ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னாலே பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். காரணம் அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தான். அதிலும் இந்த மாதம் அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும் மாதமாக இருப்பதால், இதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று பேசியலோ, பீச்சிங்கோ செய்து கொண்டு இருப்பார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே நாம் அருமையான ஒரு ஃபேஸ் பேக்கை தயார் செய்து போட்டோம் என்றால் முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
பார்ப்பவர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான் பெண்கள். அதனாலேயே தான் அவர்களுடைய ஆடை அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதோடு மட்டுமல்லாமல் மேக்கப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்காக நாம் செலவு செய்து பியூட்டி பார்லர் செல்லாமல் நம் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய பேஸ் பேக்கை உபயோகப்படுத்தினால் முகம் என்றுமே பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடன், இளமையாகவும் தெரியும்.
இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். வறண்ட சருமமாக இருப்பவர்கள் இதனுடன் பச்சை பசும் பாலை சேர்க்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் பன்னீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
முகத்தையும், கழுத்தையும் நன்றாக கழுவி விட்டு ஒரு டவலை வைத்து துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். இவை நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அவ்வளவுதான் உங்கள் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்து விடும்.
கடலை மாவு முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது. கஸ்தூரி மஞ்சள் முகத்தை பிரகாசமாக காட்ட உதவுகிறது. தேன் ஒரு சிறந்த ப்ளீச்சிங் ஏஜென்ட் அதனால் நம் முகத்தை நன்றாக ஆழமாக பீச் செய்ய உதவும். இந்த பேக்கை வாரத்திற்கு மூன்று நாள் என்ற வீதம் போட்டு வந்தால் முகம் எப்பொழுதும் பிரகாசமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: இந்த எண்ணெயை மட்டும் தலையில் தடவி வந்தால் நரைமுடியே வராது. உங்களுக்கு ஒன்னு ரெண்டு நரைமுடி ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்போதே இதை தலையில் தடவ ஆரம்பிச்சுடுங்க.
இந்த பேக்கை பயன்படுத்தி அனைவரும் வியக்கும் வண்ணம் முழு நிலவிற்கு இணையான பிரகாசத்தை பெற்று வாழலாம்.