- Advertisement -
பொது பலன்

உங்கள் ராசிப்படி எதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது தெரியுமா ?

மனிதன் உயிர் வாழ உணவு அவசியமாகிறது. மனிதர்களில் ஒவ்வொருவரின் உடல் தன்மை மற்றொருவரை போன்று இருப்பதில்லை. எனவே எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு மனிதனும் அவனது உடல் தன்மைக்கு ஏற்ற உணவுகளை ஒருவர் உண்ண வேண்டும். ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன இந்த ஒவ்வொரு ராசியினரும் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும், எத்தகைய உணவுகளை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அவற்றை பற்றி இங்கு விரிவாக காணலாம்.

மேஷம்:

- Advertisement -

நீங்கள் உஷ்ணம் மற்றும் ரத்தம் சம்பந்தமான வியாதிகளால் அவ்வப்போது பாதிப்படைய நேர்வதால் கைக்குத்தல் அரிசி, முட்டைகோஸ், பசலைக்கீரை, பூண்டு, வெங்காயம், வெள்ளிரிக்காய், பூசணிக்காய், வாழைப்பழங்கள், பல வகையான ,பழ ரசங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் அதிகளவு துரித உணவுகள் மற்றும் மது புகையிலை போன்ற போதை வஸ்துக்களை உண்பதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்:

- Advertisement -

வாழ்வை அதன் வழியில் அனுபவித்து நீங்கள் வாழ உங்கள் உணவில் தண்ணீர்விட்டான் கிழங்கு, பீட்ரூட் வெள்ளரிக்காய், பூசணிக்காய், வெங்காயம், காலிபிளவர், முள்ளங்கி, அன்னாசி பழம், போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும். ஜீரணிக்க முடியாத கொழுப்பு நிறைந்த உணவுகள், மாவு சத்து அதிகமுள்ள பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்:

- Advertisement -

காற்று சம்பந்தமான வாதம் போன்ற பிரச்சனைகளால் அதிகம் நீங்கள் அவதிப்பட நேரும் என்பதால் பிளம்ஸ், முட்டைகோஸ், பச்சை கீரை வகைகள், முள்ளங்கிகள், ஆப்பிள், கொய்யா, அன்னாசி போன்ற பழங்கள், பூண்டு, வெங்காயம், இஞ்சி, தயிர், அனைத்து வகையான காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கிழங்கு வகைகள்,அதீத இனிப்பு இருக்கும் உணவு பதார்த்தங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

கடகம்:

சிந்தனைத்திறன் அதிகம் கொண்ட நீங்கள் கோதுமை, முழு தானியங்கள், ஓட்ஸ், வெள்ளரிக்காய், கடற்பாசிகள் கொழுப்பில்லாத பால் பொருட்கள், பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளி போன்ற காய்கள் மற்றும் நாட்டு சர்க்கரையை தங்களின் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். உப்பு, எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது.

சிம்மம்:

நீங்களும் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான வியாதிகளால் அவதிப்பட நேர்வதால் அனைத்து வகையான சிறு தானியங்கள், அரிசி, பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகள், கிழங்கு வகைகள், பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகள், பசலைக்கீரை, ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும், காரமான உணவுவகைகளையும், பால் பொருட்களால் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நலம்.

கன்னி:

எதிலும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கும் உங்கள் மனம் மற்றும் உடல் நலமுடன் இருக்க முழு தானியங்கள், ஓட்ஸ், முளைவிட்ட பயறுகள், காய்கறி சூப்புகள், பால் கலக்காத தேநீர், கீரை வகைகள், சோளம், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு எலுமிச்சை போன்ற பழங்கள் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சாக்லேட், மாமிசம் போன்ற உணவு பொருட்களை மிகவும் குறைவாக உட்கொள்வது அல்லது முற்றிலும் தவிர்த்து விடுதல் நலம்.

துலாம்:

சுகமான வாழ்வை அனுபவிக்க நினைக்கும் உங்களின் உடலாரோக்கியத்திற்கு முழு தானியங்கள், கோதுமை, சிறு தானிய வகைகள், பால் கலப்பில்லாத உணவு வகைகள், சோளம், செர்ரி பழங்கள், பேரீச்சம் பழங்கள், பட்டாணிகள், கருப்பு திராட்சைகள், மற்றும் உலர்ந்த திராட்சைகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட பானங்கள், மது புகையிலை போன்ற போதை பொருட்கள், அதிகளவு இனிப்புகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்:

முன்கோபம் அதிகம் கொண்ட நீங்கள் முள்ளங்கி, வெந்தயம், தேங்காய், வெங்காயம், பீட்ரூட், பீன்ஸ், பாதாம் பிஸ்தா பருப்புகள், கருப்பு செர்ரி பழங்கள், வாழைப்பழம் இன்ன பிற பழவகைகளையும் உணவில் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ரொட்டி,. உப்பு மற்றும் காரம் அதிகம் கொண்ட உணவுகள் இனிப்புகள் போன்றவற்றை குறைவாக உண்பது நலம்.

தனுசு:

எதிலும் வேகத்தன்மை கொண்ட உங்களுக்கு அதீத உழைப்பால் உடல் வெப்பமடைந்து அதனால் அடிக்கடி துன்புறுவீர்கள். இதை தவிர்க்க நவ தானியங்கள், கைக்குத்தல் அரிசி, தோல் நீக்கப்படாத பருப்பு மற்றும் தானியங்கள், வெங்காயம், பூண்டு, கிழங்கு வகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்புகள், வெள்ளை சர்க்கரை, மது போன்ற வஸ்துக்களை தவிர்க்க வேண்டும்.

மகரம்:

சுகமான வாழ்வை அனுபவிக்க நினைக்கும் நீங்கள் முழு தானியங்கள், கோதுமை, சிறு தானிய வகைகள், பால் கலப்பில்லாத உணவு வகைகள், சோளம், செர்ரி பழங்கள், பேரீச்சம் பழங்கள், பட்டாணிகள், கருப்பு திராட்சைகள் மற்றும் உலர்ந்த திராட்சைகள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட பானங்கள், மது புகையிலை போன்ற போதை பொருட்கள் அதிகளவு இனிப்புகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

கும்பம்:

உங்களுக்கு வாதம் சம்பந்தமான நோய்கள் வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே உங்கள் உணவில் முட்டைகோஸ், சோயா பால், தக்காளி, பச்சை காய்கறிகள், பீட்ரூட், பாதம் பருப்புகள், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்கள், இஞ்சி, பூண்டு மற்றும் புரத சத்து அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரட் மற்றும் வடிகட்டிய வெள்ளை சர்க்கரை பொருட்களை தவிருப்பது நலம்.

மீனம்:

எதையும் பொறுத்துக்கொள்ளும் குணமுடைய நீங்கள் கோதுமை, கைக்குத்தல் அரிசி, பசலை கீரை, கடற்பாசி, பீன்ஸ், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழ வகைகள், பேரீச்சம் பழங்கள், பீச் பழங்கள், இயற்கை இனிப்பு பொருட்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். காபி, டீ, எண்ணெய் உணவுகள், ரொட்டி, வடிகட்டிய வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
எந்த சனி பெயர்ச்சியிலும் இந்த இரண்டு ராசிக்கு பாதிப்பே இருக்காது தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -