எந்த சனி பெயர்ச்சியிலும் இந்த இரண்டு ராசிக்கு பாதிப்பே இருக்காது தெரியுமா ?

Sani Astrology

நமது நாட்டில் முற்காலத்தில் பிறந்த தவ யோகிகளும், வானியல் சாத்திர நிபுணர்களும் இந்த நட்சத்திரங்களையும், கிரகங்களையும் நன்றாக ஆய்ந்து அந்த கோள்கள் மற்றும் விண்மீன்களின் நகர்வுகளை, ஒரு கணித சமன்பாட்டிற்குள் உட்படுத்தி உலகிற்கு வழங்கிய கலை தான் ஜோதிடமாகும். இந்த ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் “சனி கிரக பெயர்ச்சியை” பற்றிய சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sani Bagavan Astology

ஜோதிட கலை என்பது இந்த பூமியில் வாழும் மனிதர்கள் மீது, அவர்களின் வினை பயன்களுக்கு ஏற்ற வாறு தாக்கத்தை ஏற்படுத்தவல்ல நவரகிரகங்களை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றியும் விரிவாக கூறும் சாத்திரமாகும்.இந்த நவகிரகங்களில் ஒவ்வொன்றும் அதன் சுழற்சிக்கேற்ற வாறு ஒரு குறிப்பிட்ட கால அளவில், ஜாதக கட்டத்தில் குறிப்பிட்டுள்ள 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறது. குரு, ராகு-கேது மற்றும் சனிகிரக பெயர்ச்சிகள் ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு மனிதனின் ஆயுளுக்கு காரகனாகிய “சனி பகவான்” என்றழைக்கப்படும் சனி கிரக பெயர்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நவகோள்களில் பூமிக்கு மிக தொலைவில் இருப்பதும், மிக மெதுவான சுழற்சியையும் கொண்ட இந்த சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழிக்கிறது. அப்படி இந்த சனி கிரகம் பன்னிரண்டு ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகள் ஆகிறது. நவகோள்களிலேயே இந்த கிரக பெயர்வு தான் நீண்ட கால சுழற்சியை கொண்டதாகும். ஒரு மனிதனின் வாழ்வில் முதல் முப்பது ஆண்டுகளுக்குள் வரும் ஏழரை ஆண்டு சனிப்பெயர்ச்சி “மங்கு சனி” என்றும், இடையில் வரும் முப்பது ஆண்டு காலங்களுக்குள்ளாக வரும் ஏழரை நாட்டு சனி “பொங்கு சனி” என்றும் மூன்றாவது முப்பது ஆண்டு கால சுழற்சிக்குள் வரும் ஏழரை நாட்டு சனியை “மாரக சனி” என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

sani bagavaan

இந்த சனி கிரக பெயர்ச்சி ஜென்ம சனி, பாத சனி, அர்தாஷ்டம சனி, என ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றவாறு மாறும். இத்தகைய சனி பெயர்ச்சி காலங்களில் பெரும்பாலான ராசிக்காரர்கள் பல சோதனைகளையும், கஷ்டங்களையும் சந்திப்பார்கள். ஆனால் சனி பகவானின் சொந்த ராசிகளான “மகரம்” மற்றும் “கும்பம்” ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட சனி கிரக பெயர்ச்சியும் அவ்வளவு துன்பங்களை தராது. ஏனெனில் தன் சொந்த ஆதிபத்யம் மிகுந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த சனி பகவானே காக்கும் கடவுளாகிறார்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசிப்படி எதை வழிபட்டால் நன்மைகள் பெருகும் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை பெற எங்களோடு இணைந்திருங்கள்.