வளர வெயிலில் அலைவதால் முகமும், உடலும் சிலருக்கு கறுத்து விடும். அப்பொழுது அவர்களைப் பார்த்து அனைவரும் துக்கம் விசாரிப்பது போல் ஏன் இப்படி கறுத்து போயிட்ட என்று கேட்பார்கள். இவ்வாறு வெயிலினால் கறுத்து போனவர்கள் தங்களுடைய உண்மையான நிறத்தை மறுபடியும் பெறுவதற்கு பல கிரீம்களை உபயோகப்படுத்துவார்கள். அவ்வாறு செய்யாமல் வீட்டிலேயே ஒரு பேஸ்ட்டை தயார் செய்து உபயோகப்படுத்தினோம் என்றால் கருமை நீங்கி நம்முடைய இயற்கையான நிறம் வந்துவிடும். அந்த பேக்கை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய நாட்டின் வெப்பநிலைக்கு ஏற்ற தகுதியான நிறம் கருமைதான். அதை உணராமல் பலரும் தங்களுடைய கருமை நிறத்தை மாற்றி வெண்மையாவதற்கு பல முயற்சிகளை செய்கிறார்கள். சிலர் ஆரம்பத்தில் நல்ல வெண்மையாக இருந்து பிறகு வெயிலினால் கருத்திருந்தால் அவர்கள் இந்த பேக்கை பயன்படுத்தி தங்களுடைய இயற்கையான நிறத்தை மீட்டெடுக்க முடியும்.
இந்த பேக்கை நாம் முகத்திற்கு மட்டுமல்லாமல் உடல் முழுவதும் உபயோகப்படுத்தலாம். முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை போட வேண்டும். நாம் உபயோகிக்கும் விதத்திற்கு ஏற்றவாறு கடலைமாவின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கூறி இருப்பது முகத்திற்குரிய அளவு மட்டுமே. அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தயிரை சேர்க்க வேண்டும்.
பிறகு இதில் ஒரு டீஸ்பூன் அளவு சந்தனத்தூள், ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பன்னீர் இவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதம் வரும் வரை கலக்க வேண்டும். பேக் தயாராகிவிட்டது. இதை நாம் உபயோகப்படுத்துவதற்கு முன்னால் முகத்தில் ஏதேனும் மேக்கப் இருந்திருந்தால் அதை சுத்தமாக நீக்கிவிட்டு பிறகுதான் இதை உபயோகப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் முழு பலனையும் அடைய முடியும்.
வெயிலினால் நம்முடைய உடலில் எந்த பகுதியில் கருமை ஏற்பட்டிருக்கிறதோ அந்த பகுதியை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ்ட்டை அப்ளை செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: இந்த மாசம் முழுக்க நிறைய கல்யாண வரும். ஃபேஷியல் பண்ணாம முகம் பளிச்சுன்னு பிரகாசமா இருக்குறதுக்கு இந்த ஃபேஸ் பேக் போட்டு பாருங்க. கல்யாண பொண்ணு யாரு? அப்படிங்கற குழப்பமே வந்துடும்.
இந்த பேக்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற விதம் உபயோகித்து வர வெயிலினால் ஏற்பட்ட கடமைகள் அனைத்தும் நீங்கி இயற்கையான நிறத்தையும், தெளிவான முகத்தையும் பெற முடியும்.